Bigg Boss 3 Tamil: பணத்துக்காகத்தான் எல்லாமேன்னு சொல்லிட்டு கிளம்பி இருக்கலாம்!
Recommended Video
சென்னை: பல்வேறு குணமுள்ள மனிதர்கள் ஒரு இடத்தில் முற்றுகை இடும்போது, அவர்கள் வெளியுலகத் தொடர்பில் இருந்து இத்தனை நாட்கள் விலகி இருப்பார்கள் என்று தெரிந்து கொண்டபின், ஒவ்வொருவரின் உண்மைத் தன்மை வெளிப்பட்டே ஆக வேண்டும்.
அப்படித்தான் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியை எடுத்துக்கொள்ள வேண்டும். இருந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயயத்தில் கவினின் நடவடிக்கை வேறு மாதிரி இருந்தது.
இனி இருந்தும் பிரயோஜனமில்லை.. கிடைத்ததை எடுத்துக் கொண்டு கிளம்ப வேண்டும் எனும்போது, கவினின் அப்பட்டமான உண்மைத் தன்மை வெளிப்படுகிறது.

பணம் கவின்
கவின் நிச்சயம் டைட்டில் வின் பண்ணவே முடியாது. அதற்கு அடுத்த கட்டம் என்பது கூட சந்தேகம்தான். இந்த பிக் பாஸ் ஹவுசுக்குக் வீட்டுப் பிரச்சனைக்காக, பணத் தேவைக்காகத்தான் வந்தேன் என்பதை முதலில் அவரே சொல்லிவிட்டார். ஆனால், இத்தனை நாட்கள் இருந்தே ஆக வேண்டும் என்கிற சூழலில் அவரின் சுய நலமும் வெளிப்பட்டது. இப்போது ஐந்து லட்சம் ரூபாய் பணத்தோடு விருப்பம் உள்ளவர்கள் வெளியே போகலாம் எனும்போது, அவரின் தேவையும் பூர்த்தியாகி விட்டது.

பணம் கிடைக்காது
வெளியேற்றப்பட்டால் பணம் கிடைக்காது. இது எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு என்று பளிச் என்று சொல்லி இருந்தால் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமல்ல, அவருக்கு வாக்களித்த மக்களுக்கும் திருப்தியாக இருந்திருக்கும். இதை ஏன் பொறுப்புடன் செய்யவில்லை? இப்படி பொறுப்பு இல்லாதவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று என்ன அவசியம்? பணத்தோடு கிளம்புகிறேன்.. இதுதான்முக்கியம் என்று ஒரு விஷயத்தை தெளிவு படுத்தாமல் பூடகமாக பேசிவிட்டு கிளம்பி இருக்கார் கவின்.

இதுதான் டிராமா
அடிக்கடி கவின் டிராமா டிராமா என்று சொல்லி, இப்போது அவரே டிராமா போட்டு கிளம்பி இருக்கார். வெற்றியை விட்டுக் கொடுப்பேன் என்று சொல்லி, சொல்லி நம்ப வைத்து, மற்ற ஹவுஸ் மேட்ஸுக்கு ஒரு வலியையும் இதன் மூலம் கொடுத்து இருக்கார் கவின். முக்கியமாக லாஸ்லியாவுக்கு இது பெரும் காதல் வலியாக அமைந்துவிட்டது.

உண்மை காதல்
தன்னை காதலித்து கொண்டு இருக்கும், தானும் காதலிப்பதாக நம்பவைத்து கொண்டு இருக்கும் லாஸிடம் கவின் உண்மையை சொல்லி இருக்கலாம். பணத்தேவை எனக்கு அதிகம் இருக்கிறது. புரிஞ்சுக்கோ.. என்னை சந்தோஷமாக வழி அனுப்பு என்று. பணத் தேவை இல்லாதவர்கள் என்று யாரும் இல்லை. இந்த உண்மையை லாஸிடம் சொல்லிவிட்டு கிளம்பி இருக்கலாம். பாவம் அந்த பேதை பெண்ணின் அழுகையை யாராலும் பார்க்க முடியவில்லை.

ஆர்மி வாக்கு
மொத்தத்தில் அவர் தனக்கு நேர்மையாக இருந்துவிட்டு போகிறேன் என்று பூடகமாக உண்மையை சொன்னாலும், மக்களுக்கும், காதலுக்கும் நேர்மையாக இருந்துவிட்டு சென்று இருக்க வேண்டும். பணத் தேவை அதற்ககாக பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்புகிறேன்.. மக்களுக்கு நன்றி என்று சொல்லி கிளம்பி இருக்க வேண்டும்.
இதை ஆர்மி ஆரம்பிப்பவர்கள், வாக்களிப்பவர்கள் உணர்ந்து செயல்பட்டால் நன்றாக இருக்கும். வாக்கு என்பது அரசியலில் எத்தனை முக்கியம் என்பதை அறியவும் இந்த மாதிரி நிகழ்ச்சிகள் பயன்படுகிறது.
-
சிறகடிக்க ஆசை: விஜயாவுக்கு கிடைத்த அதிர்ச்சி.. மீனாவுக்கு தெரிய வந்த பெரிய உண்மை.. கோபத்தில் ஸ்ருதி, ரவி -
விஜய்க்கு புது நெருக்கடி.. கமிஷனர் ஆஃபீஸில் பிக் பாஸ் ஜூலி கொடுத்த புகார்.. தவெக நிர்வாகிகளுக்கு சிக்கல் -
என் வாழ்க்கையில் இப்படி எல்லாம் நடக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.. விஜய் சேதுபதி உருக்கம் -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்?












Click it and Unblock the Notifications