நீண்ட நாட்களுக்குப் பிறகு.. கன்னிகா ரவி கையில் சிக்கிய கம்பு.. ஆத்தாடி.. என்னா சுத்து!
சென்னை: இணையத்தளங்களில் பல நடிகைகள் கவர்ச்சி காட்டி முன்னணியில் வளர்ந்து கொண்டிருக்கும்போது கிராமத்து சாயலில் அதுவும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கம்பு சுத்து விளையாடி வைரலாக பரவி வருகிறார் கன்னிகா ரவி.
Recommended Video
இவர் சீரியல்களில் நடித்து பின்பு வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்து அங்கும் பல படங்களிலும் நடித்துவிட்டு இப்போ மறுபடியும் சீரியலுக்கு திரும்பியிருக்கிறார்.
அதுவும் கல்யாண வீடு சீரியல் மூலமாக சன் டிவியில் நடித்துக்கொண்டிருக்கிறார் இவர் ஒரு நடிகை மட்டுமல்லாமல் எழுத்தாளராகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

நீளமான தலைமுடி
மாடல் அழகியாகவும் பட்டங்களைப் பெற்றிருக்கிறார். இவருடைய நீளமான முடிக்கு "நீளமான முடியை அழகாக பாதுகாப்பவர்" என்று இவருக்கு பட்டமும் கிடைத்திருக்கிறது. அதை வைத்து இவருக்கு பல விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இருந்தாலும் ஒரு பெண் திரும்ப தன் தாய் வீட்டிற்கு வருவது போல சீரியலுக்கு வந்திருக்கிறார். இதனை தொடர்ந்து இவருக்கு ரசிகர்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறார்கள்.

சமையலில் கெட்டிக்காரி
கிராமத்து சமையல்களில் ஆர்வம் கொண்ட இவர் அதை அப்படியே ஒரு புத்தகமாக வெளியிட்டும் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான களரி, கம்பு சுற்றுதல் முறையாக கற்றிருக்கிறார். தற்போது இணையதளத்தில் இவர் கம்பு சுற்றும் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது.

பாவாடை தாவணியில் சிலம்பாட்டம்
இந்த வீடியோவில் இவர் பாவாடை தாவணி கட்டிக்கொண்டு 100% கிராமத்து பெண்ணிற்கு உரிய அழகோடு முகத்தில் கம்பீரமாகவும் வீராப்போடும் கம்பு சுற்றுகிறார். அதுவும் இரண்டு சிலம்பத்தை வைத்து அசத்தியுள்ளார். இவரது கம்பு சுற்றும் வேகத்தை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயிருக்கிறார்கள். கன்னிகா ரவியை ஒரு விஷயத்தில் நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

குடும்பத்தனம்
மாடல் உடையில் கதாநாயகிகள் இணையதளத்தில் போடும் கவர்ச்சிப் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் அங்கங்களை வர்ணித்து கமெண்டுகளை போடுவார்கள். ஆனால் தற்போது இவர் போட்டிருக்கும் போஸ்ட்டை பார்த்து அனைவரும் பாராட்டி கமெண்டுகளை போட்டிருக்கிறார்கள். பெருமைப்படுவதாகவும் உச்சி முகர்ந்து பாராட்டுகின்றனர்.

நல்ல பாடம்
இவருடைய உடையின் நேர்த்தியும் முகத்தில் தெரியும் இவரது தைரியமும், சற்றும் கவர்ச்சி இல்லாத ஆட்டமும், எல்லா பெண்களுக்கும் வேண்டுமென்றும் பல ரசிகர்கள் கமெண்டுகளை போட்டிருக்கிறார்கள். எந்த நேரமும் பெண்களும் ஆண்களும் போனையே நோண்டிக் கொண்டு அதில் பல கேம்களில் தன்னுடைய நேரத்தை செலவழித்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு மறைமுகமாக இந்த வீடியோ ஒரு பாடம் கற்றுத் தருகிறது.

பெண் பிள்ளைகளுக்கு ரோல் மாடல்
இந்த மாதிரி வீர விளையாட்டுகளை பயிற்சி பெற்று வைத்திருந்தால் எந்த ஒரு கஷ்டமான நேரத்திலும் பெண்களுக்கு கைகொடுக்கும் என்றும் பல ரசிகர்கள் கமெண்ட் போட்டிருக்கிறார்கள். பெண் குழந்தைகளுக்கு கண்டிப்பாக இந்த மாதிரி கலைகளை கற்று கொடுக்க வேண்டுமென்றும் பல விரும்புவதாக கூறி இருக்கிறார்கள். அந்த வகையில் மக்களின் மனதை வசீகரித்து விட்டார் கன்னிகா ரவி.

கலையையும் காப்போம்
இந்த மாதிரி நல்ல விஷயங்களை பண்ணும்போது பலர் ஆதரித்து அழிந்து வரும் இந்த கலைகளை முறையாக கற்று பாதுகாப்போடு இருப்பது பெண்கள் மட்டுமல்ல ஆண்களுக்கும் நல்லதுதான் என்று இவர் போட்டிருக்கும் போஸ்ட் வைரலாக பரவி வருகிறது. இணையதளங்களில் கவர்ச்சியைக் காட்டி மட்டுமே ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் இந்த மாதிரி நல்ல விஷயங்களையும் வெளியே கொண்டு வருவது சூப்பரான விஷயம்தான்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications