Kanmani Serial: உலகத்திலேயே ஒயின் ஷாப்புக்கு போக சொல்ற முதல் பொண்டாட்டி நீதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாமா நீ சாப்டுட்டு முதலில் ஒயின் ஷாப்புக்கு போ..அங்கேதான் குமரேசன் மாமா வருவாருன்னு சவுந்தர்யா கண்ணனிடம் சொல்றா. அப்போதுதான் உலகத்திலேயே ஒயின் ஷாப்புக்கு போக சொன்ன முதல் பொண்டாட்டி நீதான்னு கண்ணன் கிண்டல் அடிக்கிறான்.

சன் டிவியின் கண்மணி சீரியலில் தர்மதுரையின் மூத்த மருமகன் ஒயின் ஷாப்பை நடத்தறான். அவரின் இரண்டாவது மருமகனின் கள்ளத்தனத்தை கண்டுபிடிக்க போடும் பிளானின் போதுதான் கண்ணனை சவுந்தர்யா ஒயின் ஷாப்புக்கு போகச் சொல்றா.

அப்போதான் கண்ணன் எல்லா பொண்டாட்டிகளும் ஒயின் ஷாப்புக்கு போகாதேன்னு சொல்லுவாங்க. உலகத்தில் முதன் முதலா ஒயின் ஷாப்புக்கு போகச் சொல்ற பொண்டாட்டி நீதான் சவுண்டுன்னு கிண்டல் அடிக்கறான்.

சஞ்சீவ் கண்ணன்

சஞ்சீவ் கண்ணன்

கண்மணி சீரியலில் கண்ணனாக சஞ்சீவ் நன்றாக நடிச்சு இருக்கார். இவருக்கு பல வருடங்களுக்குப் பின்னர் கிடைச்ச நல்லதொரு வாய்ப்பை நழுவ விடாமல் நடித்துக் கொண்டு இருந்த சீரியலையும் கை கழுவிட்டு வந்தது வீண் போகலை. சன் டிவியின் கண்மணி சீரியலில் சஞ்சீவுக்கு வீட்டில் கண்ணன் ஊர் மக்களிடம் சின்னவர் என்று நல்ல ரோல் கிடைத்து இருக்கிறது.

வேட்டி வேட்டி

வேட்டி வேட்டி

தல அஜீத் வேட்டி வேட்டி வேட்டி கட்டு என்று பாடி விசுவாசம் படத்தில் நடிச்சாலும் நடிச்சார். இப்போது இளைஞர்கள் எதாவது நாள் கிழமை என்றால் உடனே வரிந்து கட்டிக்கொண்டு வேட்டி கட்டுவது என்பது ஃபாஷனாகிவிட்டது. இந்த சீரியலில் சஞ்சீவ் எப்போதும் வேட்டி சட்டையில் காட்சி தருவது பார்க்க நன்றாக இருக்கிறது.

பெண்கள் சீரியல்களில்

பெண்கள் சீரியல்களில்

சீரியல்களில் மட்டும் பெண்கள் திருமணம் ஆகிவிட்டால் புடவை மட்டுமே உடுத்துவது என்பதை வலியுறுத்தி காட்சிகளை அமைத்து ஷூட் செய்து வருகிறார்கள்.. இதன் விளைவாக கல்யாணம் ஆன, அல்லது ஆகாத பெண்களை அடிக்கடி இப்போது சேலையில் பார்க்க முடிகிறது.

இப்படி ஆண்களும்

இப்படி ஆண்களும்

ஆண்களும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் அடிக்கடி காட்சி தந்தால் வேட்டியும் ஆண்கள் மத்தியில் முக்கிய உடையாக மிக சகஜமாக மாறிவிடும் காலம் வந்துவிடும். அதனால், கண்ணன் விவசாயம் உடை வேட்டி என்று இருந்தாலும் சந்தோஷமாக நவீன அறிவியல் வசதியுடன் வாழலாம் என்பதை அறிவுறுத்தும் சீரியலாக கண்மணியைப் பார்க்கலாம்.,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+