விஜய்யோடு சேர்த்து.. கவினுக்கும் இன்னிக்கு பிறந்த நாள்.. குவிந்த வாழ்த்துகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்னைக்கு என்ன நாள் தெரியுமாங்க. சினிமா துறையில் தளபதி விஜய்க்கு பிறந்தநாள். அதுபோல ரசிகர் ரசிகைகளின் லேட்டஸ்ட் கனவு நாயகன் கவினுக்கும் இன்னைக்கு தான் பிறந்தநாள்.

இணையதளத்தில் இவர்கள் இருவருக்கும் வாழ்த்து மழை பொழிந்து கொண்டிருக்கிறது. ரசிக ரசிகைகள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். தளபதி விஜய்யின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அட்டகாசமாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் ட்விட்டரில் இதற்கு முந்தைய சாதனைகளை அடித்து துவைத்து வருகின்றனர் தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள். #HDBதளபதி விஜய் என்ற உலகம் முழுவதும் டிரிண்ட் செய்து வருகின்றனர். தற்போது வரையில் 70 லட்சம் பதிவுகளைக் கடந்து விட்டது.


கவினுக்குப் பிறந்த நாள்

கவினுக்குப் பிறந்த நாள்

மறுபக்கம் ஜூன் 22ஆம் தேதியான இன்று கவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் டுவிட்டரில் #HDBKAVIN என்று கிட்டத்தட்ட 7 லட்சம் பதிவுகளுக்கு மேல் பதிவிட்டு வருகின்றனர். கவின் இப்பொழுது ட்ரெண்டில் இருந்து கொண்டிருக்கிறார். இதனால் ரசிகர்கள் இவரை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். விஜய் பிறந்த நாளன்று கவினும் பிரபலமாகி விட்டார்.

விஜய் டிவி மூலம் அறிமுகம்

விஜய் டிவி மூலம் அறிமுகம்

நடிகர் கவினை எல்லோருக்கும் தெரியும் அவர் தொலைக்காட்சி நடிகராக ஸ்டார் விஜய் யில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார் .சரவணன் மீனாட்சியில் இரண்டாவது பாகத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்து பின்னர் புகழ் பெற்றார். அதன் பிறகு சில படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார் .அவர் லயோலா கல்லூரியில் தனது கல்லூரி வாழ்க்கையை முடித்தார்.

மாணவராக அறிமுகம்

மாணவராக அறிமுகம்

காலேஜ் முடித்த டைம்ல நடிப்பதற்கு தான் அவங்களுக்கு ரொம்ப ஆர்வமாக இருந்தாராம். அப்போதான் ஸ்டார் விஜய் உடன் விஜயில் ஆடிஷன் கலந்து கொண்டார். தொலைக்காட்சி சீரியல்ல கனா காணும் காலங்கள் மூலமாக தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியலில் அவர் ஒரு மாணவராக தோன்றியுள்ளார். அதன்பிறகு சரவணன் மீனாட்சி சீரியலில் துணை வேடங்களில் நடித்தார்.

சரவணன் மீனாட்சி 2வது பார்ட்

சரவணன் மீனாட்சி 2வது பார்ட்

பின்னர் சரவணன் மீனாட்சி இரண்டாவது பாகத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்தார் .அதுதான் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு போனது .சரவணன் மீனாட்சி இரண்டாவது பாகத்தில் சரவணன் என்ற வேட்டையன் ஆக நடித்திருப்பார். எல்லாப் பெண்களுக்கும் ரொம்பவே பிடிச்சுப் போச்சு .அவர் செய்யும் துருதுரு சேட்டைகளும் மீனாட்சிக்கு செய்யும் மீனாட்சி மேல் வைத்திருக்கும் காதலும் ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடிச்சு போச்சு.

விஜய் டிவி விருது

விஜய் டிவி விருது

சரவணன் மீனாட்சி தொடருக்காக 2015ஆம் ஆண்டிற்கான பிடித்த நடிகருக்கான விருது விஜய் தொலைக்காட்சியிலிருந்து இவருக்கு வழங்கப்பட்டது. கருத்துக்கணிப்பின் முடிவில் இவர்தான் வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து அவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்க விரும்பவில்லை அவர் சினிமாக்களில் நடிப்பதையே விரும்பினார்.

தொகுப்பாளரும் கூட

தொகுப்பாளரும் கூட

அவர் நடிகர் மட்டுமல்லாது ஒரு சிறந்த தொகுப்பாளரும் ஆவார் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாக்கள் இவர்தான் தொகுப்பாளராக செயல்பட்டார். சின்னத்திரையை தொடர்ந்து எஸ்ஆர் பிரபாகரன் அவர்களின் சத்ரியன் 2017 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் அதன்பிறகு நட்புனா என்னனு தெரியுமா போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

ஐஸ்வர்யா ஜோடி

ஐஸ்வர்யா ஜோடி

சத்ரியன் படத்தில் ஐஸ்வர்யாவுக்கு ஜோடியாக கவின் ஒரு டாக்டராக நடித்திருப்பார். இந்தப்படமும் அவரது நடிப்பில் வேற லெவல். 2019 ஆம் ஆண்டில் கவின் ஸ்டார் விஜய் யில் பிக் பாஸ் தமிழ் மூன்றில் கலந்து கொண்டார் .இந்த நிகழ்ச்சியினை கமலஹாசன் தொகுத்து வழங்கினார். இது ஒரு ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் 3 இல் கவின் இன் பங்களிப்பு அருமையாக இருந்தது.

பிக் பாஸ் கலாட்டா

பிக் பாஸ் கலாட்டா

பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது இவருக்கும் அங்கு இவருக்கும் லாஸ்லியாவுக்கும் காதலென்று கிசுகிசுப்பு வந்தது. அதற்கு அவர் நான் ஏற்கனவே எட்டு வருடங்களாக ஒரு பெண்ணை காதலிக்கிறேன் என்று கூறினார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிகழ்ச்சியில் அவர்கள் கலந்துகொண்டு மக்களின் மனதை கொள்ளை கொண்டார். இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகிச்சி. இந்த நிகழ்ச்சிக்காக இவருக்கு விருது மற்றும் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நபர் தான தங்கப்பதக்கம் விருதுகளும் கிடைத்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+