Kanmani Serial: மனசில் கண்ணனை வச்சுக்கிட்டு மூடி மறைக்கிறியேம்மா!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் சவுந்தர்யா மனம் முழுக்க கண்ணன் மாமாவை வச்சுக்கிட்டு,ரொம்ப நியாயமா நடந்துகொள்கிற மாதிரி, கண்ணன் மாமாவுக்கு முத்துவைத்தான் கல்யாணம் செய்து வைக்கணும் என்று கூறுகிறாள்.
கண்ணனுக்கும் சவுந்தர்யாவுக்கும் கல்யாணம் நடக்க கூடாது என்று தர்மராஜின் தங்கைகள் பேசும்போது, சவுந்தர்யா எங்கே போனாள் என்று தெரியவில்லை. இருவருக்கும்தான் கல்யாணம் என்று உறுதி செய்த சித்தப்பா எங்கே போனார் என்று தெரியவில்லை.
என்னதான் கணவன் இறந்து இருக்கட்டுமே, வீட்டில் தன் மகள், தன் தம்பி பற்றிய பிரச்சனை நடந்துகொண்டு இருக்கும்போது விஜயலட்சுமி அம்மா பேசாமல் மவுனமாக இருப்பது ஏன்? அப்படி இருக்கணும் என்று யாரும் கட்டளை போடவில்லையே.

சஞ்சீவ் கண்ணனாக
கண்ணனாக நடிகர் சஞ்சீவ் நடித்து சீரியலுக்கு பெரும் பலம் சேர்த்து இருக்கார். அலட்டல் இல்லாத நடிப்பு, முக பாவனையில் நடிப்பது என்று மனிதர் தன்னால் முடிந்ததை முழுதாக அர்ப்பணித்து இருக்கிறார். அக்காவை விதவையாக பார்க்க முடியாமல் ஒரு தம்பியாக நின்று முத்து முத்தாக கண்ணீர் வடிப்பது மனதை உருக்குவதாக இருக்கிறது. அப்படித்தான் வசனம் பேசி அழும்போதும் அலட்டல் இல்லாமல் நடிக்கிறார்.

ஒண்ட வந்த கூட்டம்
கணவன் இறந்த நிலையில், அண்ணனின் ஆசை மச்சானை ஒண்ட வந்த கூட்டம் என்று சந்தடி சாக்காக அண்ணியையும் நாத்தனார் சேர்ந்து திட்ட, இதை கேட்டுக் கொண்டு கண்ணன் சும்மா இருப்பது சரியாக இல்லை. அவர் வாயைத் திறந்து வசனம் பேசி ரொம்ப நாட்களாச்சு. சவுந்தர்யாவோடு கல்யாணம் என்றாலும் சும்மா இருக்கார்.சவுந்தர்யாவோடு கல்யாணம் இல்லை என்றாலும் சும்மா இருக்கார்.

மாமா தர்மராஜ்
தர்மராஜ் மாமா இறந்துவிட்ட நிலையில், அக்காவுக்கு பாதுகாப்பு, அக்காவின் மகள் சவுந்தர்யாவின் கல்யாணம் ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது எனும்போது அங்கு யாருக்கு, எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ அதை செய்வதுதானே தர்மம். இவைகளை கதைக்குழு மறந்து போனது எதனால்? கதையை வளர்க்கவா?

கண்ணன் மாமா
சவுந்தர்யாவை அம்மா,அக்காக்கள் அழைத்து பேச, அவள் பெரிய மனுஷி மாதிரி, இதென்ன புதுசா பேசறீங்க.மாமா முத்துச்செல்வியை கட்டிக்கறதுதான் சரி. சித்தப்பா சபையில் சொல்லிட்டார்டி என்று அக்காக்கள் சொல்ல,என்ன பொல்லாத ஐநா சபைன்னு கிண்டல் அடிக்கறா.
முத்துச்செல்வி இப்போதைக்கு வேறு இடம் போயாச்சு.இவள் எதற்கு மனசில் இருப்பதை மறைத்து, கண்ணன் மாமாவை முத்துச்செல்விக்கு கட்டி வைக்க நியாயம் பேசுகிறாள்?
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications