பிள்ளை மனம் பித்து... என்னங்கடா.. பழமொழி மாறிப் போச்சே...!
சென்னை: சன் டிவியின் அழகு சீரியல், கண்மணி சீரியலில் பிள்ளையை நம்ப வச்சு ஏமாத்தற ரெண்டு அம்மா இருக்காங்க சார்...மதன், ஆகாஷ் ரெண்டும் நல்ல புள்ளிங்கோ சார்... அம்மாக்கள் என் இப்படி இருக்காங்க?
பணக்கார அம்மணி சகுந்தலா தேவி மகன் மதன். இவன் அழகம்மை மகள் காவ்யாவை காதலிக்கறது தெரிஞ்சு போயிருது. கல்யாணம் வரைக்கும் அம்மாவுக்கு தெரியாம மதன் போக, சகுந்தலா தேவி, சம்மதம் தெரிவிக்கறது போல தெரிவிச்சு, கல்யாணம் பண்றப்போ மணப் பெண்ணை மாத்த ஐடியா பண்றாங்க.

அழகம்மை வீட்டுகாரங்க வந்தா அவங்ககிட்ட ஒரு பேச்சு.. மகன் மதன் வந்தா அவன்கிட்ட ஒரு பேச்சுன்னு புள்ளையை ஏமாத்தறாங்க..மதனும் அம்மாவை ஏன் காவ்யா வீட்டுல தப்பா பேசறாங்கன்னு அம்மா பேச்சை நம்பி அவங்களை தப்பா நினைக்கறான். ஒரு விதத்துல இதுவும் ஏமாத்து வேலையா இருக்கு. மதன் விஷயத்துலயும் பிள்ளை மனம்தான் பித்தா இருக்கு.

கண்மணி சீரியலில் ஆகாஷ் அம்மா சவுந்தர்யாவிடம் இருந்து ஆகாஷை பிரிக்க, ஆகாஷ் சவுந்தர்யா காதலுக்கு ஆதரவா காய் நகர்த்துவது போல நகர்த்தி, கடைசியில் ஆகாஷின் காதலுக்கு வேட்டு வைக்க நினைக்கறாங்க.
இது தெரிஞ்சுக்கிட்ட ஆகாஷ், நீங்கதான் என் உலகம்னு நினைச்சேன்மா.. கேவலம் உங்க பிசினெஸ்க்காக, உங்க பார்ட்னர் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கனும்னு.. என் காதலை பிரிக்கறீங்களே...இது சரியாம்மான்னு கேட்கறான்.

அம்மா நீங்க என் நல்லதுக்குத்தான் செய்யறீங்க, என்னையும் சவுந்தர்யாவையும் சேர்த்து வைக்கத்தான் இப்படி என்னை நடந்துக்க சொல்றீங்கன்னு நீங்க சொன்னதை எல்லாம் செய்தேனேம்மா.. உங்க மேல எனக்கு ரொம்ப பாசம், மரியாதை எல்லாமே இருந்துச்சு.. பெத்த புள்ளை ஆசையை விட, உங்க பிசினெஸ், சவுந்தர்யாவை பழி வாங்கற எண்ணம் இதுதான் முக்கியமா போச்சு..

இனிமே எப்படிம்மா என் மனசுலேர்ந்து அம்மான்னு வார்த்தை வரும். வெறும் உதட்டளவுலதான் இனிமே அம்மான்னு கூப்பிட முடியும்னு சொல்லிட்டு போறான்.
அப்போ இங்க பெத்த மனம் கல்லாத்தானே சார் இருக்குது...பிள்ளை மனம்தான் பித்தா இருக்குது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications