தீனா படத்தில் அஜித் ஓட்டிய பைக் எனக்கு கௌரவம்.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம்! காந்தாரா சாப்டர் 1 நடிகர் நெகிழ்ச்சி
சென்னை: சமீபத்தில் வெளியாகி, இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் 'காந்தாரா'. அதன் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, எதிர்பார்ப்பை அதிகமாக்கியிருக்கிறது இயக்குநர் ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம். இந்தப் படத்தில், முகம் முழுவதும் கருப்பு மை பூசி, பிளாக் மேஜிக் செய்யும் வனக்குழுவின் தலைவராக நடித்திருக்கும் நடிகர் சம்பத் ராம் தான், இப்போ பேசுபொருள்!
முழுக்க மேக்கப்பிலேயே மறைந்திருக்கும் இவருடைய நடிப்பு அனைவரையும் பயமுறுத்திய நிலையில், இவருக்குச் சென்னைக்கும், தமிழ் சினிமாவுக்கும் இருக்கும் தொடர்பு குறித்து அவர் கொடுத்திருக்கும் பேட்டி, ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சம்பத் ராம்: வெள்ளித்திரைப் பயணம்
நடிகர் சம்பத் ராம், முதலில் தொலைக்காட்சித் தொடர்கள் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானவர். இவருடைய வெள்ளித்திரைப் பயணம், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கிய 'முதல்வன்' திரைப்படத்தின் மூலம் தான் தொடங்கியது. அதன் பிறகு, தமிழில் பல படங்களில் நடித்துள்ளார்.
இவருடைய திரை வாழ்க்கையை உற்று நோக்கினால், இவர் நடிக்கும் பெரும்பாலான படங்களில், ஒன்று கதாநாயகனுக்கு வலது கையாக இருப்பார், இல்லையென்றால் வில்லன் கதாபாத்திரத்திற்கு வலது கையாக இருப்பார். முன்னணித் திரைப்பிரபலங்கள் பலரின் படங்களில் இவர் நடித்துள்ளார். இப்போ, ஜி.வி. பிரகாஷ் மற்றும் சமுத்திரக்கனி நடிக்கும் சில படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
காந்தாரா மேக்கப்பின் மிரட்டல்
'காந்தாரா சாப்டர் 1' திரைப்படத்தில், பஞ்சுரு சத்தத்தைக் கேட்டுப் பயந்தது போலவே, சம்பத் ராமின் கதாபாத்திரத்தைப் பார்த்தும் ரசிகர்கள் நடுங்கிப் போனார்கள். இவருடைய அடையாளம் தெரியாமல் இருக்க, முகம் மட்டுமல்லாமல், பற்களிலும் கூடக் கருப்பு மை பூசப்பட்டதாம்!
இவருக்கு மேக்கப் போட மட்டுமே பல மணிநேரம் ஆகுமாம். அதிலும், அந்த மேக்கப்பைக் கலைப்பதற்கு அதைவிட அதிகமான நேரம் ஆகுமாம்! இவருடைய அர்ப்பணிப்பு காரணமாகத்தான், 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவர் பான் இந்தியா அளவில் பிரபலமாகி உள்ளார்.

அஜித்தின் தீனா பைக் பற்றி சம்பத்
நடிகர் சம்பத் ராமுக்கு, தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஹீரோவான அஜித்குமாருடன் ஒரு சுவாரஸ்யமான தொடர்பு இருக்கிறது!
இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய சம்பத் ராம், "நடிகர் அஜித் சார் பற்றிச் சொல்வதற்கு ஒரு விஷயம் இருக்கிறது. 'உன்னை கொடு என்னை தருவேன்' படம் தொடங்கி, அஜித் சாருடன் இணைந்து பன்னிரெண்டு படங்கள் நடிச்சுட்டேன்" என்று அஜித்துடன் தான் கொண்ட நெருக்கத்தைப் பகிர்ந்து கொண்டார்.
அடுத்து அவர் சொன்ன தகவல் தான் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது: "'தீனா' படத்தில் அஜித் சார் பைக் ஓட்டும் காட்சிகளில் என் சொந்த பைக்கை பயன்படுத்தினார். அதை நான் பெருமையாக நினைக்கிறேன்!"
அஜித் போன்ற ஒரு பெரிய ஸ்டார், தன் சொந்த பைக்கைப் பயன்படுத்தியது தனக்குப் பெரிய பெருமை என்று சம்பத் ராம் நெகிழ்ந்தாலும், ஒரு சோகமான தகவலும் வெளிவந்துள்ளது. சம்பத் ராம், வறுமையின் காரணமாக, அஜித் ஓட்டிய அந்தப் பெருமைக்குரிய பைக்கைக்கூட விற்றுவிட்டதாகவும் அவர் வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.
சினிமாவுக்காக இவ்வளவு உழைப்பைக் கொடுத்து, சொந்தப் பைக்கையும் பெருமையுடன் பயன்படுத்தக் கொடுத்த சம்பத் ராம் போன்ற கலைஞர்களின் உழைப்பும், அர்ப்பணிப்பும் தான் தமிழ் சினிமாவுக்குப் பெரிய பலம்! பான் இந்தியா அளவில் பிரபலமாகியிருக்கும் சம்பத் ராம், இனி தமிழ் சினிமாவிலும் பெரிய ஆளாக வருவார் என எதிர்பார்க்கலாம்!












Click it and Unblock the Notifications