Kanmani Serial: பொன்னுமணி பாடல் காட்சியும் கண்மணியில் கண்டாச்சுங்க!
சென்னை: நவரச நாயகன் கார்த்திக் மறைந்த நடிகை சவுந்தர்யா நடிப்பில் 90 களில் வெளிவந்த பொன்னுமணி படக் காட்சியும் சன் டிவியின் கண்மணி சீரியலில் பார்த்தாச்சுங்க.
அழகு நடிகை சவுந்தர்யா தமிழில் முதன்முதல் அறிமுகம் ஆன படம் பொன்னுமணி.இந்த படத்தை இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் இயக்கி இருப்பார்.
பட்டணத்தில் படித்துவிட்டு வரும் சவுந்தர்யாவை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வீடு வரை கார்த்திக் உப்பு மூட்டை தூக்கிக் கொண்டே வருவார்.

கண்மணி சவுந்தர்யா
எந்த டாக்டர் வயிற்றில் கரு உருவான உடனே பெண்கள் வாக்கிங் போகணும்னு சொன்னாரோ தெரியலை... சின்னவர் கண்ணன் சவுண்டை கரு உருவாகி இருக்குன்னு டாக்டர் சொன்ன ஓரிரு நாட்களில் வாக்கிங் அழைச்சுட்டு போறார்.சவுண்டு கொஞ்ச தூரம் நடந்துட்டு சோர்ந்து உட்கார்ந்துடறா.

முடியலை மாமா
மாமா என்னால நடக்க முடியலை மாமான்னு சொல்லிட்டு உட்கார்ந்துக்கறா. உன்கூட பேசிக்கிட்டே இவ்ளோ தூரம் நடந்து வந்ததே பெரிய விஷயம்னு சொல்றா. சரி விடு சவுண்டு நான் தூக்கிகிட்டு போறேன்னு சொல்றான். சும்மா இரு மாமா உன்னால என்ன ஒரு பத்தடி இருபது அடி தூக்க முடியும்.வீடு வரைக்குமா தூக்கிகிட்டு போக முடியுமான்னு கேட்கறா.

உன் மாமனை
என்ன சவுண்டு உன் மாமனை இப்படித் தப்புக் கனக்குப் போட்டுட்ட. வீடு வரைக்கும் தூக்கிக்கிட்டே போறேன் பாருன்னு அலாக்கா குழந்தையை கையிலேந்தித் தூக்குவது போல கை கால் முளைத்த சிறகா நீ என்று தூக்கிகிட்டு நடக்கறான்.

ஊரே பார்க்குது
ஊரே வேடிக்கைப் பார்க்க, பள்ளிக் குழந்தைகள் கூட ஒரு நொடி நின்று திரும்பிப் பார்க்க சவுண்டைத் தூக்கிகிட்டு நடந்தே வர்றான். வீட்டு நடு ஹாலில் வந்து இறக்கிவிட..என்னடா கண்ணா சவுண்டை எதுக்கு இப்படித் தூக்கிகிட்டு வர்றேன்னு அக்கா கேட்கறாங்க.நடக்கலாம்னு அழைச்சுட்டு போனேன்...சவுண்டால நடக்க முடியலைன்னு சொல்லுச்சு. அதான் தூக்கிகிட்டே வந்துட்டேன்னு சொல்ல..
நாலு பேர் பார்த்து இருப்பங்களேடான்னு அக்கா சொல்றாங்க.. நாலு பேரா..நாற்பது பேர் நானூறு பேர் பார்த்து இருப்பாங்கம்மா.. இறக்கி விடுன்னு சொன்னா மாமா கேட்கலைன்னு சொல்றா சவுண்டு.
சினிமாவில்.. சீரியலில் இதெல்லாம் சகஜம்ங்க..நிஜத்தில் இப்படி தூக்கிகிட்டு நடக்க முடியுமா?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications