karagattakaran box office: 36 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கரகாட்டக்காரன்! படத்தின் மொத்த வசூல் என்ன?
சென்னை: 36 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கரகாட்டக்காரன் திரைப்படம் எத்தனை ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது, எத்தனை ரூபாய் வசூலிக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம். வாழைப்பட காமெடியை மறக்க முடியுமா?
கரகாட்டக்காரன் என்ற திரைப்படம் ஜூன் 16, 1989 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், சந்தான பாரதி, சந்திரசேகர், கோகிலா, சண்முகசுந்தரம், காந்திமதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் ராமராஜனுக்கு பெரும் திருப்பமாக அமைந்தது.

அது போல் திரைத்துறையில் அறிமுகமான கனகாவுக்கும் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்து குவிந்தன. இந்த படத்தின் வெற்றிக்கு நகைச்சுவையும் முக்கியமான காரணமாகும். இளையராஜாவின் கிராமிய இசையில் கரகாட்டக் கலைக்கு புத்துயிரை கொடுக்கும் வகையில் அமைந்தது இந்த படம்.
நகைச்சுவை
இந்த படம் நகைச்சுவை கலந்த காதல் கதை எனலாம். ஒவ்வொரு கேரக்டரும் இதில் காமெடி செய்வார்கள். இந்த படத்தில் இரு கரகாட்ட கலைஞர்களில் யார் சிறந்தவர் என்பதும் அவர்களுக்குள்ளே நடக்கும் காதலும்தான் கதைக் களம். கிட்டதட்ட தில்லானா மோகனாம்பாள் படம் போல்தான்.

பாடல்கள் ஹிட்
நடனமா, நாதஸ்வரமா என போட்டியிட்டு பின்னர் இருவரும் காதலிப்பது போன்ற கதைதான். இந்த படத்தில் இடம் பெற்ற மாங்குயிலே பூங்குயிலே பாடல் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமடைந்தது. ராமராஜனுக்கேற்ப எஸ்பிபி பாடியிருந்தது அதை விட சிறப்பு.
கவுண்டமணி- செந்தில்
இந்த படத்தில் கவுண்டமணியும் செந்திலும் இணைந்து வயிறு வலிக்க சிரிக்கும் அளவுக்கு காமெடியில் கலக்கி இருப்பார்கள். அதிலும் வாழைப்பழ காமெடியை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது. புதிதாக பார்த்தது போல் சிரிப்பு வரும்.

மாரியம்மா மாரியம்மா
இந்த படத்தில் மாரியம்மா மாரியம்மா பாடல் கிராமங்களில் பெண்களை மெய்சிலிர்க்க வைத்தது. இதனால் இந்த பாடலுக்கு நிறைய பேர் தியேட்டரிலேயே அருள் வந்து ஆடினார்கள். தியேட்டர் வாசலில் அம்மன் சிலை வைத்து அந்த சிலை அருகே வேப்பிலை, உண்டியலை வைத்திருந்தனர்.
கற்பூர ஆரத்தி
அந்த சிலைக்கு கற்பூர ஆரத்தியும் நடந்தது. இப்படி காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட், பக்தி என அனைத்து விதமான கலவைகளும் கலந்த கரகாட்டக்காரன் படம் வெளியாகி இன்றுடன் 36 ஆண்டுகள் ஆகின்றன. கங்கை அமரன் இயக்கிய இந்த படம் ரூ 35 லட்சம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது.

450 நாட்கள்
இது சுமார் 450 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி ரூ 5 கோடி வரை வசூல் வேட்டையை நடத்தியது. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சிகளுக்காகவும், காமெடிக்காகவுமே நிறைய பேர் ரிப்பீட் மோடில் பார்த்தார்கள் எனலாம்.
9 பாடல்கள்
படத்தில் மொத்தம் 9 பாடல்கள். இந்த மான் உந்தன் சொந்தமான் என்ற பாடலை இளையராஜாவும் சித்ராவும் பாடினர். குடகு மலைக் காற்றில் பாடலை மனோ, சித்ராவும், மாங்குயிலே பாடலை எஸ்பிபி, ஜானகியும், மாரியம்மா மாரியம்மா பாடலை மலேசியா வாசுதேவனும் சித்ராவும் பாடியிருந்தனர்.
யார் பாடியது
அது போல் முந்தி முந்தி விநாயகரே என்ற பாடலை மனோ, சித்ரா, நந்தவனத்தில் ஒரு பாடலை கங்கை அமரனும் ஊருவிட்டு ஊரு வந்து பாடலை மலேசியா வாசுதேவன், கங்கை அமரனும் பாட்டாலே புத்தி சொன்னான் என்ற பாடலை இளையராஜாவே எழுதி அவரே பாடியுள்ளார். மற்ற 8 பாடல்களை கங்கை அமரன் எழுதியுள்ளார். இந்த படம் மதுரையில் ஒரு திரையரங்கில் 425 நாட்கள் ஓடியது. ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகளில் உள்ள தமிழ் ரசிகர்களுக்காகவும் திரையிடப்பட்டது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications