கயல் “சைத்ரா” வீட்டில் ஹாப்பி நியூஸ்.. வாழ்த்து சொல்ல குவிந்த பிரபலங்கள்.. கேக் வெட்டி கொண்டாட்டம்
சென்னை: விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னணியில் இருக்கும் கயல் சீரியலில் நடிகை சைத்ரா கயல் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக ஆகிறது.

இந்த நிலையில் தன்னுடைய பிறந்தநாளை நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு சைத்ரா பிரம்மாண்டமாக கொண்டாடி இருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான "கல்யாணம் முதல் காதல் வரை" என்ற சீரியலின் மூலமாக தமிழ் சீரியலில் அறிமுகமான சைத்ரா ரெட்டி பல இளைஞர்களின் கிரஷ் ஆக இருந்து வந்தார். முதல் சீரியலில் நடிகை பிரியா பவானி சங்கருக்கு பதிலாக பிரியா கேரக்டரில் சைத்ரா கச்சிதமாக ரசிகர்களின் மனதில் பதிந்து விட்டார். முதல் சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்த நிலையில், அடுத்த சீரியலில் வில்லத்தனத்தால் மிரட்ட தொடங்கி விட்டார்.

ஒரு சில நடிகைகளுக்கு மட்டும்தான் வில்லத்தனம் செய்தாலும் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக வரவேற்பு கிடைக்கிறது. அதில் ஒருவர் தான் சைத்ராவும். யாரடி நீ மோகினி சீரியல் வில்லியாக நடித்து வந்த சைத்ராவிற்கு இணையத்தில் ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே இருந்தனர். அதுவும் கொரோனா காலகட்டத்தில் சைத்ராவும் அவருடைய கேர்ள் பெஸ்டிகளான நடிகை நட்சத்திரா, நடிகை ஷபானா, நடிகை ஜனனி என அனைவரும் சேர்ந்து செய்த லூட்டி பலரையும் கவர்ந்திருந்தது.
இந்த அணியில் முதல்முறையாக காதல் திருமணம் செய்தது சைத்ரா தான். அதைத் தொடர்ந்து தான் அடுத்தடுத்து ஒவ்வொரு நடிகைகளாக திருமணங்களை செய்து கொண்டனர். அதுபோல சைத்ராவின் திருமணத்திலும் அவருடைய தோழிகள் ஆட்டம் பாட்டம் போட்டு பல வீடியோக்களையும் வெளியிட்டு இருந்தனர். அதுவும் இணையத்தில் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தது.

அதுபோல இப்போது சைத்ரா சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னுடைய பிறந்தநாளுக்கு தன்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கொடுத்த சர்ப்ரைஸ் பற்றி அதில் பகிர்ந்து இருக்கிறார்.
சைத்ரா பிறந்தநாளில் வெள்ளை உடையில் குட்டி தேவதையாக வந்து இருக்க, அவருடைய கணவர் அவருக்கு ஹாப்பி பர்த்டே என்று வாழ்த்துக்களை கூற அதை தொடர்ந்து அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர். பிறகு கேக் வெட்டி சந்தோஷமாக அனைவரும் மகிழ்ந்திருக்கிறார்.

அதே நேரத்தில் என்னுடைய 28 வது பிறந்த நாளில் என்னை மிகவும் ஸ்பெஷல் ஆக உணர வைத்து அனைவருக்கும் நன்றி என்றும் சைத்ரா கூறி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதே நேரத்தில் சைத்ராவிற்கு வாழ்த்து சொல்வதற்காக பல பிரபலங்களும் அவருடைய பிறந்தநாளில் கலந்து கொண்டிருக்கின்றனர்.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications