Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சித்ரா இப்படிப்பட்டவரா.. நினைச்சுக் கூட பார்க்கலை.. கதறும் "கதிர்" குமரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சித்ரா இப்படிப்பட்டவர் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லையே என்று கதிர் கதறி அழுதுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் எத்தனை பேர் நடித்திருந்தாலும் கதிர்- முல்லை கேரக்டருக்கு தான் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது.

இந்த சீரியலின் அந்த ஜோடி தான் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தது. அதிலேயும் முல்லை கேரக்டரில் நடித்த சித்ராவை அனைவரும் தங்கள் வீட்டு பெண்ணாக தான் பார்த்து வந்தனர்.

மனதில் இடம் பிடித்த முல்லை

மனதில் இடம் பிடித்த முல்லை

அந்த அளவிற்கு அனைவரின் மனதிலும் இடத்தை பிடித்து விட்டார். ஆனால் தற்போது அவர் இல்லை என்ற செய்தியை கேட்டு ரசிகர்களும் திரைத்துறையினரும் சோகத்தில் இருக்கும்போது அவர் கூட ஒன்றாக நடித்த கதிர் அவரைப் பற்றி பல்வேறு விஷயங்களை வெளியிட்டிருக்கிறார். இந்த சீரியலில் அவர்கள் இருவரும் ஜோடியாக நடித்திருந்தாலும் பல்வேறு ரசிகர்களின் மனதிலும் இருவரும் ஜோடியாக தான் தெரிகின்றனர் .

மறக்க முடியாத கதிர் - முல்லை

மறக்க முடியாத கதிர் - முல்லை

ஆனால் கதிருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்தது என்பது பலருக்கு தெரியாத விஷயம் தான் இருந்தது. இருந்தாலும் இவர்களின் ஜோடிப் பொருத்தத்தை பார்த்து தான் பலரும் ரசித்து வந்தனர் .ஆனால் இதுவரைக்கும் ஒன்றாக நடித்தவர் எப்போதும் சந்தோஷமாக முகத்தோடு நான் பார்த்துக் கொண்டிருந்தவர் தற்போது இல்லை என்பதை நினைத்து கதறி அழுது தன்னுடைய சோகத்தை வெளியிட்டிருக்கிறார்.

கதறி அழுத குமரன்

கதறி அழுத குமரன்

பல்வேறு ரசிகர்களும் நடிகர்களும் சித்ராவை பற்றி வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் கதிராக நடிக்கும் குமரன் பேசிய வீடியோஸ்கள் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பேசாமல் தான் இருந்து கொண்டு இருக்கிறார்கள் என்றெல்லாம் ஒரு வதந்தி வந்தது .

கருத்து வேறுபாடு இல்லை

கருத்து வேறுபாடு இல்லை

இவர்களின் கருத்து வேறுபாடு காரணமாகத்தான் டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் இருவரும் ஒன்றாக கலந்து கொள்ளவில்லை என்று பல்வேறு வதந்திகள் கிளம்பி இருந்தாலும் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்றுதான் இவர்கள் நடித்துக் கொண்டிருந்தார்கள். அதுமட்டுமல்லாமல் ஃப்ரீயாக இருக்கும் நேரங்களிலும் சூட்டிங் ஸ்பாட்டில் டிக்டாக் வீடியோக்களையும் எடுத்து வெளியிட்டு வந்தனர்.

மீண்டும் வர மாட்டாரே

மீண்டும் வர மாட்டாரே

இந்த நிலையில் இவர் சித்ரா அந்த மாதிரி பண்ணி விட்டார் இந்த மாதிரி பண்ணி விட்டார் என்று அப்படி ஆக இருக்கும் இப்படியாக இருக்கும் என்று என்னுடைய கருத்தை எதுவும் நான் சொல்லவில்லை என்ன சொன்னாலும் இனி அவர் திரும்பி வரப்போவதில்லை இருந்தாலும் அவருடைய இழப்பு எங்களுக்கு எவ்வளவு பெரிய பாதிப்பாக இருக்கிறது என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது .

ஒரே குடும்பமாக வாழ்ந்தோமே

ஒரே குடும்பமாக வாழ்ந்தோமே

இரண்டு வருடம் எல்லோரும் ஒன்றாக ஒரே குடும்பமாக வாழ்ந்தோம் அதிலும் அவர் எப்போதும் பிஸியாக இருந்தாலும் தனது வேலையிலும் கடமைகளும் சரியாக இருந்தார் .நான் ஒரு நாளைக்கு ஒரு சூட்டிங் அதுவும் பாண்டியன் ஸ்டோர்ஸுக்கு மட்டும் தான் எனது கால்ஷீட் கொடுத்து இருப்பேன். ஆனால் அவர் அப்படி அல்ல காலையில் ஒரு நிகழ்ச்சியில் இருந்தால் மாலையில் இன்னொரு நிகழ்ச்சியும் இரவு ஒரு நிகழ்ச்சியும் என்று தொடர்ந்து பிசியாக இருந்து கொண்டிருப்பார் .

இதை நான் எதிர்பார்க்கலை

இதை நான் எதிர்பார்க்கலை

ஆனால் எவ்வளவு பிஸியாகவும் கமிட்மென்ட்டோடும் இருந்த இவர் திடீரென்று இந்த மாதிரி பண்ணுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சத்தியமாக நான் எதிர்பார்க்கவில்லை. பலரும் அவரைப் பற்றி சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார்கள். எப்போதும் அவருடைய சிரித்த முகத்தை மட்டும் தான் எங்களிடம் காட்டி இருக்கிறாரே தவிர சோகத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவே இல்லை.

மனசுக்குள் புதைச்சுட்டாரே

மனசுக்குள் புதைச்சுட்டாரே

அதனால் தான் இந்த மாதிரி ஒரு நிலைமை ஆகிவிட்டதோ என்று இப்போது தோன்றி இருக்கிறது . என்னிடம் கூட கூறாவிட்டாலும் யாரிடமாவது நெருங்கிய உறவினர்கள் யாரிடமாவது ஒருத்தர் இடமாவது மனசுவிட்டு கவலையை பேசியிருந்தால் இந்த மாதிரி ஒரு நெலமை வந்திருக்காது .எல்லோரும் அவரை இழந்து இப்படி வருந்திருக்க வேண்டாம் என்று கூறி இருக்கிறார்.

யாரும் இப்படி இருக்காதீங்க

யாரும் இப்படி இருக்காதீங்க

எந்த சூழ்நிலையிலும் அடுத்தவர்களுக்கு ஆறுதலை வழங்கிக் கொண்டிருந்த அவர் தனக்கும் ஆறுதலுக்கு தேவைப்படும்போது அடுத்தவர்களை நம்பி இருக்கலாம். மனசுவிட்டுப் பேசி இருந்திருந்தால் இன்று இவ்வளவு பெரிய ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்று கதறி அழுது இதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை என்று கூறியிருக்கிறார். கவலைகளை வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு மனசுக்குள்ளே யாரும் வைத்திருக்காதீர்கள் என்று கையெடுத்து கும்பிட்டு கதறி அழுதிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+