அப்பாவுக்கு ரோஷம் வந்து... கண்ணம்மா கதறி அழறாளே... இதெல்லாம் பாவம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் சருமத்தின் நிறம் பற்றிய விழிப்புணர்வும் இருக்கு. நிறத்துல ஒண்ணும் இல்லைன்ற விஷயத்தை மனசுல நல்லா ஆழ பதியற மாதிரி கதையை கொண்டு போனா நல்லா இருக்கும்.

முதல் தாரத்துக்கு பிறந்த கண்ணம்மா நல்ல நிறம்தான்.. ஆனா, கருப்பு நிறம்.ரெண்டாம் தாரத்துக்கு பிறந்த அஞ்சலியும் நல்ல நிறம்தான் ஆனா, வெள்ளை. இவளை பார்த்த பணக்கார சவுந்தர்யாவின் ரெண்டாவது மகன், அகிலன் ஆசைப்படறான்.

Kannamma cries over her father

சவுந்தர்யா அம்மா உடனே சம்மதம் சொல்லிடறாங்க. ஏன்னா, அவங்களுக்கு அழகுதான் பிடிக்கும். அதாவது வெள்ளையா இருந்தாதான் அவங்க கண்ணுக்கு அழகு. தன் பேத்தி கருப்பா இருக்கான்னு இன்னும் அவளைத் தொட்டு கூட பார்த்ததில்லை சவுந்தர்யா அம்மா.

கண்ணம்மா தன் புருஷனோட முதல் தாரத்து பொண்ணுன்னு தெரிஞ்சா இந்த கல்யாணம் நடக்காதுன்னு, சித்தி தன் வீட்டு வேலைக்காரின்னு சொல்லிடறாங்க. ஒரு வழியா அஞ்சலி-அகிலன் நிச்சயதார்த்தத்தில் கண்ணம்மா முதல் தாரத்தோட பொண்ணுன்னு தெரிஞ்சுருது.

இப்போ சரி.. ஆனா, இவ இனிமே என் கண்ணுலயே படக்கூடாது.. அதுக்கு என்ன பண்ணணுமோ அதை பண்ணிருங்கன்னு சர்வ சாதாரணமா சொல்றாங்க சம்பந்தி.

Kannamma cries over her father

கண்ணம்மாவுக்கு கிராமத்தில் ஒரு மாப்பிள்ளையை பார்க்கறார் அப்பா. அவர் 25 ஏக்கர் நிலத்துக்கு சொந்தக்காரர்னு ரெண்டாம் தாரத்தோட அம்மா சொல்றாங்க. பொண்ணை பார்க்காம இருந்ததுனாலதான் அவன் கல்யாணத்துக்கு சம்மதிச்சசு இருக்கான்.. பார்த்தா அவனும் தெறிச்சு ஓடிருவான்னு சித்தி கிண்டல் செய்ய, பாட்டி, அஞ்சலி எல்லாரும் சிரிக்கறாங்க.

முதல் தடவையா தன் பொண்ணை அசிங்கம், தரித்திரம்னு திட்டினத்துக்கு கோவம் வந்து சித்தியை பொளந்து கட்டறாரு கண்ணம்மாவின் அப்பா. அப்போதும் சொன்னா சொல்லிட்டு போறாங்க விடுங்கப்பா.. நீங்க ஏதாவது செய்துட்டு ஜெயிலுக்கு போனா, நான் நடுத்தெருவில் நிக்கணும்ப்பா.. கொஞ்சம் யோசிங்கன்னு கண்ணம்மா கதறி அழறா

எந்த பொண்ணுக்கும் இந்த நிலை வரக்கூடாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+