கண்மணி பொங்கலோ பொங்கல்...!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியல் பொங்கல் கொண்டாட்டம் இன்று ஒளிபரப்பாக உள்ளது.
முன்னதாக கண்மணி சீரியல் நட்சத்திரங்கள் பொங்கலோ பொங்கல் சொல்லும் வாழ்த்தை சன் டிவி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.
சஞ்சீவ், பூர்ணிமா பாக்யராஜ்,லிசா, ஜீவிதா உள்ளிட்டோர் பொங்கலோ பொங்கல் என்று பொங்கல் வாழ்த்துக்களை சொல்லி உள்ளனர்.

கண்ணன் சஞ்சீவ்
சஞ்சீவ் என்பதை விட கண்ணன் மாமாவா மக்கள் மனசில் இப்போ நான் இடம் பிடிச்சு இருக்கேன்.திருமதி செல்வம் சீரியலுக்குப் பிறகு ரொம்ப பெரிய இடத்தை எனக்கு மக்களாகிய நீங்கள் குடுத்து இருக்கீங்க. வெற்றிகரமா 400 எபிசோடுகளை கடந்து இருக்கோம். இன்னும் உங்களை மகிழ்விப்போம் என்று சொல்லி பொங்கல் வாழ்த்து சொன்னார் சஞ்சீவ்.

நடுரோட்டில் சவுண்டு
மக்கள் என்னை நடு ரோட்டில் கூட சவுண்டு சவுன்டுன்னுதான் கூப்பிடறாங்க,. சவுந்தர்யான்னு பேரை மறந்துட்டு கண்ணன் மாமா என்னை கூப்பிடும் அந்த பேரை சொல்லித்தான் கூப்பிட்டறாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. சவுண்ட் செக் பண்ண சவுண்ட்னு சொன்னா கூட திரும்பி பார்க்கற அளவுக்கு வந்துட்டேன். இந்த அளவுக்கு வரவேற்பு குடுத்த உங்க அனைவருக்கும் என் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள் என்று சொன்னார் நடிகை லிசா.

அக்கா விஜயலட்சுமி
கண்மணி சீரியலில் கண்ணனின் அக்கா விஜயலட்சுமியாக நடிக்கும் பூர்ணிமா பாக்யராஜ், கண்மணி சீரியலுக்கு இந்த அளவுக்கு வரவேற்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. இத்தனை வருஷம் கழிச்சு என்னை ஏற்றுக்கொண்டு வரவேற்பு கொடுத்த மக்களுக்கும் நன்றி. அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் என்கிறார்.

அழகு சித்தி
ஆகாஷுக்கு அழகான சித்தியா காண்பிச்சு இருக்கும் கண்மணி சீரியலுக்கு நன்றி. இன்னும் இன்னும் என்று கண்மணி சீரியலுக்கு நீங்கள் ஆதரவு தரணும் என்று கேட்டுக்கொண்டு ரசிகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் சொல்லிக்கொள்கிறேன் என்று சொன்னார் நடிகை ஜீவிதா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications