சாப்பாடு விஷயத்தில் மோசமான ரூல்ஸ்! தட்டி கேட்டேன் தூக்கிட்டாங்க! கயல் சீரியல் நடிகர் பரபரப்பு!
சென்னை: கயல் சீரியலில் இருந்து பிரபல நடிகர் நீக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான காரணத்தை அவரே தெரிவித்துள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியல் மிகவும் பிரபலம். டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருக்கிறது. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் தனது சொற்ப வருமானத்தில் தனது தம்பி, தங்கைகளின் பெரிய கனவுகளை நிறைவேற்றுவதுதான் கதை.

இந்த சீரியலில் உழைப்பாளி கயல் என சொல்லலாம். கயல் கேரக்டரில் சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக சஞ்சீவ் கார்த்தி நடித்து வருகிறார். இந்த சீரியல் ஒளிபரப்பாக தொடங்கிய நாள் முதல் இன்று வரை எந்த வித போரிங்கும் இல்லாமல் ஓடி கொண்டிருக்கிறது.
இப்படி பிரபலமான சீரியலில் இருந்து ஒரு முக்கிய கதாபாத்திரம் மாற்றப்பட்டுள்ளது. இந்த சீரியலில் எழிலுக்கும் ஆர்த்திக்கும் திருமணம் நடக்கவிருந்த போது எழிலின் அத்தை மகன் பிரபு, கயல் தங்கை ஆனந்தியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிப்பார். அப்போது ஆனந்தி அவரிடம் இருந்து விடுபட்டு தப்பிக்க பிடித்து தள்ளிவிடுவார்.
அப்போது பிரபு சுவற்றில் இருந்த ஆணியில் மோதி சம்பவ இடத்திலேயே இறந்துவிடுவார். இதுகுறித்து பயந்து போயிருக்கும் ஆனந்தியை அழைத்து கயல் கேட்ட போது அவர் நடந்த உண்மைகளை சொல்ல இருவரும் சேர்ந்து அவரது சடலத்தை டிஸ்போஸ் செய்துவிடுவார்கள். இந்த பிரபு கொலை கேஸை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் வஜ்ஜிரவேல் கேரக்டரில் நடித்தவர் பிர்லா போஸ்.
இவர் நீண்ட காலமாக நடித்து வரும் சீரியல் நடிகர். அண்மையில் ஜெயிலர் படத்தில் கூட வருமான வரித் துறை அதிகாரிகளில் ஒருவராக நடித்திருந்தார். இவரது மிடுக்கான தோற்றத்திற்கு போலீஸ் வேடம்., சிபிஐ அதிகாரி உள்ளிட்ட வேடங்களில் நடிப்பார். அவரது கேரக்டர் கயல் சீரியலில் பேசப்பட்டது. மேலும் அவர் வந்த பிறகு கயல் சீரியல் சூடுபிடித்தது.
இந்த நிலையில் அவர் திடீரென நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பிர்லா போஸ் கூறுகையில், 20 ஆண்டுகளுக்கு மேலாக நான் தொலைகாட்சியில் நடித்துக் கொண்டிருக்கிறேன். சன் டிவியை பொருத்தவரைக்கு எந்த ஒரு கதாபாத்திரத்தையும் ஒரு தடவைக்கு 4 தடவை அந்த நடிகர், நடிகைகளிடம் பேசிதான் தேர்வு செய்வார்கள்.
அந்த வகையில் தான் கயல் சீரியலில் வஜ்ஜிரவேல் கதாபாத்திரத்திற்கு நான் தேர்வானேன். வஜ்ஜிரவேல் கதாபாத்திரத்திற்கு பிறகு சீரியல் சூடுபிடித்தது. எப்போதுமே செட்டில் நான் எந்த பிரச்சினையும் செய்ய மாட்டேன். ஆனால் கயல் சீரியலில் என்ன பிரச்சினை என்றால் ஒரு நாள் எனக்கு ஒரு படத்தின் ஷூட்டிங் இருந்தது. சீரியல் யூனிட்டில் முறைப்படி சொல்லி அனுமதி வாங்கிக் கொண்டுதான் போனேன்.
அங்க போன இடத்தில் கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது. அதை சரி செய்ய மறுநாள் சீரியலுக்கு தனியாக நேரம் ஒதுக்கி ஃப்ரியாகவே நடித்துக் கொடுத்தேன். அதை ஏற்றுக் கொண்டதாக அவர்கள் தெரிவித்த நிலையில் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் இதை ஒரு பிரச்சினையாகவே உருவாக்கிவிட்டார்கள்.என்னை பற்றி புகார் அளித்தார்கள். சங்கத்தில் எந்த புகாரையும் எழுத்துப்பூர்வமாக கொடுத்தால் மட்டுமே அதில் தலையிடுவார்கள். ஆனால் கயல் சீரியல் தரப்பு எழுத்துப்பூர்வமாக புகார் தரவில்லை.
எழுத்துப்பூர்வமாக தராததால் அந்த புகார் நிலைக்காது என அவர்களுக்கு நன்றாக தெரியும். அதனால்தான் அப்படி செய்தனர். புகார் தந்துவிட்டு என்னை சூட்டிங்கிற்கு கூப்பிடவே இல்லை. இந்த நிலையில் எனது கதாபாத்திரத்திற்கு வேறு ஒரு நபர் கமிட்டியாகியுள்ளார் என்பது எனக்கு தெரிந்தது. எனக்கு சம்பளமும் தரவில்லை.
இது போன்றதொரு பிரச்சினையை இதுவரை எந்த இடத்திலும் நான் சந்தித்ததே இல்லை, இதில் இயக்குநர்தான் கேம் ஆடியுள்ளார். டைரக்டர் சாப்பிட்ட பிறகுதான் ஆர்டிஸ்ட் சாப்பிட வேண்டும் என்றார்கள். அதை நான் தட்டி கேட்டேன். அதனால் டைரக்டருக்கு என் மீது கோபமா என தெரியவில்லை என்றார் பிர்லா போஸ்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications