கார்த்தி பட இயக்குநர் சங்கர் தயாள் மரணம்.. பிரஸ் மீட்டில் திடீரென சரிந்து விழுந்து உயிரிழப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கார்த்தியை வைத்து "சகுனி" என்ற படத்தை இயக்கியவர் சங்கர் தயாள். சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இவர் தனது அடுத்த படத்தை இயக்கும் நிலையில், இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. செய்தியாளர் சந்திப்பின் போதே திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு சங்கர் தயாள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவுக்கு அதிர்ச்சி தரும் வகையில் நாம் பல முக்கிய பிரபலங்களை இந்தாண்டு இழந்துள்ளோம். இந்தாண்டு மட்டும் டெல்லி கணேஷ், டானியல் பாலாஜி உள்ளிட்ட பல பிரபலங்களை நாம் இழந்துள்ளோம்.

kollywood cinema

இதற்கிடையே செய்தியாளர் சந்திப்பில் நடிகர் கார்த்தி பட இயக்குநர் சங்கர் தயாளும் நெஞ்சு வலியால் உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

சகுனி இயக்குநர்:

தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தியை வைத்து 'சகுனி' என்ற படத்தை இயக்கியவர் இயக்குநர் சங்கர் தயாள். இந்த படத்தில் கார்த்தி உடன் சந்தனம், பிரகாஷ் ராஜ், கோட்டா ஸ்ரீனிவாச ராவ், ரோஜா, நாசர், ராதிகா என்று மிகப் பெரிய நட்ச்சிர பட்டாளமே நடித்து இருந்தார். 2012ஆம் ஆண்டு வெளியான இந்த படத்திற்கு ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது.

தொடர்ந்து 2016ம் ஆண்டு விஷ்ணு விஷாலை வைத்து வீர தீர சூரன் என்ற படத்தை சங்கர் தயாள் இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இருப்பினும், சில காரணங்களால் அந்த படம் வெளியாகவில்லை. இந்தச் சூழலில் தான் சுமார் 8 ஆண்டுகள் கழித்து, முதன்மை பாத்திரமாக யோகி பாபு நடிக்கக் குழந்தைகள் முன்னேற்றக் கழகம் என்ற படத்தை சங்கர் தயாள் இயக்கவிருந்தார்.

சங்கர் தயாள் மரணம்:

இந்தப் படம் குறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று (டிச. 19) நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த பிரஸ் மீட்டிற்கு இயக்குநர் சங்கர் தயாள் வந்த போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. செய்தியாளர் சந்திப்பு தொடங்க கொஞ்ச நேரம் மட்டுமே இருந்த நிலையில், திடீரென தனக்கு நெஞ்சு வலி ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இருப்பினும், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகக் குறிப்பிட்டனர். அவருக்கு வயது வெறும் 47. இயக்குநர் சங்கர் தயாளின் திடீர் மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்திற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கலகலப்பு நடிகர் மரணம்:

முன்னதாக இன்றைய தினம் ஸ்டண்ட்மேனும் நடிகருமான கோதண்டராமனும் காலமானார். இவர் சுந்தர் சி இயக்கிய கலகலப்பு படத்தில் சந்தானத்தின் அடியாளில் ஒருவராக நடித்திருந்தார். அந்தப் படத்தில் நடிகர் கோதண்டராமன் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இருப்பினும், அதன் பிறகு சாலை விபத்தில் அவருக்குக் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரியளவில் படத்தில் நடிக்க முடியவில்லை. இதற்கிடையே உடல்நலக்குறைவால் அவர் காலமானார். அவருக்கு வயது 65. இப்படி தமிழ் சினிமாவில் அடுத்த இரு மரணங்கள் நடந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+