Kanmani serial: சவுண்டை நான் கல்யாணம் செய்துக்கறேன்... முகத்தில் சந்தோஷம்!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் ஒரு வழியாக சவுந்தர்யா கண்ணன் கல்யாணத்தை முடிவு செய்துடறாங்க. இதில் கோவமாக இருப்பது கிருஷ்ணவேணி அம்மாதான்.
தர்மதுரை ஐயா இறந்துவிட, அவரின் தம்பி மனைவி கிருஷ்ணவேணி அதிகாரம் வீட்டில் தூள் பறக்க ஆரம்பிக்குது. சவுந்தர்யா காதலிச்ச ஆகாஷை தனது மகள் வளர்மதிக்கு கல்யாணம் செய்து வைக்க நினைக்கறாங்க.
இதற்கு சம்மதம் தெரிவிக்காமல் ஆகாஷ் இருக்க, தங்கை வளர்மதி அக்கா சப்வுந்தர்யாவிடம், நீதான்க்கா இந்த கல்யாணத்துக்கு ஆகாஷை சம்மதிக்க வைக்கணும்னு ரொம்ப ஆசையா கேட்கிறாள்.

ஆகாஷ் சவுந்தர்யா
சவுந்தர்யா ஆகாஷை தனியாக சந்திச்சு, நாம் எல்லாம் படிச்சவங்க.நமக்கு எல்லா பக்குவமும் இருக்கணும் ஆகாஷ்.என் தங்கச்சி வளர்மதியை கல்யாணம் செய்துகிட்டா, என்னை பார்க்க நேரும்னுதானே நீ சங்கடப்படறே..இதிலென்ன சங்கோஜம் ஆகாஷ். நீயும் நானும் இதுவரைக்கும் நல்ல ஃபிரண்ட்ஸாத்தானே இருக்கோம். அப்படியே இருக்கலாம்..நீ வளர்மதியை கல்யாணம் செய்துக்கோ.அவளுக்கு உன்னை பிடிச்சு இருக்கு.உனக்கும் அவளை பிடிக்கலைன்னு சொல்ல முடியதுதானேன்னு சொல்றா.

சம்மதம் ஆகாஷ்
ஆகாஷ் வளர்மதியை கல்யாணம் செய்துக்க சம்மதிக்க, இரு வீட்டார் சேர்ந்து நிச்சயதார்த்தம் செய்யறாங்க. அப்போது சவுந்தர்யாவின் அக்காக்கள் ரெண்டு பேரும் சவுந்தர்யா கண்ணன் மாமா கல்யாணத்தை சித்தப்பா அப்பவே பேசி முடிச்சார். அதை ஏன் கிடப்பில் போட்டு இருக்கீங்கன்னு கேட்க, எந்த நேரத்துல எதை பேசறீங்க? சவுந்தர்யா கல்யாணப் பேச்சை எடுத்தாலே எதாவது தடங்கல் வந்து சவுந்தர்யா கல்யாணம் நின்னு போகுது. இப்போ அதை ஏன் பேசறீங்கன்னு அத்தைங்க ரெண்டு பேரும் கேட்கறாங்க.

கண்ணன் வாக்கு
அவன்தான் ஒருத்திக்கு வாக்கு குடுத்து வச்சு இருக்கானே.. அப்புறம் எப்படி சவுந்தர்யாவை கல்யாணம் செய்துக்குவேன்னு சொல்லுவான்னு மறுபடியும் ஒரு தங்கை பேச, அதெல்லாம் இப்போ இல்லை.இருங்க கண்ணன் பேசட்டும்னு சொல்றான் ஆகாஷ். இதுக்கு கிருஷ்ணவேணி அம்மா முகம் மாறிப் போகிறது. ஆகாஷ் அவங்க குடும்பவிஷயம் இதில் நீ எதுக்கு பேசறேன்னு ஆகாஷ் அம்மா சொல்றாங்க.

பேசட்டும் கண்ணன்
கண்ணன் பேசட்டும் அம்மா.. அவங்க கல்யாணம் முடிவானதுதானே..கண்ணன் என்னதான் சொல்றார்னு பார்ப்போமேன்னு ஆகாஷ் சொல்றான். கண்ணன் சவுந்தர்யவைப் பார்த்து சவுண்டு நீ சொல்றியான்னு கேட்கறான். என் விஷயத்தை நான் எப்போ மாமா முடிவு எடுத்து இருக்கேன். நீதானே எனக்கு நல்லது எதுன்னு முடிவு எடுப்பே..நீயே சொல்லுன்னு சொல்றா சவுந்தர்யா.
அப்போ நானே சொல்லிடறேன்னு சொன்ன கண்ணன் சபையினரைப்பார்த்து, சவுண்டை நான் கல்யாணம் செய்துக்கறேன்னு சொல்றான். இவங்க இருவர் முகத்தில் மட்டுமல்ல விஜயலட்சுமி அம்மா முகத்திலும் எத்தனை பூரிப்பு!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications