கயல்,சுந்தரி, ரோஜா,துளசி எல்லாருக்குமே இந்த வாரம் அதிர்ச்சியாவே இருக்கே - கிரக பலன் எப்படி இருக்கு?

கயல்,சுந்தரி, ரோஜாவுக்கு நேரமே சரியில்லாமல் இருக்கே அவர்களின் ராசிக்கு இந்த வாரம் கிரகங்கள் சாதகமாக இருக்கா? பலன் எப்படித்தான் இருக்கு என்று பார்ப்போம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கையோட கல்யாணத்துக்காக போராடும் கயல், இரண்டாவது திருமணம் செய்த கணவனோடு போராடும் சுந்தரி, அண்ணனோடு சமாதானம் ஆக காத்திருக்கும் துளசி, கண்ணுக்கு தெரியாத எதிரியை எதிர்க்கத் தயாராகி வரும் ரோஜா என சன்டிவி சீரியல் இந்த வாரம் களை கட்டியுள்ளது. மூவருமே ஏதோ ஒரு ஆபத்தில் சிக்கியுள்ளதால் அவர்களுக்கு வரும் வாரங்களில் எப்படி இருக்கும் என்று ராசி பலன் பார்த்து விடலாம்.

மாலை நேரம் ஆனாலே இல்லத்தரசிகள் பலரும் சுந்தரி, கயல்,துளசி, ரோஜா என பலரையும் பார்க்க டிவி முன்பாக அமர்ந்து விடுவார்கள். இவர்களின் குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கிறார்கள்.

தினசரியும் சந்திக்கும் பிரச்சினைகளை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை பார்த்து விவாதிப்பதுதான் பல இல்லத்தரசிகளின் வேலையே. அந்த பொண்ணு எப்படித்தான் இதை எல்லாம் சமாளிக்கிறாளோ என்று மாறி மாறி பேசி கண்ணீர் சிந்துவார்கள். அப்படியே தங்களின் சொந்தக்கதை சோகக்கதையும் பேசி ஆறுதல் பட்டுக்கொள்வார்கள்.

சுந்தரியின் கதை

சுந்தரியின் கதை

சன் டிவியில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியலில் கிராமத்து பெண் சுந்தரி சென்னையில் வசிக்கும் கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டு படும் துன்பங்களை சொல்கிறது. சுந்தரி கருப்பான பெண் என்பதால் கலரான பணக்கார அனுவை இரண்டாவதாக கல்யாணம் செய்து கொள்கிறான். கணவனின் களவாணித்தனம் சுந்தரிக்கு முதலில் தெரியாவிட்டாலும் பின்னர் எப்படியோ தெரிய வர பத்ரகாளியாக மாறுகிறாள் சுந்தரி.

குடும்பமே வந்திருக்கே

குடும்பமே வந்திருக்கே

இனி என்னோட ஆட்டத்தை பார்க்கப்போறீங்க என்று கணவன் கார்த்திக்கை எச்சரிக்கிறாள் சுந்தரி. அமைதியான சுந்தரி அதிரடி சுந்தரியாக மாறியிருக்கிறாள். ஒரே வீட்டில் கார்த்திக்கை நேருக்கு நேர் சந்திக்கும் நேரங்களில் நெருப்பில் இருப்பது போல உணர்கிறாள் சுந்தரி. கணவனின் இரண்டாவது திருமணத்தை தனது குடும்பத்திற்கு தெரியாமல் மறைத்து வருகிறாள் சுந்தரி, திடீரென்று கிராமத்தில் உள்ள அப்பத்தா, அம்மா, மாமா, அத்தை, என குடும்பத்தோடு சென்னைக்கு வந்து நிற்க அதிர்ச்சியடைகிறாள். இனி என்ன நடக்குமோ என்று பதற்றத்தோடு இருக்கிறாள். சுந்தரிக்கு நேரம் சரியாக இருக்கிறதா? நவ கிரகங்கள் சாதகமாக இருக்கிறதா?

கயலின் சோகம்

கயலின் சோகம்

கயல் சீரியலில் அதைவிட சோகம். தங்கை தேவியின் திருமணத்தை எப்படியாவது நடத்தியே ஆக வேண்டும் என்ற கவலை அக்கா கயலுக்கு உள்ளது. காதலித்து கர்ப்பமாகி இருக்கும் தேவியை அவளது காதலன் விக்னேஸ் உடன் சேர்த்து வைக்க நினைக்கிறாள். பல போராட்டங்களுக்குப் பிறகு திருமணம் நிச்சயம் வரை சென்றுள்ளது. ஆனாலும் பெரியப்பாவின் சதி வேலை அதிகமாக இருக்கிறது. அதையும் மீறி திருமணத்தை நடத்த முயற்சி செய்கிறாள் கயல்.

புதிதாக முளைத்த வில்லன்

புதிதாக முளைத்த வில்லன்

விக்னேஷின் மாமன் மகளோ விஷம் குடித்து உயிருக்கு போராடி வருகிறாள். விக்னேஷின் மாமன் தேவியை திருமணம் செய்து வைக்கக் கூடாது என்று கயலை மிரட்டுகிறான். அதையும் மீறி திருமணத்தை நடத்துவேன் என்று கயல் சொல்ல, தேவி கர்ப்பமாக இருக்கும் விசயத்தை எல்லோருக்கும் சொல்லி மானத்தை வாங்குகிறான். தனது குடும்பத்தினரை கயல் எப்படி சமாளித்து திருமணத்தை நடத்தப்போகிறாள். அவளது ராசிக்கு எல்லாமே சாதகமாக நடக்குமா?

அண்ணன்தான் எல்லாமே

அண்ணன்தான் எல்லாமே

வானத்தை போல சீரியல் துளசிக்கு அண்ணன் மேல் அத்தனை பாசம். திருமணத்திற்கு பிறகு ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம் என்று பிரித்து விடுகிறார்கள். வெற்றிலை பாக்கு கொடுத்து விருந்துக்கு அழைக்கிறான் அண்ணன் சின்ராசு. அத்தை செல்லத்தாயி உடன் சேர்ந்து விருந்துக்குப்போக துடிக்கிறாள் துளசி. மாமனார் சங்கரபாண்டியும் கணவர் ராஜபாண்டியும் துளசியை தடுக்கின்றனர். தங்கையின் பாசம் ஜெயிக்குமா? விருந்துக்கு செல்வாளா? கிரக நிலைகள் எப்படி இருக்கிறதோ?

எதிரியை சமாளிக்க தயாராகும் ரோஜா

எதிரியை சமாளிக்க தயாராகும் ரோஜா

ரோஜா சீரியலை பார்க்காத இல்லத்தரசிகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைவரின் பேவரைட்.
அம்மா அப்பா, பாட்டி குடும்பத்தோடு சந்தோஷத்தோடு இருக்கும் ரோஜாவுக்கு அனு என்ற எதிரி வீட்டிற்குள்ளேயே இருந்தாலும் நீலாம்பரி என்ற கண்ணுக்குத் தெரியாத எதிரியோடு போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ரோஜாவின் உயிரை காப்பாற்ற அனுவை வீட்டிற்குள் கூட்டிக்கொண்டு வந்து வைத்திருக்கிறான் அர்ஜூன். ஆனாலும் ஆபத்து அவளை நெருங்குகிறது. பிறந்தநாள் கொண்டாட்டம் வேறு இந்த வாரம் இருக்கிறது. ஆபத்தில் சிக்கியுள்ள ரோஜா தப்புவாளா? எதிரிகளை எதிர்கொள்ளும் அளவிற்கு கிரக நிலைகள் சாதகமாக உள்ளதா? பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+