ஆஹா... வந்துருச்சு.. கண்ணம்மா ஆசையில் ஒடி வந்தா!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Bharathi Kannamma serial: கண்ணம்மாவை திட்டும் சௌந்தர்யா- வீடியோ

    சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி கண்ணாம்மாவை கல்யாணம் செய்துக்க ஆசைப்படறான்.

    பாரதியின் அம்மா சவுந்தர்யாவுக்கு கருப்பு நிறம்னா ஆகாது.. பிடிக்காது. அதனால்தான் கண்ணம்மாவை கண்முன்னே கூட வர கூடாதுன்னு சொல்லிடறாங்க.

    Kannamma comes to meet Barathi

    கண்ணம்மாவின் சித்தி பொண்ணு அஞ்சலி ரொம்ப அழகு. இந்த அழகுக்காகவே தன்னோட ரெண்டாவது பையன் அகிலனுக்கு அஞ்சலியை பேசி முடிக்கறாங்க. ஆனா,கண்ணம்மாவை கண்டால் ஆகாது.

    கண்ணம்மாவை பொன்னியம்மன் கோயிலுக்கு வர சொல்றான் பாரதி.அவளும் ஆசை ஆசையா பாரதியைப் பார்க்க வர்றா.அவனும் அவளை கண்டதும் பரவசமடையறான்.

    Kannamma comes to meet Barathi

    இருவரும் காதலுடன் பேசிக்கறாங்க. என் மனசுக்குள்ள எப்போதும் உங்க நினைப்புதான் இருக்கு.ஓய்வில்லாம வேலை செய்துகிட்டு இருந்தாலும் உங்க நினைப்புதான் எனக்கு சந்தோஷம்னு சொல்றா.

    உன்னை நல்லா பார்த்துக்குவேன் கண்ணம்மா.. உன்னை அம்மா இப்போ வெறுத்தாலும், அவங்க உன்னை கிட்ட வந்து கொஞ்சற மாதிரி நடக்கும் பாரேன்..

    Kannamma comes to meet Barathi

    உன் மேல பரிதாபத்துல உன்னை கல்யாணம் செய்துக்கறேன்னு சொல்லலை கண்ணம்மா..உன் மேல நான் ஆசைப்பட்டேன்னு சொல்றான். நிறம்,பணம் இது மட்டுமே வாழ்க்கையில்லைன்னு அம்மாவுக்கு நான் புரிய வைப்பேன் கண்ணம்மான்னு சொல்றான்.இவளுக்கு சந்தோசம். நிறைந்து இருக்க, அர்ச்சனை பண்ணி சாமி கும்பிடலாம் வாங்கன்னு கூப்பிடறா.

    அர்ச்சகர் யார் பேருக்கு அர்ச்சனைன்னு கேட்க, பாரதி கண்ணம்மா ன்னு ரெண்டு பேர் பேரையும் சேர்த்து சொல்ல சந்தோஷமாகிறான் பாரதி. சாமி கும்பிட்டு வந்த உடனே..கண்ணம்மாவின் வீட்டிலிருக்கும் பாட்டி கண்ணம்மாவை யாரு கல்யாணம் பண்ணிக்கப்போறான்னு போயி கோயில்ல பாருடான்னு மாயாண்டியை அனுப்பி வைக்கறாங்க.

    Kannamma comes to meet Barathi

    கோயிலில் மாயாண்டிக்கும் பாரதிக்கும் சண்டை நடக்குது ..இந்த கருப்பு கண்ணம்மாவுக்காக... அடடா.. பார்க்க சந்தோஷமா இருக்கு. நிற பேதத்தை மாற்ற முயலும் இந்த சீரியல்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+