Pandian Stores Serial: முல்லை சொன்னது அவுகளுக்கு தெரியாதே...ஆவலுடன் கதிர்!
சென்னை: கடைக்குட்டி கண்ணன் பயல் சும்மாவே இருக்க மாட்டான். எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும் அவனுக்கு. விஜய்டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடைக்குட்டி கண்ணன் நிறைய சீட்டில் ஏதேதோ எழுதி ஒரு மக்கில் போட்டுவிட்டான்.
அதை எடுங்க.. அதில் இருப்பதை செய்ங்க.. அதில் இருக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க என்று ஒரு விளையாட்டையும் ஆரம்பிச்சு வச்சுட்டான். பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம், பாரதி கண்ணம்மா குடும்பம் இரண்டின் மெகா சங்கமம் வேற.
முல்லைக்கு வரும் சீட்டில், உங்க பார்ட்னரை எவ்ளோ பிடிக்கும்னு கேள்வி வருது...கதிர் ஆவலா முல்லையின் முகத்தை பார்த்து நிக்கறான். இவளா,சட்டுன்னு சொல்லாம கண்களை உருட்டுகிறாள்.

அவுகளை எனக்கு புடிக்கும்
ஏற்கனவே ஒரு நாள், தனம், மீனா எல்லாரும் உட்கார்ந்து இருக்க, முல்லை கதிர் மேல் கொண்ட காதலில் அவனைப் பற்றி சிலாகித்து பேசிக்கொண்டு இருக்கிறாள்.. அப்போதுதான் ஆரம்பத்துல அவுகளை எனக்கு பிடிக்காதுதான்...போகப் போக அவுகளை புரிஞ்சுக்க ஆரம்பிச்சுட்டேன். அப்போதுதான் அவுக அருமையான குணம் தெரிஞ்சுது.

எம்புட்டு துடிச்சு போறாக
எனக்கு ஒண்ணுன்னா அவுக எம்புட்டு துடிச்சு போறாக... இப்போ எனக்கு அவுகளை ரொம்ப புடிக்கும்...அவுகளைத் தவிர வேற யாரை கல்யாணம் பண்ணி இருந்தாலும் இம்புட்டு சந்தோஷமா இருப்பேனான்னு தெரியலை என்று முகத்தில் இயல்பான ஒரு பரவசத்தை பரவவிட்டு கூறுகிறாள் முல்லை. இது சொன்னப்போ கதிர் அங்கெ இல்லை..அதனால அவனுக்கு தெரியாது..இப்போ ஒரு எதிர்பப்ப்பில் நின்னுகிட்டு இருக்கான்.. என்ன சொல்லப் போகிறாளோ என்று.

கதிருக்கு தெரியாதே
முல்லை எப்பவோ சொன்னது கதிருக்குத் தெரியாதே... அதனால இந்த கேள்விக்கு ஆசை காதல் மனைவி என்ன சொல்லப் போகிறாளோ என்று அவளது முகத்தை ஆர்வமாக அதே சமயம் அவளுக்கு இந்த ஆர்வம் தெரிந்துவிடக் கூடாது என்றும் பார்த்துக்கொண்டு இருக்க, அப்போதுதான் கண்களை உருட்டி பரவசமாக சிரிக்கிறாள் முல்லை. பிறகு கதிரை பார்க்கிறாள்.. கண்களை உருட்டுகிறாள்.. இதேதான் நடக்குது.

முல்லையில் வெட்க சிரிப்பு
சீரியலில் முல்லையின் வெட்க சிரிப்புத்தான் ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும். இதைத் தெரிந்துக்கொண்ட சீரியல் குழு முலையை சிரிக்க வைத்தே காலத்தை ஓட்டுகிறது. வெட்கம் மேலிட முல்லை சிரிக்கிறாள்...சொல்வதற்குள் எபிசோட் முடிஞ்சுருச்சே...கதிரைப் பற்றி என்னதான் சொல்லப் போகிறாள் முல்லை?
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications