உற்சாகம், குறும்புக்கு செம உதாரணம் கிகிதான்.. எப்படி குலுங்கிச் சிரிக்கிறார் பாருங்க!
சென்னை: தொகுப்பாளினியாக அறிமுகமாகி முன்னணி தொகுப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் கிகி விஜய் என்னும் கீர்த்தி சாந்தனு தற்போது முன்னாடி மாதிரி டிவி நிகழ்ச்சிகளில் காணப்படாவிட்டாலும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார்.
அதேபோல தனது கணவர் சாந்தனுவுடன் இணைந்து யூடியூபையும் ஆரம்பித்து அதிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். தனது இன்ஸ்டாகிராமுக்காக இவர் விதவிதமாக போட்டோ ஷூட் எடுத்து ரசிகர்களில் மனதை கவர்ந்து வருகிறார்.
சிரிப்பழகியாக அறியப்பட்ட கிகி தற்போது சேலையில் எடுத்துப் போட்டுள்ள போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

தொகுப்பாளர்
மானாட மயிலாட நிகழ்ச்சியில் அறிமுகமாகி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார் கிகி. அதுமட்டுமல்ல விருது வழங்கும் நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கியிருக்கிறார். இவருடைய படபடப்பான பேச்சும் அழகான சிரிப்பும் ரசிகர்களை கவர்ந்து இழுத்து இருக்கிறது. அது மட்டுமல்ல நடிகர் சாந்தனு சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் கிகி.

காதலித்து திருமணம்
இவரது திருமணம் காதல் திருமணமாக இருந்தாலும் இவர்கள் இரண்டு வருடம் காதலித்து கொண்டிருக்கும் போது இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக 8 வருடம் பிரேக்கப் ஆகி இருந்திருக்கிறார்கள். மறுபடியும் இவர்களுக்குள் ஏற்பட்ட புரிதல் காரணமாக சேர்ந்து இரு வீட்டாரின் சம்மதத்தோடு கலக்கலான திருமணமும் செய்து முடித்திருக்கிறார்கள்.

போட்டோஷூட்
தளபதி விஜய்தான் இவர்களது திருமணத்தில் தாலி எடுத்துக் கொடுத்தவர். திருமணத்திற்கு பிறகு மகிழ்ச்சியாக 5 வது வருட திருமண வாழ்க்கையை தொடங்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது இவருக்கு ஷூட்டிங் எதுவும் இல்லாததால் வீட்டிலேயே இருப்பதால் எல்லா கதாநாயகிகளும் போல இவரும் போட்டோ ஷூட்டை கையிலெடுத்திருக்கிறார்.

சேலையில் போட்டோஷூட்
விதவிதமான ஆங்கிளில் போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமிலும் அவர்களின் யூடிப் சேனலிலும் பதிவேற்றி வருகிறார்கள். இவரது போட்டோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. மாடல் உடையில் அடிக்கடி மேடை நிகழ்ச்சிகளில் தோன்றி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் கிகி.. இந்த நிலையில் ஒரு மாற்றத்துக்காக சேலையில் எடுத்துள்ள போட்டோஷூட் வைரலாகியுள்ளது..

குலுங்கிச் சிரிக்கிறார்
அதில் ஒரு போட்டோவில் குலுங்கி குலுங்கிச் சிரித்து போஸ் கொடுத்திருக்கிறார். இந்த போட்டோ வைரலாகியுள்ளது. சில குறும்புக்கார ரசிகர்கள், சேலையில் ரொம்பக் கவர்ச்சிகரமாக இருக்கீங்க என்றும் கலாய்த்துள்ளனர். கொஞ்ச நாளைக்கு முன்னாடி இவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களும் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வந்தது.

அழகின் ரகசியம்
இந்த போட்டோவை பார்க்கும் பலரும் திருமணம் முடிந்து இத்தனை வருடம் கழித்தும் நீங்கள் இவ்வளவு அழகாக இருப்பதற்கு காரணம் இந்த உடற்பயிற்சி தானா என்று கேட்டுக் கொண்டிருந்தனர். கிகி யோகோவிலும் பெரிய எக்ஸபர்ட் ஆவார். அவரிடமிருந்து நிறையப் பேர் யோகா கற்றுக் கொண்டும் உள்ளனர். மொத்தத்தில் உற்சாகமாக, சுறுசுறுப்பாக, இருக்க யாரை ரோல்மாடலாக எடுக்கலாம் என்றால் தாராளமாக கிகியை எடுத்துக்கலாம்.












Click it and Unblock the Notifications