ஹூசைன் வீட்டில் நடந்த ஐயப்ப கன்னி பூஜை.. விருந்தில் நெகிழ்ச்சி.. மதங்களை வென்ற மணிமேகலையின் அன்பு
சென்னை: சின்னத்திரை பிரபல தொகுப்பாளினி மணிமேகலையின் கணவர் ஹுசைன், தற்போது ஐயப்ப சுவாமிக்கு மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இவர்கள் வீட்டில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வானது, சின்னத்திரை ரசிர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது. இது தொடர்பான வீடியோ, போட்டோக்களும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.
பிரபல டிவி காம்பியர் மணிமேகலை, தன்னுடைய திறமையை மட்டுமே நம்பி முன்னுக்கு வந்தவர்.. தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றிருப்பவர்..

இவர் நடன கலைஞரான ஹுசைனை மணிமேகலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.. தன்னுடைய காதலை வீட்டில் சொன்னதுமே, பயங்கரமான எதிர்ப்பு மணிமேகலைக்கு கிடைத்தது.. எனினும் அனைவரையும் எதிர்த்துதான், ஹூசைனியை கரம் பிடித்தார்.
திருமணம் முடிந்தபிறகும்கூட, மதத்தைக் காரணம் காட்டி பல விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, ஹுசைனுக்காக மணிமேகலை மதம் மாறிவிட்டதாக கூட வதந்திகள் வலம்வந்தன..
மதம் மாறினாரா மணிமேகலை.
ஒருமுறை மணிமேகலை இதுகுறித்து பேட்டி ஒன்றை தந்திருந்தார்.. அதில், "நாங்கள் இருவரும் திருமணம் செய்த பிறகு, இதெல்லாம் சில மாதங்கள் தான், அப்புறம் பிரிந்து விடுவார்கள் என சிலர் பேசினார்கள். ஆனால் அப்படி நடக்கவாய்ப்பில்லை.

ஹுசைனுக்காக நான் மதம் மாறிவிட்டதாகவும் சிலர் சொன்னார்கள்.. எனக்கு எம்மதமும் சம்மதம் தான்... நான் கடைசி வரை மணிமேலையாக தான் இருப்பேன். என் கணவர் ஹுசைன் எனக்கு சுதந்திரம் கொடுத்துள்ளார். அதன் காரணமாகவே நான் எப்போதும் போல இருக்கின்றேன்" என்று நெகிழ்ச்சியுடன் கூறி, பரவி வந்த வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைத்திருந்தார் மணிமேகலை.
உண்மையான அன்பின் அடையாளம்
அதற்கேற்றவாறு, திருமணத்திற்கு தம்பதி இருவருமே மகிழ்ச்சியுடன் குடும்ப வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.. பொருளாதார நிதி ரீதியாகவும், குடும்ப ஆதரவின்றி கஷ்டப்பட்டு உயர்ந்துள்ள இந்த தம்பதிக்கு, ரசிகர்களின் ஆதரவு என்றுமே இருந்து வருகிறது.
இந்தத் தம்பதியினரின் அன்பை உறுதிப்படுத்தும் விதமாக, ஹுசைன் தற்போது ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை விரதத்தைத் தொடங்கியுள்ளார். மனைவியின் நம்பிக்கைக்காக ஹுசைன் இந்த முடிவை எடுத்தது கடந்த சில நாட்களாகவே இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.
மனைவிக்காகவும், அவளுடைய நம்பிக்கைக்காகவும், ஹுசைன் தற்போது ஐயப்பன் சாமி கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறார்.

ஹுசைனின் இந்தச் செயல் குறித்து மணிமேகலை பதிவிட்டிருந்த ட்வீட்டில், "எல்லாப் போராட்டங்களையும் தாண்டி, நம்முடைய அன்பு தான் ஜெயிக்கும்" என்று உணர்ச்சிப்பூர்வமாக பதிவிட்டிருந்தார்..
கன்னி பூஜை கோலாகலம்:
இப்போது விஷயம் என்னவென்றால், 48 நாட்கள் விரதத்தில், 38வது நாளான நேற்று ஹுசைனின் வீட்டில் கன்னி பூஜை வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. ஐயப்ப சுவாமிமார்களுக்கு விருந்து வைத்து இந்தச் சிறப்புப் பூஜையை குடும்பத்தினர் கொண்டாடினர்.
ஐயப்ப மாலை போட்டு 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று 38வது நாளில் வீட்டில் கன்னி பூஜை நடத்தி ஐயப்ப சாமிகளுக்கு விருந்து வைத்திருப்பது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

உண்மையான அன்புக்கு மதம் ஒரு தடை இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் ஹுசைனின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை மட்டுமல்லாமல், பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
அத்துடன், ஐயப்ப கன்னி பூஜையானது, இந்த தம்பதியின் ஒற்றுமையையும், ஒருவரின் உணர்வை ஒருவர் மதிக்கும் பண்பையும் வெளிப்படுத்தும் நிகழ்வாகவும் பேசப்பட்டு வருகிறது.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications