Kanmani Serial: என்னாது முத்துச்செல்விக்கு கல்யாணம் ஆயிருச்சா?
சென்னை: சன் டிவியின் திங்கள் முதல் சனி வரை தினமும் 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் கண்மணி. நல்ல பச்சைப் பசேல் கிராமத்தில், சீரியலை படம் பிடித்து இருப்பது கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது.
வயல் வெளியில் பெண்கள் நாற்று நடுவது, அவர்கள் சவுந்தர்யாவுக்கும், கண்ணனுக்கும் நடக்க இருக்கும் கல்யாணத்தை கிண்டல் செய்வது என்று பார்க்க நன்றாக இருக்கிறது.
சின்னவராக கண்ணன் மிகப் பொருத்தம். நடிகர் சஞ்சீவ் இந்த கதாபாத்திரத்தில் மிக நன்றாக நடிச்சு இருக்கார். கூடவே நடிகை பூர்ணிமா பாக்கியராஜை சின்னவரின் அக்காவாகப் பார்ப்பதற்கும் நன்றாக இருக்கிறது.

கண்ணன் சவுந்தர்யா
ஆரம்பத்தில் சவுந்தர்யா வெளிநாட்டில் படித்துவிட்டு வருகிறாள்.அப்போதே அங்கிருந்து ஆகாஷை கல்யாணம் செய்துக்கற எண்ணத்தில் வருகிறாள், இங்கு வந்து பார்த்தால், கண்ணன் சவுந்தர்யாவை கல்யாணம் செய்துக்க ஆசையாக இருக்கான்.இந்த கல்யாணம் மணமேடை வரை வந்து, சவுந்தர்யா ஆகாஷை காதலிக்கிறேன் என்று சொல்வதால் கல்யாணம் நின்னு போகுது.

சவுந்தர்யா ஆகாஷ்
ஆகாஷ் சவுந்தர்யா கல்யாணமும் கண்ணன் மேற்பார்வையில் நடக்க இருக்கும்போது, ஆகாஷின் அம்மாவால் கல்யாணம் நின்னு போகுது. அதாவது கல்யாண மேடையில் கண்ணன் இருக்க கூடாது என்று ஆகாஷ் அமாம் கண்டிஷன் போட, இதை சவுந்தர்யா எதிர்க்க ,கல்யாணம் நின்னு போகுது.

இரண்டு தடவை
சவுந்தர்யாவின் கல்யாணம் இப்படி இரண்டு தடவை நின்னு போனதால், இடைப்பட்ட காலத்தில் கண்ணன் மீது காதல் வந்துருது. அதை சொல்லாமல் தவித்துக் கொண்டு இருக்கையில்தான், தோட்டத்து வீட்டுக்கு முத்து குடும்பம் வருகிறார்கள். முத்துசெல்விக்கு சின்னவர் மீது காதல் வருது.

கல்யாணம் வள்ளி
வள்ளி முருகன் கல்யாணத்தை கூத்தாக நடத்தினால் சவுந்தர்யாவுக்கு கல்யாணம் நடக்கும் என்று அருள் வாக்கு சொல்ல, கூத்து நடக்கையில் வள்ளியாக நடிக்கும் பெண்ணும் முருகனாக நடிக்கும் பையனும் காணாமல் போயிடறாங்க.

தாலி கண்ணன்
அப்போது தடாலடியாக முருகன், வள்ளியாக முத்துவும், முருகனாக சின்னவரும் நடிக்கையில் கண்ணன் கட்டிய தாலியை இன்னும் மறைத்து வைத்து தனக்குள் கண்ணனை புருஷனாக நினைத்து வஙழ்ந்து கொண்டு இருப்பதாக இன்ஸ்பெக்டர் வீட்டில் அடைக்கலம் புகுந்து இருக்கும் முத்து தனது அப்பாவிடம் கூறுகிறாள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications