அடடா.. என்னாச்சும்மா.. மறுபடியும் பேக்கை எடுத்துக் கொண்டு பொடி நடையா கிளம்பியாச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தெருவில் நடையா நடந்து பிரபலமான கண்ணம்மா மீண்டும் அதே வெறி நடையாக கையில் பேக்கோடு கிளம்பியாச்சு. இதனை பார்த்ததும் ரசிகர்கள் கலாய்ச்சி மீம்ஸ்களை மீண்டும் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

விஜய் டிவியில் தற்போது காசு மழை தான் பொழிந்துகொண்டிருக்கும் என்று சொல்லும் அளவிற்கு அந்த அங்கு நடக்கும் சீரியல்கள் எல்லாமே டாப்பரில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதுவும் வைரலான மீம்ஸ்கள் மூலமாக பிரபலமடைந்த பாரதிகண்ணம்மா சொல்லவே வேண்டாம்.

அது வரைக்கும் சுமாராக ஓடிக் கொண்டிருந்த இந்த சீரியல் திடீரென்று இந்த அளவிற்கு முதலிடத்தில் வரும் என்று அந்த சீரியல் டைரக்டர் கூட தெரிந்து இருக்க மாட்டார். அந்த அளவிற்கு எல்லாரையும் ஆச்சரியப்படுத்தும் அளவில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் வந்து கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா.

 ரோஷ்னி அசத்தல்

ரோஷ்னி அசத்தல்

இந்த சீரியலில் கண்ணம்மா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் ரோஷ்னி ஹரிப்ரியன் அந்த கேரக்டராவே முழுமையாக மாறிவிட்டார் என்று சொல்லும் அளவிற்கு படு கச்சிதமாக பொருந்தி விட்டார். இருந்தாலும் இவர் செய்ததை வைத்து இந்த சீரியல் இந்த அளவிற்கு சூடு பிடித்திருக்கிறது. இவர் பொடிநடையாக கையில் பேக்கோடு நிறைமாத கர்ப்பமாக நடந்து கொண்டிருப்பதை பார்த்து பல மீம்ஸ் கிரியேட்டர்களும் விதவிதமாக கலாய்த்துக் கொண்டிருந்தார்கள்.

 மறுபடியும் நடக்கும் கண்ணம்மா

மறுபடியும் நடக்கும் கண்ணம்மா

கொஞ்சநாளா இவர் ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்து கொண்டிருந்தார். ஆனால் இப்போ டிஆர்பி ரேட்டிங் குறைந்து விட்டது போல அதனால் டிஆர்பியை கூட்டுவதற்காக மீண்டும் அந்த பேக்கை கையில் கொடுத்து நடக்க வைத்து விட்டார் டைரக்டர். இப்ப கொஞ்ச நாளா இந்த சீரியலில் புதுப்புது திருப்பங்கள் என்று புரமோஷனை வெளியிட்டு வந்த விஜய் டிவி மீண்டும் தன் கண்ணம்மாவின் கையில் பேக்கை கொடுத்து நடக்க விட்டு இருப்பதை பார்த்து ரசிகர்களும் உற்சாகமாக மீண்டும் கலாய்க்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.

 தெருவில்தான் இருப்பார்

தெருவில்தான் இருப்பார்

அதுவும் இல்லாமல் இவர் எப்பவும் இப்படித்தான் ஏதாவது ஒரு தெருவில் தான் நடந்து கொண்டிருப்பார் என்பதை அறிந்து அவரது மாமியாரும் ரோட்டில் தான் இவரை தேடிக்கொண்டிருக்கிறார். இதைப் பார்த்ததும் நெட்டிசன்கள் மாமியாருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது மருமகள் எதாவது தெருவில் தான் நடந்து கொண்டிருக்கிறார் என்று. அதனால் தான் அவரும் ரோட்டில் சுற்றிக் கொண்டிருக்கிறார் என்று விதமாக கலாய்த்து வருகிறார்கள்.

 பாரதிக்கு மறுமணமா

பாரதிக்கு மறுமணமா

அதுவும் இல்லாமல் மீண்டும் பாரதிக்கு திருமணம் என்பது போல ஒரு கதையை பரப்பி வருகிறார்கள். ஆனால் அது உண்மையா இல்லை பாரதி குடித்துவிட்டு வீட்டில் வந்து கண்ணம்மா கண்ணம்மா என்று புலம்புவது உண்மையா என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். ஆனாலும் இந்த சீரியல் இந்த அளவிற்கு மவுசு அடைந்து இருக்கும் என்று அந்த சீரியலில் நடித்தவர்களும் அதை இயக்கியவர்களும் எதிர்பார்க்காத வகையில் இந்த அளவிற்கு பாப்புலர் ஆக மாற்றிய மீம்ஸ் கிரியேட்டர்ஸ் மீண்டும் இந்த சீரியலுக்கு துணையாக இருக்கிறார்கள் .

 ரோட்டில் பிரசவ வலி

ரோட்டில் பிரசவ வலி

கண்ணம்மாவுக்கு அவருக்கு பிரசவ வலி ரோட்டில் வந்து அவர் அங்கேயே அம்மா என்று கதறி அழுவது போல காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதை வைத்து இதையும் கூட ட்ரோல் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் . தெருவிலே நடந்து இவருக்கு தெருவிலேயே குழந்தையும் பிறந்தது. இனி இந்த குழந்தையை கையில் பிடித்துக்கொண்டு மீண்டும் இதே பேக்கோடு இப்படித்தான் சுற்றி அலைய வைப்பீர்களா என்று கேட்டு வருகிறார்கள். அதிலேயும் புரோமோ வில் வெண்பா மீண்டும் கண்ணம்மாவுக்கு பிரசவம் பார்ப்பது என்னிடமே வந்து இருக்கிறது .

 கம்னு கிட

கம்னு கிட

பிரசவம் பார்க்கும் டாக்டர் நான்தான். கண்ணம்மாவை இருக்கக்கூடாது என்று நினைக்கிறேன் நான். அவரது குழந்தையை விட்டு விடுவேனா நல்லபடியாக குழந்தை பிறக்க வைக்க மாட்டேன் என்று கண்களை உருட்டி வில்லத்தனத்தை காட்டி பேசியிருப்பது இந்த சீரியல் ரசிகர்களுக்கு வெண்பா மீது கொலை வெறியாக கழுவி கழுவி ஊற்றி வருகிறார்கள். ஆனா நீங்க என்னதான் கலாய்சாலும் எங்களுக்கு டிஆர்பி தானே முக்கியம் அதுக்கு நீங்கதான் வழி செய்து விட்டு இருக்கீங்க என்று சீரியல் டீம் ரசிகர்களை வெறியேற்றி வருகிறது.

கண்ணம்மா.. கம்னு கிட.. இது அந்தக் காலம்.. இப்போது மறுபடியும் ஒரு கண்ணம்மாவின் காலம்.. அனுபவிங்க ராஜா அனுபவிங்க!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+