இந்த நேரத்துக்கு இது தான் பெஸ்ட்... .காத்தாட இருக்கும்... நச்சுன்னு சொன்ன கீகி!
சென்னை: மாமியாருக்காக தானே ஒரு மாடலாக மாறி இந்த வெயிலுக்கு இதமான உடை இதுதான் என விளம்பரம் செய்து கீகீ என்னும் கீர்த்தி சாந்தனு வெளியிட்ட போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கீர்த்தி சாந்தனு என்று அழைக்கப்படும் கீர்த்தி விஜய் ஒரு தொகுப்பாளர் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் மாடலாகவும் நடிகையாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
இவர் தற்போது ஊரடங்கு நேரத்தில் வீட்டில் ப்ரீயாக ஒரு போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார் .அதை பார்த்ததும் நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்.

சூப்பர் மாடல்
தெற்றுப்பல் தெரிய கையை தூக்கி காத்து வாங்க ரொம்ப ப்ரீயாக இருக்கும் என்று இவர் போட்டுள்ள போட்டோஸ் வைரலாகியுள்ளது. பலரும் இதை ரசித்து வரவேற்றுள்ளனர் . சிலர் வழக்கம் போல கலாய்த்துள்ளனர். உங்க மீது மீது கிரஸ் வந்துவிட்டது என சிலர் பீல் பண்ணி இருக்கின்றனர் .இவருடைய இந்த போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராமில் மட்டுமல்லாமல் ட்விட்டரிலும் கலக்கி வருகிறது.

செல்ல மாமியார்
பொதுவாக மாமனார் மாமியார் என்றாலே இப்போது இருக்கும் சூழ்நிலையில் மருமகள்களுக்கு பிடிப்பதில்லை. ஆனால் கீகி வீட்டில் மொத்தமும் தலைகீழாக இருக்கிறது. கீர்த்தி விஜய் நடிகர் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து அவருடைய பெற்றோர்கள் பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமா உடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தாலும் தன்னுடைய மாமனார் மாமியாரை அம்மா அப்பா போல தான் பழகி வருகிறார்.

கலைத்துறை
இவர்கள் குடும்பமே நடிகர் குடும்பமாக இருப்பதால் இவர்களின் துறையை நன்றாக புரிந்துகொண்டு ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாகவும் இருந்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு நேரத்தில் கிகி வீட்டுக்குள்ளேயே ஒரு போட்டோ சூட்டை எடுத்துவிட்டார் .அதில் தன்னுடைய மாமியார் நடத்தி வரும் பேஷன் டிசைனிங் டிரஸ்லிருந்து வெயிலுக்கு இதமான ஒரு ஆடையை அணிந்து கொண்டு விதவிதமாக போட்டோக்களை எடுத்து குவித்திருக்கிறார் .

அழகுச் சிரிப்பு
அதுவும் தன்னுடைய தெத்துப்பல் தெரிய கலக்கலாக இவர் சிரித்தபடி வெளியிட்ட போட்டோஸ்கள் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வைரலாக பரவி வருகிறது. இவரை தொகுப்பாளராக டிவி சீரியல்களில் அடிக்கடி பார்த்திருந்தாலும் இவருடைய படபட பேச்சையும் குறும்புத் தனத்தையும் ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. இவர் டிவி நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாமல் எப்போதுமே வீட்டிலேயும் இதே மாதிரிதான் இருந்து கொண்டிருக்கிறார்

காதலித்து மணம்
கணவன் மனைவி இருவருமே காதலித்து திருமணம் செய்து கொண்டு இருந்தாலும் இப்ப வரைக்கும் காதலர்களாகத்தான் சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.இவர்களுடைய யூடியூப் சேனலில் இவர்கள் செய்யும் சேட்டைகளையும் அடிக்கடி பதிவிட்டு வருகிறார். இவருக்கு டான்ஸ் என்றால் கொள்ளை பிரியம் அதனால்தான் இவர் தன்னுடைய அம்மாவின் பிரண்ட்ஸ்களான கலா மாஸ்டர் மற்றும் பிருந்தா மாஸ்டரிடம் இருந்து டான்ஸ் கற்றுக் கொண்டிருக்கிறார் .

மனதில் இடம் பிடித்த கீகி
அதனால் தனக்கு தெரியும் டான்ஸை சில நேரங்களில் ரீல்ஸ் வீடியோக்களில் ஆடி இன்ஸ்டாகிராம், டுவிட்டரில் போஸ்ட் போட்டும் வருகிறார். இவர் முதன்முதலில் நம்ம ஊரு கலரு எனும் சீரியலில் நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்டார். 2012ஆம் ஆண்டில் மானாட மயிலாட என்ற நடன ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி தனது வாழ்க்கையை தொடங்கினாலும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் மற்றும் டான்ஸ் வெஸ்ட் டான்ஸ் என்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார் .

சமூக வலைதளத்தில் ஆக்டிவ்
அதுமட்டுமல்லாமல் பல விருது வழங்கும் நிகழ்ச்சி களிலும் இவரை தான் அதிகமாக காண முடியும் . முப்பரிமாணம் என்னும் திரைப்படத்திலும் ஒரு சிறப்பு தோற்றத்தில் தோன்றியிருக்கிறார். சில நாட்களாக இவரை திரையில் காணாமல் தவித்து வந்த இவருடைய ரசிகர்கள் மீண்டும் இவர் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக மாறியதும் ஹேப்பி ஆகி இவரை ரசித்து கமெண்டுகளை போட்டு வருகின்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications