kanmani serial: கண்ணன் மாமா ட்ரீம்ஸு... நல்லாத்தான் இருக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கண்ணன் மாமா ட்ரீம்ஸ் எல்லாம் நல்லாத்தான் இருக்கு...ஆனா, மனுஷன் எதுக்கு இப்படி கண்ணீரை கொட்டிக்கிட்டு அழறார்னுதான் தெரியலை. வசனம் பேசிக்கிட்டே முத்து முத்தாக கண்ணீர் வடிக்கிறார்.

இருந்தாலும், சன் டிவியின் கண்மணி சீரியலுக்கு கண்ணனாக நடிக்கும் சஞ்சீவ்தான் ஹைலைட். சீரியல் கதை எப்படி போனால் என்ன, நாம் கொடுக்க வேண்டிய பெஸ்டை கொடுத்து விடுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

குறை வைக்காத நடிப்பு...டயலாக் பேசுவதில் யதார்த்தம்.. அதுவும் சோக காட்சிகளில் கேட்கவே வேண்டாம்.. கண்ணீர் தாரை தாரையாக கொட்டுகிறது. இவரின் கதாபாத்திரத்தின் மீது ஒரு பரிதாபத்தை வரவழைக்குது.

கண்ணன் மாமா ட்ரீம்ஸ்

கண்ணன் மாமா ட்ரீம்ஸ்

அக்காவுக்கும் மாமாவுக்கும் கல்யாண நாள் கொண்டாட்டங்கள் ஒரு பக்கம் நடந்துக்கொண்டு இருக்க, கண்ணன் மாமா ட்ரீம்ஸ் இன்னொரு பக்கம் நடக்குது. ஐயர் தாலியுடன் உட்கார்ந்து வேத மந்திரம் சொல்லிக்கொண்டு இருக்க, அந்த தாலியை பார்த்ததும் நம்ம கண்ணன் மாமா சவுந்தர்யாவுடன் ட்ரீம்ஸ் கிளம்பிட்டார்.

பக்கத்துல சவுண்டு

பக்கத்துல சவுண்டு

என்னதான் மேள சவுண்டு கேட்டுக்கொண்டு இருந்தாலும், மாமாவின் ட்ரீம்ஸ் கலையவில்லை. பக்கத்தில் ஒரு சவுண்டு உட்கார்ந்து இருக்கும்போது அவருக்கு அந்த சவுண்டு எப்படி கேட்கும்? தாலியை எடுத்து சவுண்டு கழுத்தில் கட்டப் போவது போல ட்ரீம்ஸ்... வான்மதி வந்துதான் மாமா மாமா என்று கூப்பிட்டு கனவைக் கலைத்தாள்.

என்ன மாமா ட்ரீம்ஸா?

என்ன மாமா ட்ரீம்ஸா?

என்ன மாமா ட்ரீம்ஸா என்று வான்மதி கேட்க, ஆமாம். மாமாவும் அக்காவும் இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த சேரில் உட்காருவங்க. அதே மாதிரி நானும் சவுண்டும் உட்கார்ந்து இருப்பது போல இருக்கு புள்ளே.. பக்கத்துல நீ இருக்கே என்று சொல்ல..ஆமாமாம்.. நான் இல்லாமல் எப்படி மேல சொல்லுன்னு ஆவலா கேட்கிறாள் வான்மதி.

ட்ரீம்ஸ் நல்லாத்தான்

ட்ரீம்ஸ் நல்லாத்தான்

ட்ரீம்ஸ் நல்லாத்தேன் மாமா இருக்கு.. இதை நிஜமாக்க என்ன செய்யணுமோ அதை செய் மாமா என்று வான்மதி சொல்ல, ட்ரீம்ஸ் நல்லாத்தான் மாமா இருக்கு.. இதை நிஜமாக்க என்ன செய்யணுமோ அதை செய் மாமா என்று வான்மதி சொல்ல, ஏய்.. நீ சின்ன பிள்ளை . இதெல்லாம் பேசக் கூடாது என்று சொல்கிறான்..அப்படியா உன் குருஜி பதவியில் இருந்து நான் ரிசைன் பண்ணிக்கறேன்னு வான்மதி சொல்ல.. இல்லே இல்லே.. நீ எது வேணும்னாலும் பேசு என்று சொல்கிறான் கண்ணன். இப்படியாக அவன் சவுண்டை கல்யாணம் செய்துக்கொள்ளும் கனவு நீள்கிறது. ஏய்.. நீ சின்ன பிள்ளை . இதெல்லாம் பேசக் கூடாது என்று சொல்கிறான்..அப்படியா உன் குருஜி பதவியில் இருந்து நான் ரிசைன் பண்ணிக்கறேன்னு வான்மதி சொல்ல.. இல்லே இல்லே.. நீ எது வேணும்னாலும் பேசு என்று சொல்கிறான் கண்ணன். இப்படியாக அவன் சவுண்டை கல்யாணம் செய்துக்கொள்ளும் கனவு நீள்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+