Kanmani Serial: சஞ்சீவ் ஸ்டார் காஸ்ட்..,பூர்ணிமா பாக்கியராஜ்.. கண்மணி ஓகே!
சென்னை: என்னதான் வாய்ப்பு சீக்கிரம் கிடைத்து விட்டாலும் அதை தக்க வைத்துக் கொள்ள திறமை தேவைப்படுகிறது. அந்த வகையில் நடிகர் சஞ்சீவ் சீரியல் காஸ்ட் நடிகர் என்று சொல்லலாம்.
சன் டிவியின் கண்மணி சீரியலில் இவருக்கு பொருத்தமான நல்ல கதாபாத்திரம். இந்த சீரியல் சன் டிவியில் சரியான நேரத்தில் ஒளிபரப்பாவதால் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சின்னவர் சின்னவர் என்று சஞ்சீவ் கதாபாத்திரமான கண்ணன் கதாபாத்திரம் அவ்வப்போது சின்னக் கவுண்டர் விஜயகாந்தை நினைவு படுத்தினாலும் குறை ஒன்றும் இல்லை.

நடிகை பூர்ணிமா பாக்கியராஜ்
நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் ஆரம்பத்தில் சொந்த குரலில் பேசி நடித்து வந்தது எடுபடாமல் இருந்தாலும், இப்போது டப்பிங் வாய்ஸில் கதாபாத்திரம் ஜொலிக்கிறது.சவுந்தர்யாவுக்கு அம்மாவாகவும், கண்ணனுக்கு அக்காவாகவும் நடிப்பில் ஸ்க்கோர் பண்ணுகிறார். தவறாமல் முக்கியமான காட்சிகளில் எஸ்கேப் ஆகாமல் ஆஜராகி விடுகிறார்.

சின்னவர் கண்ணன்
சின்னவராக கண்ணன் வேடத்தில் சஞ்சீவ் கிளிசரின் போடாமலே வசனத்தை மனப்பாடம் செய்து உணர்ச்சி பூர்வமாக பேசி பார்ப்பவர்களின் கண்களிலும் கண்ணீரை வரவழைச்சு அனுதாபப் பட வைக்கிறார். இயல்பான நடிப்பு என்று திருமதி செல்வத்தில் மக்களின் மனதைக் கொள்ளை கொண்டவர் போல இந்த சீரியலிலும் நன்றாகவே புகழ் அடைந்து வருகிறார்.

சின்னப் பெண்ணுக்கு
முத்துச்செல்வி சின்னப் பெண்ணாக இருந்து படும் கஷ்டங்களை பார்க்கையில் அம்மா இல்லாமல், பொறுப்பற்ற அப்பாவை வைத்துக் கொண்டு அவள் படும் கஷ்டம் ஏராளம். எந்த இடத்தில் எப்படி தன்னால் முடிந்ததை செய்து அன்றாட பிழைப்பை ஓட்டலாம் என்கிற சூட்சுமம் தெரிந்த கேரக்டர். அது நன்றாக பிரதி பலிக்கும்படி முத்துவின் கதாபாத்திரம் அமைந்து இருக்கிறது.

ஓகே ரகம்
வரிசையாக சன் டிவி சீரியலை ஒளிபரப்பி வந்தாலும், அத்தனையும் பார்க்கும்படியும் இல்லை.ஒரு சில சீரியல்களை மக்கள் தேர்ந்தெடுத்து பார்க்கிறார்கள். அதில் சஞ்சீவ் மற்றும் பூர்ணிமா பாக்கியராஜுக்காக கண்மணி சீரியல் மக்களால் விரும்பிப் பார்க்கப்படுகிறது என்பது உண்மை.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications