காரக்குழம்பு கனி வீட்டில் சாப்பிட்ட சிம்பு.. அகத்தியன் மகளாக இல்லாமல் இருந்தால்? பழசை சொன்ன பிரபலம்
சென்னை: பெரும்பாலும், சமூகவலைத்தளத்தில் ஆளுமையாக உள்ளவர்களே இந்த முறை பிக்பாஸ் வீட்டுக்கு விளையாட வந்துள்ளார்கள்.. தரை லோக்கல் டிக்கெட் லெவலுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்கள்.. இனிவரும் காலங்களில் சம்பவம் இருக்க போகிறது.. பிக்பாஸ் நிகழ்ச்சி கலக்க போகிறது" மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
Cheyyaru Balu என்ற யூடியூப் சேனலில் செய்யாறு பாலு பேசும்போது, "பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே, பிரபலமானவர்களை வீட்டுக்குள் அனுப்புவார்கள்.. நமீதா, கஞ்சா கருப்பு, ஓவியா என்றெல்லாம் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர்.. இதில் ஓவியா ஆர்மி என்று டிரெண்ட் ஆனது நினைவிருக்கலாம்.

ஆனால், இப்போதெல்லாம் சினிமா பிரபலங்கள், பிக்பாஸ் வீட்டுக்குள் வர மறுக்கிறார்களாம்,... மேலும் வீட்டுக்குள் விளையாட வருபவர்கள் எல்லாம் தங்களுக்கு போட்டியாளர்கள் கிடையாது என்றும் சொல்கிறார்கள்.. எனவே இந்த முறை பெரும்பாலும், சமூகவலைத்தளத்தில் ஆளுமையாக உள்ளவர்கள், விளையாட வந்துள்ளார்கள்..
மோசமான போட்டோக்கள்
பலூன் அக்கா என்பவரின் பெயர் அரோரா சின்கேலர்.. வின்னர் படத்தில் நடித்த கிரண், தன்னுடைய கிளாமரான வீடியோ, மோசமான போட்டோக்களுக்கு விலையை நிர்ணயித்து சோஷியல் மீடியாவில் விற்பனை செய்தார்.. இதற்கு கிரணுக்கு மிகப்பெரிய எதிர்ப்பும் வந்தது..
அப்போது கிரண் தந்த பேட்டியில், "கொரோனா நேரத்தில் படவாய்ப்புகளை இழந்து, பணத்துக்காக கஷ்டப்பட்டேன்.. நான் உதவி கேட்கவும் என்னை பலரும் நட்பிலிருந்து தூக்கி எறிந்தனர். அதனால்தான், என்னுடைய கிளாமரை காட்டி பணம் சம்பாதிக்கிறேன்" என்று விளக்கம் தந்திருந்தார்.
கிரண் போல அரோரா
கிட்டத்தட்ட கிரண் போலவே அதிரடி அறிவிப்பை வெளியிட்டவர்தான் இந்த அரோராவும்.. அதாவது, என்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தை ரூ490 தந்து சப்ஸ்கிரைப் செய்தால், ஒரு மாதத்துக்கு அன்லிமிடட்டாக பேசிட்டே இருக்கலாம்.. வீடியோ காலிலும் பேசுகிறேன், போட்டோவும் தருகிறேன் என்று அறிவித்தார்.
அரோரா இப்படி அறிவித்த ஒரு மாதத்தில், 2200 பேர் சப்ஸ்கிரைப் செய்தார்கள்.. 490 ரூபாயை ஒவ்வொருவரும் சந்தா கட்டியிருக்கிறார்கள்.. அந்தவகையில், ஒரு மாதத்துக்கு 7 லட்சம் சம்பாதிக்கிறார் அரோரா.
இப்படி பலூன் அக்கா, வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் போன்றோர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கிறார்கள் என்றாலும், இவர்களின் இமேஜ் எப்படி டேமேஜ் ஆனாலும் சரி, இந்த பிக்பாஸ் சீசனின் டிஆர்பி மட்டும் இவர்களால் கீழே இறங்கிவிடக்கூடாது.
அகத்தியன் மகள் கனி
காரக்குழம்பு கனி யார் தெரியுமா? தேசிய விருது பெற்ற முதல் தமிழ் இயக்குனர் அகத்தியனின் மகள்தான் கனி.. குக் வித் கோமாளியில் பங்கேற்று பிரபலமானார்.. காரக்குழம்பு வைப்பதில் இன்னும் ஃபேமஸ் ஆகிவிட்டார்.. கனியின் கணவர், விஷாலை வைத்து படங்களை எடுத்திருக்கிறார்..

காரக்குழம்பு கனி குக் வித் கோமாளியில் பங்கேற்றபோது, ஜட்ஜ்ஜாக வந்திருந்தார் நடிகர் சிம்பு. அப்போது கனி செய்திருந்த காரக்குழம்பை சாப்பிட்டு பார்த்துவிட்டு, கனி உங்கள் வீட்டுக்கு நான் வந்து சாப்பிட போறேன் என்றார்.. வாய்மொழியாக சும்மா சொல்லிட்டு போவார் என்றால், நிஜமாகவே திடீர்னு சிம்பு, மகத், ரக்ஷன் என எல்லாருமே கிளம்பி கனி வீட்டுக்கு சென்றிருந்தார்கள்..
காரக்குழம்புக்காக வந்த சிம்பு
இதுவே கனி அகத்தியனின் மகளாக இல்லாமல் இருந்திருந்தால், திருவின் மனைவியாக இல்லாமல் இருந்திருந்தால் இவர்கள் எல்லாம் கனி வீட்டுக்கு சென்று சாப்பிட்டிருப்பார்களா? என்று அப்போதே மீடியாக்களில் பலரும் எழுதினார்கள்.. ஆனாலும் காரக்குழம்புக்காக சிம்பு தன்னுடைய நண்பர்களுடன், கனி வீட்டுக்கு சென்றிருந்தது மிகவும் ஃபேமஸ் ஆகிவிட்டது.
இப்போது பிக்பாஸ் வீட்டிற்குள் கனி வந்துள்ளார்.. இவர் இங்கே காரக்குழம்பு வைக்க போகிறாரா? அல்லது கனியை எல்லாரும் சேர்ந்து காரக்குழம்பு வைக்க போறாங்களா? என்பது இனிதான் தெரியும்.
மதுரைக்கார பொண்ணு விஜே பார்வதி
மதுரைக்கார பொண்ணு விஜே பார்வதி விளையாட வந்துள்ளார்.. சாதாரண குடும்பத்திலிருந்து வந்து பிரபல விஜே-வாக மாறியவர்.. இவரையெல்லாம் கன்ட்ரோல் செய்யவே முடியாது.. முதல்நாளே வாட்டர்மெலன் திவாகரனை கலாய்த்து தள்ளிவிட்டார்..
மொத்தத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி கலக்க போகிறது.. தரை லோக்கல் டிக்கெட் லெவலுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்கள்.. இனிவரும் காலங்களில் சம்பவம் இருக்க போகிறது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
மதுரைக்கார பொண்ணு விஜே பார்வதி விளையாட வந்துள்ளார்.. சாதாரண குடும்பத்திலிருந்து வந்து பிரபல விஜே-வாக மாறியவர்.. இவரையெல்லாம் கன்ட்ரோல் செய்யவே முடியாது.. முதல்நாளே வாட்டர்மெலன் திவாகரனை கலாய்த்து தள்ளிவிட்டார்.. மொத்தத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி கலக்க போகிறது.. தரை லோக்கல் டிக்கெட் லெவலுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்கள் என்கிறார் செய்யாறு பாலு
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications