Katrin Mozhi Serial: சொன்னபடி கேளுன்னு ப்ரோமோவை சுருக்கி மாத்திட்டாங்கப்பா!
சென்னை: மாற்றம் தேவை, இதில் தவறு இருக்கிறது என்று சுட்டிக் கட்டும்போது, அதை சீர் செய்தால் நமக்கு சந்தோஷம் இருக்கும்தானே! அப்படியொரு சந்தோஷம்தான் இது.
விஜய் டிவியின் காற்றின் மொழி சன் டிவியின் கல்யாண வீடு சீரியல்களை உதாரணமாகச் சொல்லலாம். காற்றின் மொழி சீரியலில் ஒரு தவறை சுட்டிக் காட்டி இருந்தோம். இப்போது ப்ரோமோவில் அந்த தவறு ஒளிபரப்பாவதில்லை.
கல்யாண வீடு சீரியலில் பெரிய விஷயத்தை கையில் எடுத்திருக்கிறார் திருமுருகன் அதற்கு சரியான தீர்வு சொல்ல வேண்டும் என்று சொல்லி இருந்தோம். அந்த விஷயத்தை கையிலெடுத்து நீண்ட நேர காட்சி அமைத்தமைக்கு இயக்குநரே வருத்தம் தெரிவித்து வருகிறார்.

விஜய் டிவியின் சீரியல்
விஜய் டிவியில் புதிதாக அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பாக இருக்கும் காற்றின் மொழி சீரியல் ப்ரோமோ பற்றி சுட்டிக் காட்டி எழுதி இருந்தோம். அதாவது, அமெரிக்க தம்பி வந்ததிலிருந்து ஏதோ பேசணும்னு சொல்லிட்டு பேசாமலிருந்தா எப்படினு ஒரு முதியவர் கேட்கிறார். அதற்கு அமெரிக்க தம்பியாக நடித்து வரும் ராஜா ராணி சீரியல் சஞ்சீவ் சொல்லும் பதிலில் தவறை சுட்டிக் காட்டி இருந்தோம்.

இரு மின்னல்கள்
தடதட தட ன்னு இடி, கையை பந்து போல குவித்து இந்தப் பக்கம் ஒரு மின்னல் அந்த பக்கம் பக்கம் ஒரு மின்னல் என்று சொல்லி இருப்பார். மின்னல் பந்து போல எப்படி இருக்கும் என்று கேட்டு இருந்தோம். அத்தோடு, தேவதை மாதிரி அழகான பொண்ணு சைகையில பேசினான்னு சொல்லும் போது ,ரெண்டு பாட்டிமார்கள், அந்த புள்ளைக்கு பேச்சு வராது போலிருக்குன்னு பேசிக்குவாங்க. ஏ கெழவி அந்த பொண்ணுக்கு பேச்சுத்தான் வராது.. ஆனா,கண்ணு நல்லா பேசும்னு சஞ்சீவ் சொல்லி இருந்தார்.

மதிக்க கற்றுக்கொடுங்கள்
ஏ கெழவின்னு ஏன் கூப்பிடணும். பாட்டின்னு சொல்லலாமே.. வயதானவர்களை மதிக்க கற்றுக் கொடுங்கள் வித்தியாசமாக எடுக்கிறோம் என்று எதையாவது எடுப்பதை தவிர்த்தால் நன்றாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டி இருந்தோம். இப்போது அந்த இரண்டு காட்சிகளை நீக்கிவிட்டு விஜய் டிவி ப்ரோமோ வெளியிட்டு வருகிறது.

கல்யாண வீடு சீரியல்
சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில், ரோஜாவை கேங்க் ரேப் செய்யும் காட்சிகள், அவர்களுக்கு ரோஜாவே தணடனை தரும்காட்சி என்று பெரிய விஷயத்தை இயக்குநர் திருமுருகன் கையில் எடுத்து இருக்கிறார்.இதற்கு அவர் சரியான தீர்வை சொன்னால் மட்டுமே எடுபடும் என்று சொல்லி இருந்தோம். அதே போல தொலைக்காட்சி கட்டுப்பாட்டு அமைப்பு இதற்கு கண்டனம் தெரிவித்து, சன் டிவிக்கு அபராதமும் வித்தது.சீரியலின் இயக்குநர் திருமுருகன் சீரியல் ஒளிபரப்பப்படுவதற்கு முன்னர் தொடர்ந்து சில நாட்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் கட்டளை இட்டு இருந்தது.
இப்படிப்பட்ட தவறுகளை சமூக நலனுக்காக தொடர்ந்து சுட்டிக் காண்பித்து வருவோம். .மாற்றம் ஏற்பட்டால் சமூகத்துக்கு நல்லதுதானே!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications