மேடையில் வைத்தே இயக்குனர் ரத்தினகுமாரை நோஸ்கட் செய்த கார்த்திக் சுப்புராஜ்! காரணம் ரஜினி பிரச்சனை தானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் ரத்தினகுமார் 29 எனும் தலைப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி இருக்கிறது. இதையொட்டி நடந்த விழாவில் கார்த்திக் சுப்புராஜ் மேடையில் பேசும் போது இயக்குனர் ரத்தினகுமார் பேசுவது எனக்கு பிடிக்காது என்று பேசியிருக்கிறார். இது பலருடைய கவனத்தையும் பெற்று வருகிறது.

இயக்குனர் ரத்தினகுமார் இயக்கம் 29 என்ற படத்தில், ஒரு ஆணின் 29 வயதில் நடக்கும் பிரச்சனைகள், சந்தோஷங்கள், மாற்றங்கள் பற்றிய கதையாக இருக்கிறதாம். இந்த படத்தின் கதாநாயகனாக நடிகர் விது மற்றும் நாயகி ஆக பிரீத்தி அஸ்ராணி நடிக்கிறார்கள். மேலும் மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், பிரேம்குமார் உட்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரிக்கிறார்கள். அதோடு இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

Karthik Subbaraj Rathnakumar

இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய கார்த்திக் சுப்புராஜ், இந்த கதையை ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி ரத்னா என்கிட்ட சொல்லி இருக்கிறார். நாங்க அந்த கதையை தனுஷ் சாரிடம் சொன்னோம். அதற்கு அவர் கதை ரொம்ப பிடித்திருக்கிறது ஆனால் இது என்னுடைய இளமை காலத்தில் பண்ண வேண்டிய படம் இப்போ நான் ஆக்ஷன் படங்களில் நடித்து வருகிறேன் அதனால் இது போன்ற கதையில் இப்போ நடித்தால் செட்டாகாது. அதனால் இதை ஒரு இளம் நடிகர் வைத்து பண்ணினால் நன்றாக இருக்கும் என்று சொன்னாரு.

தனுஷ் சாரிடம் போய்விட்டு வந்ததால் இந்த கதையை ஓர் நல்ல நடிகர் நடித்தால் தான் சரியா இருக்கும் என்று நினைத்து அதற்காகவே சில வருடங்கள் வெயிட் பண்ணுனோம். பிறகு பட குழு விதுவை சமீபத்தில் ஆடிஷன் செய்துவிட்டு அவரையே நடிக்க வைக்கலாம் என்று சொன்னார்கள். இதை ஜிகர்தண்டா, டபுள் எக்ஸ் ரெட்ரோ படங்களுக்கு முன்னாடி சொல்லியிருந்தால் நான் வேண்டாம் என்று சொல்லி இருப்பேன். ஆனால் இப்போ அவருடைய நடிப்பை பார்த்த பிறகு எனக்கு அவர் சரியாக இருப்பார் என்று தோன்றியது.

நான் விதுவை சின்ன வயதில் பார்த்திருக்கிறேன். அப்போது நான் படம் பண்ணவில்லை. சில பசங்களை பார்த்தாலே அடிக்கணும்னு தோணுமே அதே மாதிரி அவன் இருந்தான். ஒரு நாள் என்கிட்ட நீங்க படம் பண்ணிவீங்களா என்று கேட்டான். டேய் போடான்னு சொல்லிவிட்டேன். அப்புறம் லண்டனுக்கு போய் படித்துவிட்டு திரும்ப வந்து நடிகராக போறேன்னு சொன்னான். அப்பவும் இது உனக்கு தேவையில்லாத வேலைன்னு சொல்லி அனுப்பிவிட்டேன்.

பிறகு ஆக்டிங் டிரைனிங் போயிட்டு பேட்டை படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டான் அதில் சின்ன ரோலில் நடித்து இருப்பான். இன்னொரு காட்சியில் ரஜினியுடன் நடித்திருப்பான். ஆனால் அது டெலிட் செய்யப்பட்ட காட்சி, அந்த காட்சியில் ரஜினி இவனை கில்லவேணும் அன்னைக்கு கடைசி என்பதால் நாங்கள் வேகமா அதை சூட் செய்து கொண்டிருந்தோம். ஆனால் இவனால் 300 ரீடேக் ஆனது. ரஜினியே யார் இவன் என்று கேட்டார்.

அந்த படம் முடிந்த பிறகு அவனை வேற ஏதாவது வேலைக்கு சென்று விடு என்றேன். ஆனால் அவன் அதை பர்சனலாக எடுத்துக் கொண்டிருக்கிறான். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் பண்ணும் போது சட்டாணி கேரக்டருக்கு புது முகத்தை தேடிக் கொண்டிருந்தேன் அப்போ இதை நான் செய்கிறேன் என்று வந்தான். பிறகு ஆடிஷனின் போது அவனுடைய நடிப்பை பார்த்து மிரண்டு போனேன். இத்தனை வருடமாக நடிப்பில் அவன் போட்ட உழைப்பு அசாத்தியமானது. அதனால் அவன் 29 படத்தில் நடிக்கிறான் என்று சொன்னதும் எனக்கு பயங்கர சந்தோஷம் என்று கதாநாயகனை பற்றி பேசி இருந்தார்.

பிறகு இயக்குனர் ரத்தினகுமார் பற்றி பேசியிருந்தார். அவர் பற்றி பேசும்போது எனக்கு ரத்தினகுமார் நல்ல ரைட்டர் மற்றும் டைரக்டர். நிறைய விஷயங்கள் பேசுவாரு அதில் எனக்கு பிடிக்காததையும் பேசி இருக்கிறார். இருந்தாலும் அவரை என் குடும்பத்தில் ஒருவர் போல நினைத்து மீண்டும் அவரை கூப்பிட்டு ஸ்கிரிப்டில் கவனம் செலுத்த சொன்னேன் என்று சொல்ல, அதற்கு ரத்தினகுமார் சிரித்து சமாளித்து இருந்தார்.

ஏற்கனவே லியோ பட வெற்றி விழாவில் ரத்தினகுமார் பேசிய காக்கா கழுகு கதை பெரிய அளவில் விவாதத்தை கிளப்பியது. அப்போது ரத்தினகுமார் விஜய் ரசிகர் என்பதால் ரஜினியை அட்டாக் செய்ற மாதிரி பேசியிருந்தார். ஆனால் கார்த்திக் சுப்புராஜ் தீவிர ரஜினி ரசிகர் என்பதால் இப்போது ரத்தினகுமார் பேசியது எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லி இருக்கிறாரா? என்ற விவாதம் எழுந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+