பிரபல நடிகரின் கடைசி நொடி.. வீக்னஸில் விழுந்த கராத்தே மணி.. ரஜினியே அவரது ரசிகராயிட்டாரு: காந்தராஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒருவேளை சினிமாவில் நடிக்க வராமல் இருந்திருந்தால், கராத்தே மணி இன்னும் கொஞ்ச காலம் இருந்திருப்பார் என்றும் அவரது தவறுதலான பழக்கவழக்கங்களே அவரது உயிரை பறித்துவிட்டது என்றும் டாக்டர் காந்தராஜ் தெரிவித்துள்ளார்.

Media circle சேனலுக்கு மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் பேட்டி ஒன்றை தந்துள்ளார். அந்த பேட்டியில், தன்னுடைய நண்பர் கராத்தே மணி பற்றி பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

karate mani rajini

காந்தராஜ் பேசும்போது, "மருத்துவ கல்லூரியில் என்னுடைய ஜூனியர் கராத்தே மணி.. படிக்கிற காலத்தில் ரொம்ப பரிதாபமாக இருப்பார்.. நாங்கள் இருவரும் என்சிசியில் இருந்தோம்.. எனக்கு இந்தி தெரியாது.. கராத்தே மணிக்கு காது அவ்வளவாக கேட்காது. இதனால், தினமும் பரேடுகளில் தப்பு தப்பான பயிற்சிகளை செய்து, 2 பேரும் நிறைய பனிஷ்மென்ட் வாங்கியிருக்கோம். ஒன்றாகத்தான் சாப்பிடுவோம். ஒன்றாகத்தான் ஃபெயில் ஆவோம். ஸ்டான்லி அருகில், துறைமுகத்தில் வேலை பார்க்கும் மாலுமிகள் வந்து தங்குமிடம் ஒன்று இருந்தது.. இந்த மாலுமிகள் எல்லாம் ஸ்டான்லியில் மாலை நேரத்தில் ஃபுட்பால் விளையாடுவார்கள்..

ஜப்பான்காரர்: அப்படி ஜப்பான் மாலுமி ஒருத்தரிடம் பழகினார் கராத்தே மணி.. அவரிடம்தான் கராத்தேவை முதன்முதலாக பயின்றார். இப்படியே நிறைய கல்லூரிகளில் கராத்தே மணி ஷோ செய்தார்.. பிறகு ஜப்பானுக்கே சென்று யாமங்குறிசசி என்பவரிடம் கராத்தே கத்துட்டு வந்தார். அப்போதுதான் "உங்க ஊர்ல இருந்துதான் கராத்தே வந்ததுதான்" என்று ஜப்பான்காரர்கள் சொன்னார்கள். பிறகுதான் எங்களுக்கு காஞ்சிபுரத்தை சேர்ந்த போதிதர்மன் என்ற பெயரையே நாங்கள் கேள்விப்பட்டோம். உடனே காஞ்சிபுரத்துக்கு ஓடிச்சென்று தேடியபோதுதான், சிறிய அளவில் போதிதர்மனுக்கு கோயில் இருந்ததை கண்டோம்.

ரஜினிகாந்த்: ஆசியாவிலேயே நல்ல ரேங்க்கில் கராத்தே மாஸ்டராக வளர்ந்தார் கராத்தே மணி.. திடீரென அவருக்கு அவருக்கு சினிமாவில் நடிக்க ஆசை வந்தது.. என்னிடம் வந்து சொன்னார்.. தேவர் பிலிம்ஸ் தண்டாயுதபாணியிடம் என்னுடைய அண்ணன், கராத்தே மணியை அறிமுகப்படுத்தினார். அவர்களுக்கும் கராத்தே மணியை மிகவும் பிடித்து போய்விட்டது. அன்புக்கு நான் அடிமை படத்தில் அறிமுகமானார் கராத்தே மணி. ரஜினிக்கும், கராத்தே மணிக்குமான தொடர்பு மிக நெருக்கமானது. கராத்தே மணியின் ரசிகராகவும் மாறிப்போனார் ரஜினி.. ரங்கா படத்தில் 2வது ஹீரோவாக நடித்தார்.

கராத்தே பெல்ட்: 3, 4 கராத்தே பெல்ட் வாங்கினவர் கராத்தே மணி. சினிமாவில் டூப் போடாமல் நடித்தார்.. ஆனால், எந்த ஸ்டண்ட் மாஸ்டரும் அவரை விரும்பவில்லை. சினிமா சண்டைப்பயிற்சி வேறு, நிஜ சண்டைப்பயிற்சி வேறு. சினிமாவுக்கேற்ற மாதிரி கொஞ்சம் மாறணும். ஆனால், இவர் தான் பயிற்சி பெற்றதையே, சினிமாவிலும் கொண்டு வர முயன்றார். இவ்வளவு பெரிய திறமைசாலியிடம் வேலை பார்க்க முடியாது என்று பலரும் விலகிவிட்டார்கள்.

சினிமாவுக்குரிய சில இலக்கணம் இருக்கு.. அதை காம்ப்ரமைஸ் செய்துக்கணும்.. டைரக்டர் சொல்றதைதான் கேட்கணும்.. இவரது மேதாவித்தனத்தாலதான், பாயும் புலி படத்தில் இவருக்கு பதில் ஜெய்சங்கர் நடிக்க வேண்டியதாயிருச்சு.

உடல் நலம் பாதிப்பு: வழக்கம்போல் தவறுதலான பாதைகளில் இறங்கினார்.. இதுதான் அவரது வாழ்க்கையையே மாற்றிவிட்டது. எல்லாவற்றையும் இழந்தார். பொருளாதாரத்தில் அடிபடவில்லை, ஆனால் ஹெல்த் மோசமாகிவிட்டது, மனரீதியான பாதிப்புக்கு ஆளானார். சில தவறான பழக்கவழக்கங்களில் இறங்கி உடம்பையே கெடுத்துக் கொண்டார். எனக்கு 2 முறை போன் செய்து, பார்க்கணும்னு சொன்னார்.. அவரது பழக்கவழக்கம் எனக்கு பிடிக்கல. நானும் போய் பார்க்கல. அவர் இறந்துட்டதா போன் வந்தது. அப்போது நான் சேலத்தில் இருந்தேன். உடனே ஓடிச்சென்று பார்த்தேன்.

லிவர் பெயிலியர்: பெரிய பெரிய புகழ்பெற்ற மனிதர்கள், கடைசியில் தடம் மாறினால் எப்படியெல்லாம் வாழ்க்கை மோசமாகும் என்பதற்கு கராத்தே மணியும் ஒரு உதாரணம். ஆனால் அவராலும் சினிமாவில் அதற்கு மேல் பாப்புலாகியிருக்க முடியாது. பாப்புலாரிட்டி போய்விட்டதும், பல துயரங்களில் சிக்கி கொண்டார். லிவர் ஃபெயிலியர் ஆகி இறந்துட்டார். ஒருவேளை நடிக்க வராமல் இருந்திருந்தால், இன்னும் கொஞ்ச காலம் இருந்திருப்பார். அவரது மகன் என்னிடம் இன்னமும் பேசிட்டுதான் இருக்கார்" என்றெல்லாம் அந்த பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+