Kanmani Serial: தலையும் இல்லாம வாலும் புரியாம முத்துச்செல்வி கதை.. ஏன் இப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: படத்துல கூட கதை நல்லா போயிகிட்டு இருக்கும்பிபோது இடைச் செருகலாக பாட்டு சண்டை என்று நாம் விரும்பாத ஏதாவது ஒன்றை நுழைத்து விடுவார்கள்.

சன் டிவியின் கண்மணி சீரியலில் அப்படித்தான் ஆகிவிட்டது. முதலில் மெயின் கதாபாத்திரமாக தலைக்காட்டிக் கொண்டு இருந்த முத்துச்செல்வி, இப்போது இடைச் செருகல் ஆகி இருக்கிறாள்.

சில காட்சிகளில் தலையும் இல்லாமல் வாலும் புரியாமல் அவ்வப்போது முத்துச்செல்வியை காண்பிப்பது கொஞ்சம் எரிச்சலாக கூட இருக்கிறது.

சின்னவர் முத்துச்செல்வி

சின்னவர் முத்துச்செல்வி

சின்னவரே சின்னவரே என்று கண்ணனை சுற்றி வந்த முத்துச்செல்வி, சவுந்தர்யாவுக்கும், கண்ணனுக்கும்தான் கல்யாணம் நடக்கணும் என்று விட்டுக் கொடுத்து கெட்டபெயர் வாங்கிக் கொண்டு அப்பா தங்கையுடன் ஊரைவிட்டு கிளம்பி விடுகிறாள். போன இடத்தில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் தஞ்சம் கிடைக்கிறது.

பசுத்தோல் போர்த்திய புலி

பசுத்தோல் போர்த்திய புலி

பசுத்தோல் போர்த்திய புலி மாதிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கேரக்டர்.இருந்தாலும் முத்துச் செல்வியின் அப்பா சோறு கண்ட இடம் சொர்க்கம், வேலை சொன்னால் செய்வேன் என்பது போலவே இன்னும் பொறுப்பு இல்லாமல் இருக்கார். இன்ஸ்பெக்டர் முத்துச்செல்விக்கு பாலில் என்னவோ கலந்து மயக்கத்தை வரவழைச்சு ஏதோ சான்றிதழ் வேணும்னு கேட்கறான்.

என்ன சான்றிதழ்

என்ன சான்றிதழ்

முத்துச்செல்வியை எதுக்கு மயக்கம் போட்டு விழ வச்சான். எப்படி அவள் ஆஸ்பத்திரியில் இருந்து சந்தேகம் இல்லாமல் வெளியே வந்தாள் என்று எதுவும் காண்பிக்கவில்லை. இன்னும் இன்ஸ்பெக்டர் வீட்டில் அடைக்கலம் புகுந்து இருப்பது ஏன் என்று பல கேள்விகள் தொக்கி நிக்குது.

இன்ஸ்பெக்டரிடம் தப்பித்து

இன்ஸ்பெக்டரிடம் தப்பித்து

திடீரென்று முத்துச்செல்விக்கு சின்னவருக்கு கத்திக் குத்து ஆபத்து வந்து, அவர் ரத்தத்துடன் நிற்பது போல கனவு வருது. கடவுளே சின்னவரும் சவுந்தர்யா அம்மாவும் நல்லா இருக்கணும். அவங்களுக்கு எந்த ஆபத்தும் வரக் கூடாதுன்னு திடீர்னு எங்கிருந்தோ முளைச்சு வந்தவ மாதிரி கோயிலுக்கு வந்து முட்டி போட்டு வேண்டுதலை நிறைவேத்திக்கிட்டு இருக்கா.

சும்மா காமிக்கணுமேன்னு எதையாவது காண்பிப்பதும் சீரியல்களில் பொழுது போக்காக ஆகிவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+