சினிமா ப்ரொமோஷனில் நடந்த மோசமான சம்பவம்.. ஆபாச போட்டோ! அதிரடியாக களம் இறங்கிய காந்தாரா பட நடிகை
சென்னை: காந்தாரா (Kantara) படத்தின் மூலம் சினிமா உலகம் முழுக்க பிரபலமான நடிகை சப்தமி கவுடா, சினிமா நிகழ்ச்சிகளில் சிலரின் மரியாதையற்ற புகைப்பட, வீடியோ எடுப்புகளுக்கு எதிராக நேரடியாகக் குரல் எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் சமூக ஊடகங்களில் தன்னை மோசமாக சித்தரித்த ஒரு புகைப்படம் வைரலானதை பார்த்ததுமே அவர் கடும் அதிருப்தி அடைந்ததாக கூறியுள்ளார். "இது என்னோட விஷயம் மட்டும் இல்ல. மற்ற நடிகைகளோட பேசினப்போ, அவர்களுக்கும் இதே மாதிரி அனுபவம் இருக்கு என்று சொன்னாங்க. இதுக்கு ஒரு முடிவு கட்டணும் என்று தோணிச்சு" என்று அவர் தெரிவித்துள்ளார்.

ப்ரோமோஷனில் நடந்த சம்பவம்
சினிமா நிகழ்ச்சிகளில் காரில் இருந்து இறங்கும் நேரம், மேடைக்கு வரும்போது, அல்லது சாதாரணமாக நடந்து செல்லும் தருணங்களிலும் சிலர் தேவையற்ற கோணங்களில் வீடியோ, போட்டோ எடுத்து அதை சமூக ஊடகங்களில் பதிவேற்றுவதாக அவர் குற்றம்சாட்டினார். "இதுல படத்துக்கு என்ன பிரமோஷன்? உடல் பாகங்களை மட்டும் ஜூம் பண்ணி ஹிட்ஸ் வாங்குறது தானா பிரமோஷன்?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
புகார் கொடுக்கப்பட்டது
இந்த விவகாரத்தை வர்த்தக சபை தலைவர் ஜெயமாலாவின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளதாகவும், நடிகைகளின் கண்ணியத்தை காக்க கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். "இதுக்கு தீர்வு கிடைக்கும் வரை நாங்க பேசிக்கிட்டே இருப்போம்" என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
நடிகைகள் ஆதரவு
சப்தமி கவுடாவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ருக்மிணி வசந்த் மற்றும் திவ்யா ஸ்பந்தனா (ரம்யா) ஆகியோர், "பொது நிகழ்ச்சிகளில் பெண்களை முறையற்ற கோணங்களில் படம்பிடித்து பரப்புவது மரியாதையற்றது. இது சாதாரண விஷயம் கிடையாது" என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.
தேவையற்ற போட்டோஸ்
"நாங்கள் எங்கள் படங்களுக்காகவே நிகழ்ச்சிகளுக்கு வருகிறோம். தேவையற்ற ஜூம்-இன்கள், உடல் பாகங்களை மையப்படுத்தும் வீடியோக்கள் எல்லாம் கண்ணியத்தை மீறும் செயல்" என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
ரசிகர்கள் கருத்து
இதற்கு ரசிகர்களும் ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். "ஹீரோயின்களை ரெஸ்பெக்ட் பண்ணணும்", "இது entertainment இல்ல, harassment", "இப்படி எடுத்த வீடியோக்களுக்கு லைக்ஸ் கொடுக்குறவங்களும் சிந்திக்கணும்" போன்ற கருத்துகள் சமூக வலைதளங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன.
முன்னதாக ஜான்வி கபூர், மிருணாள் தாக்கூர் உள்ளிட்ட பலரும், சில கேமரா கோணங்கள் தங்களை சங்கடப்படுத்துவதாக வெளிப்படையாக கூறியிருந்தனர். இப்போது சப்தமி கவுடா தொடங்கிய இந்த குரல், திரையுலகில் பெண்களின் கண்ணியத்தை பாதுகாக்கும் முக்கியமான விவாதமாக மாறியுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications