Kantara Chapter 1 Review: காந்தாரா சாப்டர் 1 கதை இதுதான்! படுத்தி எடுக்குறாங்க! புளூ சட்டை மாறன் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரொம்ப எதிர்பார்ப்போட பான் இந்தியா லெவல்ல ரிலீஸ் ஆன ரிஷப் ஷெட்டியோட 'காந்தாரா சாப்டர் 1' படத்தை நான் பார்த்துட்டேன். முதல் பாகம் 'காந்தாரா' ஒரு சாதாரண ஆடியன்ஸைக்கூட நம்ப வைத்த ஒரு மேஜிக். ஆனா, இந்த ப்ரீக்குவல் எப்படி இருக்கு? என்ன ப்ளூ சட்டை மாறன் ரிவ்யூ செய்து இருக்கிறார். வாங்க, பார்க்கலாம்.

Kantara Blue Sattai Maaran

காந்தாரா சாப்டர் 1 சுருக்கமான கதை

இந்தக் கதை, முதல் பாகம் மாதிரி சமகாலத்துல நடக்குற மாதிரி இல்ல. சுமார் 100, 200 வருஷத்துக்கு முன்னாடி கதை நகருது. கிரேக், போர்ச்சுக்கல் போன்ற வெளிநாடுகளில் இருந்து வரவங்க, நம்ம ஊர்ல உள்ள மிளகு, வாசனைத் திரவியங்கள் (Spices) மேல ஆசைப்படுறாங்க.

'ஈஸ்வரப் பூந்தோட்டம்'னு ஒரு ஏரியா இருக்கு. அங்கதான் இந்த விலை உயர்ந்த பொருட்கள் எல்லாம் கிடைக்குது. அந்த ஏரியாவை எப்படியாவது ஆட்டையைப் போட்டுறணும்னு 2 இனக்குழுக்களும், ஒரு ராஜாவும் சேர்ந்து பிளான் போடுறாங்க. இதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு - அந்தப் பகுதியில் ஒரு தெய்வீகமான விஷயம் இருக்கு. அதனால அதை முழுசா கையகப்படுத்த நினைக்கிறாங்க. ஒரு கட்டத்துல, இந்த வெளி ஆட்கள் அந்த மக்களை எதிர்த்து போர் தொடுக்குறாங்க. அந்த நேரத்தில், அந்தப் பகுதியில் உள்ள தெய்வம் அந்த மக்களைக் காப்பாத்துதா, இல்லையாங்கிறதுதான் இந்தப் படத்தோட மையக் கதை.

காந்தாரா ரிவ்யூ

இங்கேதான் முதல் பாகத்துக்கும் இந்த ப்ரீக்குவலுக்கும் உள்ள பெரிய வித்தியாசம் தெரியுது. 'காந்தாரா 1' படத்தை எடுத்தப்போ, கிளைமேக்ஸ்ல தெய்வத்தைக் காட்டுறாங்க. கடவுள் நம்பிக்கையே இல்லாதவன் கூட அதை ஏத்துக்கிற மாதிரி, ஒரு அழுத்தமான மேஜிக்கைக் காட்டுனாங்க. ஆனா, இந்தப் படத்துல என்ன பண்ணியிருக்காங்கன்னா, ஃபேன்டஸி (Fantasy) என்ற பெயரில் ரொம்பவே செயற்கையா நிறைய விஷயங்களைக் காட்டுறாங்க.

எப்படி சொல்றதுன்னா, ஒரு கட்டத்துல சம்பந்தமே இல்லாம ஒரு புலி வருது, குதிரை வருது, பன்னி வருது, ஏன் ஒரு தேவாங்கு ஃபைட் கூட வருது. ஆனா, அது ஏன் வருதுன்னு தான் யாருக்கும் புரியல. முதல் பாதியைக் கடக்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிப்போச்சு. சுத்தமா சுவாரஸ்யம் இல்லாத காட்சிகளால் ரொம்பவும் கஷ்டப்பட்டுத்தான் முதல் பாதியைத் தாண்டி வர வேண்டியிருக்கு.

கிளைமேக்ஸில் அதே டெம்ப்ளேட்

படத்தோட செகண்ட் ஆஃப்ல தான் கதையே ஆரம்பிக்குதுன்னு சொல்லலாம். இங்கேதான் ஹீரோவுக்குச் சாமி வர்ற மாதிரியான காட்சிகள் எல்லாம் வருது. படத்தோட ப்ரீ கிளைமேக்ஸ்ல ஒரு முக்கியமான விஷயத்தை வச்சிருக்காங்க. அந்த இடத்துல இருந்துதான் கதை கொஞ்சம் சூடுபிடிக்க ஆரம்பிக்குது.

ஆனா என்ன? 'காந்தாரா 1' படத்தோட கிளைமேக்ஸில் இருந்த அதே டெம்ப்ளேட்டைத்தான் இதிலும் பயன்படுத்தியிருக்காங்க. முதல் பாகத்துல, அந்த சத்தம் வரும்போது முதல்ல ஒரு பயம் வரும், அடுத்து ஒரு சிரிப்பு வரும். ஆனா, அதே விஷயத்தைத் திரும்ப எடுத்தப்போ, அந்தப் புதுமை இல்லை. தீவிரமான பக்தி கொண்ட ஆடியன்ஸுக்கு இந்த உணர்வுபூர்வமான காட்சிகள் ஒருவேளை பிடிக்கலாம். ஆனா, பொதுவா சினிமா பார்க்க வந்த மத்தவங்களால இதைப் பொறுத்துக்க முடியாதுன்னு தான் சொல்லணும். முதல் பாகம் ஏற்படுத்திய அசுரத்தனமான எதிர்பார்ப்பை இந்தப் படம் பூர்த்தி செய்யலைங்கிறதுதான் என்னோட உறுதியான விமர்சனம் என்ன ப்ளூ சட்டை மாறன் தெரிவித்திருக்கிறார்.

அப்போ இந்த வாரம் நீங்க எந்தப் படத்தை பார்க்கப் போறீங்கன்னு கமென்ட்ல சொல்லுங்க!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+