அடேங்கப்பா.. கயலு! சூப்பர் ஸ்டாருடன் ஜோடியா?.. கலக்கல் புகைப்படத்தை கண்டு ஃபேன்ஸ் ஷாக்!
ஹைதராபாத்: கயல் சீரியல் புகழ் சைத்ரா ரெட்டி தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்துள்ளார். அவருடன் எடுத்த போட்டோவையும் சைத்ரா பகிர்ந்துள்ளார்.
சன் டிவி சீரியல்களில் டிஆர்பி வரிசையில் முன்னணியில் இருப்பது கயல் சீரியல்தான். இந்த சீரியலில் நடித்து வரும் கயல், கர்நாடகத்தை சேர்ந்தவர். விஜய் டிவியில் ஒளிப்பரப்பான 'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தவர் சைத்ரா ரெட்டி.
ஆனால் அவர் பிரபலமானது என்னவோ ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய 'யாரடி நீ மோகினி' சீரியல் மூலம் தான். இதில் ஸ்வேதா எனும் வில்லி கேரக்டரில் நடித்திருந்தார்.

ஆக்டிவ்
இவர் அஜித் நடித்த வலிமை படத்திலும் காவல் துறை அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படத்தில் லதா எனும் கேரக்டர் மிகவும் பேசப்பட்டது. இவர் அவ்வப்போது சமூகவலைதள பக்கங்களில் ஆக்டிவ்வாக இருப்பவர். அவ்வப்போது தன்னுடன் சீரியலில் நடித்து வருபவர்களுடன் ரீல்ஸ் செய்து வெளியிட்டு வருகிறார்.

வலிமை
வலிமை படத்தால் அவர் மிகவும் பிரபலமான நிலையில் ஷூட்டிங் இல்லாத நேரத்தில் தன்னை பற்றிய புகைப்படங்களை எடுத்து ரசிகர்களை மிரள வைப்பார். அண்மையில் கூட பேய்கள் சண்டை போடுவது எப்படி காட்சியாக்கப்படுகிறது என்பது குறித்த வீடியோவை வெளியிட்டிருந்தார்.

மகேஷ் பாபு
இந்த நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் சேரந்து பாம்பினோ சேமியா விளம்பரம் ஒன்றில் சைத்ரா நடித்துள்ளார். அப்போது அவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் ஷேர் செய்துள்ளார். இதன் மூலம் தனது மகிழ்ச்சியையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

சினிமாவில் ஹீரோயின் வேடம்
இதை பார்க்கும் ரசிகர்கள் சினிமாவில் ஹீரோயின் வேடத்திற்கு அனைத்து பொருத்தங்களும் சைத்ராவுக்கு பக்காவாக பொருந்தியுள்ளதாக வாழ்த்தியுள்ளனர். மேலும் பலர் வாழ்த்தி வருகிறார்கள். விளம்பர படம் என்றாலும் தெலுங்கு சூப்பர் ஸ்டாருடன் நடித்திருப்பது சைத்ராவுக்கு மிகப்பெரிய பிளஸ்ஸாகிவிட்டது.

வலிமை சூட்டிங்
வலிமை சூட்டிங் முடிந்த போதும் அஜித்துடன் சைத்ரா ரெட்டி எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலானது. அந்த படத்தில் பெரும்பாலான சீன்களில் சைத்ரா அஜித்துடன் தோன்றுவார். மேலும் பெரிய ஹீரோவாக இருந்தாலும் அஜித் ஒரு சிம்பிளான மனிதர் என நெருங்கிய நண்பர்களிடம் கூறி மகிழ்ந்து வந்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications