Kanmani Serial: சின்னவரே... முழுகாம இருக்கறது முத்துச்செல்வியா சவுண்டா?!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் போன் பேசிகிட்டு லாரி வர்றதை கவனிக்காம இருக்கும் சவுந்தர்யாவை, முத்துச்செல்வி அந்த பக்கமா தள்ளிவிடறா. இதுக்குப் பிறகு ஆஸ்பிடலில் யாரை சின்னவர் சேர்த்து விடுகிறார் என்று தெரியவில்லை.
டாக்டர் சின்னவரிடம், மெடிக்கல் ரிப்போர்ட் இருக்கும் இல்லே அதை குடுங்க. அது படி வைத்தியம் பார்க்கறோம்...ஏன்னா முழுகாம இருக்காங்க இல்லையான்னு சொல்றாங்க. சின்னவர் ஒருவித பாவனையையும் முகத்தில் காண்பிக்காம டாக்டரை பார்க்கிறார்.
சன் டிவியின் ப்ரோமோவில் இந்த சீன் ஒளிபரப்பாகிட்டு வருது. இரவு 8:30 மணிக்கு திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பகி வரும் இந்த கண்மணி சீரியலில் சின்னவராக நடிக்கும் கண்ணன் அனைவருக்கும் பிடிக்கும்படி ரொம்ப நல்லவராக நன்றாகவும் நடித்து வருகிறார்.

சீரியலில் ரெண்டு ஃபிகர்
கண்மணி சீரியலில் சின்னவர் கண்ணனுக்கு அக்கா பொண்ணு சவுந்தர்யா ஒரு ஃபிகர். எங்கிருந்தோ அந்த ஊருக்கு அடைக்கலமாக வந்த முத்துச்செல்வி என்று இன்னொரு ஃபிகர். இவர்கள் இருவருமே அழகாக இருந்தாலும், பசங்க விரும்பிப் பார்க்கறது என்னவோ, சவுந்தர்யாவுக்காகத்தான். சவுந்தர்யாவாக நடிகை லிசா நடித்து இருக்கார். இவர் கண்ணன் மாமாவை விடுத்து ஆகாஷை லவ் பண்ணியபோது, ரசிகர்கள் சவுண்டும், சின்னவரும்தான் சேரணும் என்று கமெண்ட் போட்டு கலக்கிவிட்டார்கள்.

சின்னவர் முத்துச்செல்வி
சரி சவுண்டுதான் நமக்கு கிடைக்கலை.. எதாவது ஒரு பெண்ணை எப்படியும் கல்யாணம் செய்துகிட்டு வாழத்தான் போறோம்.. அது ஏன் முத்துச்செல்வியா இருக்க கூடாது என்று கண்ணன் முத்துவை கட்டிக்க சம்மதம் சொன்னபோதும், கண்ணனுக்கு சவுண்டுதான் என்று ரசிகர்கள் ஓங்கி ஒலிக்கும்படி கமெண்ட்ஸ் போட்டு வந்தார்கள். கடைசியில் இப்போது சவுந்தர்யா, கண்ணன் குழந்தைக்கு வாடகைத் தாயாக முத்துச்செல்வி இருக்கிறாள்.

கண்ணனுக்கு இரு ஃபிகரா?
இப்போது பார்த்தால் சவுண்டை காப்பாத்தினவ முத்துச்செல்வி. இவங்களுக்காக குழந்தை பெத்துத் தர வாடகைத் தாயா இருப்பவளும் முத்துசெல்விதான். பார்க்கப்போனால், கண்ணனுக்கு ரெண்டு ஃபிகர் போல இருக்கு. இதனால் ரசிகர்கள் சந்தோஷப்படுவார்களா? இல்லை முன்பு போல கமெண்ட்ஸ் போட்டு நடுநிலையாக இருப்பார்களா... பார்ப்போம்.

கண்ணன் சஞ்சீவ்
சின்னவர் கண்ணனாக நடிகர் சஞ்சீவ் மிக நன்றாக நடித்து இருக்கார். இவருக்கு குடும்ப கதை என்று திருமதி செல்வம் எப்போது வொர்கவுட் ஆனதோ, அப்போதில் இருந்தே குடும்ப பெண்கள், வயசான பெண்மணிகள் என்று சஞ்சீவுக்கு ரசிகைகளாக இருந்து வருகின்றனர்.அவர்கள் சஞ்சீவ் நடித்தால் இந்த சீரியல் நன்றாக இருக்கும் என்று நம்பி சீரியல் பார்க்கும் இந்த பெண் ரசிகைளை ஏமாற்றாமல் அவரும் நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

நடிகை பூர்ணிமா பாக்யராஜ்
நடிகை பூர்ணிமா பாக்யராஜ் இந்த சீரியலில் விஜய லட்சுமியாக கண்ணனின் அக்காவாக நடித்து வருகிறார். இவரைப் பற்றி இவரது கணவர் பாக்யராஜ், ரொம்ப சின்சியராக ஆர்ட்டிஸ்ட். நிறைய வருஷங்களுக்குப் பிறகு நடிக்க வந்து இருக்கார். இப்போதும் அதே சின்சியாரிட்டியுடன், காலையில் சரியான நேரத்துக்கு எழுந்து மேக்கப் போட்டுக்கொண்டு ரெடியாகி விடுவார் என்று சொல்லி இருக்கார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications