கையை கிழிச்சுகிட்டான் மதன்.. கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட காவ்யா... அழகம்மை கதி!
சென்னை: சன் டிவியின் அழகு சீரியல்ல ரேவதி தினமும் தலை காட்டலேன்னாலும் அவங்க வரப்போ எல்லாம் சீரியல் களைக்கட்டுது. மத்த நேரத்துல காயத்ரி ஜெயராம் வர்றதும் நல்லாருக்கு.
காயத்ரி ஜெயராம் பிரபல சகுந்தலா தேவியா நடிச்சுருக்காங்க. அழகம்மை இளைய மருமகள் பூர்ணாவால கேஸ் விஷயத்துல இவங்களுக்கும். அழகம்மை மூத்த மருமகள் சுதாவுக்கும் மோதல் வந்துருது.
அழகம்மை கடைசி மகள் காவ்யா, சகுந்தலா தேவியின் மகன்தான் மதன்னு தெரியாம காதலிக்கறா.... தெரிஞ்சவுடனே விலகிக்க நினைச்சாலும் மதன் விடறதா இல்லை.

தெரிஞ்ச சகுந்தலா தேவி
சகுந்தலா தேவிக்கு மதன் காவ்யாவை காதலிக்கறது தெரிஞ்சு, அவங்க அழகம்மை வீட்டுல பிரச்சனை பண்ணிட்டு வேற போறாங்க. இதனால காவ்யாவை வெளியில போகவேணாம்னு பூர்ணா சொல்லியும், காவ்யா கோச்சிங் சென்டர் போகணும்னு அனுப்பி வைக்கறாங்க.

மதன்
காவ்யா அம்மா அப்பாவுக்கு தெரியாம கோயிலில் கல்யாணம் செய்துக்க சம்மதிக்க மறுக்கறா. வேற வழி தெரியாத மதன், கையை கிழிச்சுக்கறான். கல்யாணத்துக்கு சம்மதிக்கறா காவ்யா. உடனே இரு வீட்டாருக்கும் தெரிஞ்சு கல்யாணம் நடக்க இருக்கும் முருகன் கோயிலுக்கு ஓடி வர்றாங்க.

சகுந்தலா தாலியை
சகுந்தலா தேவி வந்து, மதன் காவ்யா கழுத்தில் தாலி கட்டப் போகும் நேரத்தில், பின்பக்கமாக வந்து தாலியை பறிச்சுடறாங்க. காவ்யாவை கழுத்தை பிடிச்சு தூக்கி,வேகமா தள்ளி விடறாங்க.காவ்யா அழகம்மை, பழனிசாமி காலில் போயி விழறா.

சகுந்தலா தேவி
சகுந்தலா தேவி தன் இஷ்டத்துக்கு காவ்யா குடும்பத்தை உங்க பொண்ணுதான் பணக்காரன்னு தெரிஞ்சு என் பையனை மயக்கிட்டான்னு வசை பாடறாங்க. அழகம்மைதான் பொறுமைசாலியாச்சே .. உங்க பையன்கிட்ட என்ன நடந்துச்சுன்னு கேளுங்க.. என் பொண்ணை நான் தப்பா வளர்க்கலைன்னு சொல்றாங்க.

உண்மைகளை
மதன் அழுதுகிட்டே.. அம்மா நடந்ததுல காவ்யா தப்பு ஒண்ணுமில்லைம்மா... நான்தான் அவ என்னை கல்யாணம் செய்துக்கணும்னு கையை கிழிச்சு அறுத்துகிட்டேன்னு சொல்றான். மனம் இறங்கியது சகுந்தலா தேவிக்கு.. கல்யாணத்தை கிராண்டா நடத்தணும்னு எனக்கு விருப்பம். அதனால, இப்போ நிச்சயதார்த்தம் வச்சுக்கலாம்னு சொல்றாங்க.

வைஷ்ணவியோட
சரி.. மதனுக்கும், காவ்யாவுக்கும் கல்யாணம் நடக்கும்னு அழகம்மை குடும்பத்துல வேலை பார்க்க ஆரம்பிக்கறாங்க. இங்க என்னடான்னா கல்யாணம் நடக்கும், ஆனா, நான் பார்த்து வச்சுஇருக்கற வைஷணவியோடதான் மதனுக்கு கல்யாணம் நடக்கும்னு சொல்றாங்க சகுந்தலா தேவி...
விதி படத்துல தி கிரேட் லாயர் சகுந்தலா தேவி பொய்யே சொல்ல மாட்டாங்க.. அழகு சீரியல் சகுந்தலா தேவி பொய் சொல்லுவாங்களோ.. பெண்களை ஏமாத்துவாங்களோ...
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications