Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த விஷயத்தால் எனது கணவர் என் பக்கத்தில் 10 நாட்கள் வரவே இல்லை! நடிகை கீர்த்தி சுரேஷ் கலகல

Subscribe to Oneindia Tamil

சென்னை: அந்த விஷயத்தால் எனது கணவர் 10 நாட்கள் என் பக்கத்தில் கூட வரவில்லை என நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்தார். தான் நடித்த படங்களில் என்னென்ன படங்கள் கணவருக்கு பிடிக்கும் என்பது குறித்தும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்திருப்பவர் மேனகா சுரேஷ். இவர் திரைப்பட தயாரிப்பாளர் ஜி.சுரேஷ் குமாரை மணந்து கொண்டார்.

television keerthy suresh

இவர் 1980 முதல் 87 வரை நடித்தார். இவர் நாகர்கோவிலை சேர்ந்தவர். திருமணமானதும் நடிப்பில் இருந்து ஓய்வு பெற்ற மேனகா, தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார். 24 ஆண்டுகளுக்குப் பிறகு , 2011 ஆம் ஆண்டில் ஃபாசில் இயக்கிய லிவிங் டுகெதர் படத்தில் ஒரு குணச்சித்திர வேடத்தில் மீண்டும் நடிக்க வந்தார்.

குருவாயூர் கோயில்

மேனகா- சுரேஷுக்கு 1987 ஆம் ஆண்டு குருவாயூர் கோயிலில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரேவதி, கீர்த்தி ஆகிய இரு மகள்கள் உள்ளனர். கீர்த்தி நடிகை, ரேவதி உதவி இயக்குநர்!

கீர்த்தி

கீர்த்தி, "பைரவா" எனும் படத்தில் அறிமுகமானார். சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கும் வாய்ப்பு கீர்த்திக்கு கிடைத்தது. "மகாநதி" எனும் அந்த படத்திற்காக தேசிய விருது கிடைத்தது. எனினும் அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

அண்ணாத்தே

அண்ணாத்தே படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்திருந்தா்ர். பின்னர் "சாணிகாகிதம்", "மாமன்னன்", "சைரன்", "ரகுதாத்தா" உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். "ரிவால்வர் ரீட்டா" படங்களிலும் நடித்திருந்தார்.

யாரை காதலிக்கிறார்

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் யாரையோ காதலிக்கிறார் என சொல்லப்பட்டது. ஆனால் அமைதியாக இருந்த அவர், திடீரென பொதுவெளியில் தனது காதலர் ஆண்டனியை அறிமுகப்படுத்தினார்.

கோவாவில் திருமணம்

இவர்களுக்கு கோவாவில் திருமணம் நடந்தது. இந்தியில் "பேபி ஜான்" படத்திலும் நடித்திருந்தார். திருமணத்திற்கு பிறகும் நடிக்க ஆண்டனி தடை செய்ததே இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆண்டனி

இந்த நிலையில் தான் நடித்த படங்களில் எந்த படம் தனது கணவருக்கு பிடிக்கும் என்பது குறித்து கீர்த்தி சுரேஷ், ஒரு பட விருது வழங்கும் விழாவில் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ஆண்டனியிடம் நான்தான் காதலை சொன்னேன்.

காதல்

எங்கள் காதலை சீக்ரெட்டாக இத்தனை காலம் வைத்திருக்கவே ரொம்ப கஷ்டப்பட்டோம். நான் நடித்த படங்களில் அவருக்கு "மகாநடி, ரகுதாத்தா" உள்ளிட்ட படங்கள் பிடிக்கும். முக்கியமாக "சாணிக்காயிதம்" படத்தில் நான் நடித்த ஜானரை அவர் விரும்புவார். அந்தப் படத்தை பார்த்துவிட்டு 10 நாட்கள் எனது பக்கத்தில் கூட அவர் வரவே இல்லை என தெரிவித்தார்.

சாணிக்காயிதம்

"சாணிக்காயிதம்" படத்தில் செல்வராகவன் நடித்திருந்தார். இந்த படம் ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. "பழி வாங்குறதுன்னா என்னன்னு தெரியுமா?" என கீர்த்தி சுரேஷ் பேசும் வசனம் அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் துப்பாக்கியுடன் பழிவாங்க துடிப்பது போலவே கதை அமைந்தது.

கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு நடிகர் விஜய், அவரது நண்பர் சஞ்சீவ் ஆகியோர் வந்திருந்தனர். கிறிஸ்தவ முறைப்படியும், ஐயங்கார் முறைப்படியும் இவர்களது திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+