பொசுக்னு கிங்காங்கை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்ட ஜெயக்குமார்.. குஷியில் பூரித்த நடிகர் கிங் காங்
சென்னை: நடிகர் கிங்காங் மகள் திருமணம் நேற்று சிறப்பான முறையில் நடைபெற்றது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.. முதலமைச்சர் ஸ்டாலின் நேரிலேயே சென்று மணமக்களை வாழ்த்தியிருந்தார்.. அதேபோல, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இந்த திருமண நிகழ்வில் பங்கேற்றனர்.. அந்தவகையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் கிஙமகள் திருமணத்துக்காக வந்திருந்து, மணமக்களை வாழ்த்தியிருந்தார். இந்த வீடியோ இணையத்திலும் வைரலாகி வருகிறது
கிங்காங்கின் இயற்பெயர் ஷங்கர் ஏழுமலை என்பதாகும்.. கிங்காங் என்ற கேரக்டரில் நடித்ததால், அதே பெயரில் நடிக்க துவங்கினார்.. தன்னுடைய பாடிலேங்குவேஜ், குரல், நடனம் போன்றவற்றால் மக்களிடம் கவனிக்கப்பட்டார்..

வடிவேலு, விவேக் போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து பல்வேறு நகைச்சுவை படங்களில் நடித்துள்ளார். இதில் வடிவேலுவுடன் நடித்த படங்கள் அத்தனை காமெடிகளும் இன்றுவரை மக்களை கவர்ந்து வருகிறது.. கிங் காங் இதுவரை 40க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்..
சொந்த தொழில்,
இதைத்தவிர, சொந்தமாகவே தொழில் செய்து வருகிறார்.. கோ-ஆர்டினேட்டர் அதாவது, கோவில் திருவிழா, திருமணம், காதுகுத்து விழாக்களில் பிரபலங்கள் கலந்து கொண்டு பேசும் வகையில் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்.

இதன்மூலம் சினிமாவில் வாய்ப்பில்லாமல் தவிக்கும் எத்தனையோ நகைச்சுவை கலைஞர்களுக்கு, தான் நடத்திவரும் மேடை நிகழ்ச்சிகள் மூலம் வேலைவாய்ப்புகளை கிங்காங் வழங்கி வருகிறார்..
தேசிய விருது - டாக்டர் பட்டம்
கிங்காங்கிற்க்கு 2017ல் வேலூர் பல்கலைக்கழக கல்லூரி, கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியிருந்தது.. நடிப்பு திறமைக்காக தேசிய விருதினை பெற்றவர் கிங்காங்.
கிங்காங்குக்கு திருமணமாகி கலா என்ற மனைவியும், பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இதில், கடந்த 2024-ல் கிங் காங்கின் இளைய மகள் 12ம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண்களை பெற்றிருந்தார்.. அதாவது 404 மதிப்பெண்கள் வாங்கி அசத்தியிருந்தார்.. இவரது மூத்த மகள் கீர்த்தனா பி.காம்., எம்.பி.ஏ படித்துள்ளார்.. இவருக்குதான் திருமணத்தை தற்போது நடத்தியருக்கிறார் கிங்காங்.
திருமண அழைப்பிதழ்
இதற்காக கடந்த சில வாரங்களாக சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு அரசியல் வாதிகளுக்கும் வீடு தேடி சென்று, தன்னுடைய மூத்த மகளின் திருமண அழைப்பிதழை கிங்காங் வழங்கி வந்தார்..
ஒவ்வொரு நபரையும் தேடி தேடிச்சென்று கிங்காங் பத்திரிகை வைத்திருந்த போட்டோக்கள், தினந்தோறும் இணையத்தில் வைரலாகி கொண்டிருந்தது.

இந்நிலையில், நேற்றைய தினம் மகளின் திருமணத்தை சென்னை பெசன்ட் நகரில் உள்ள முருகன் கோவிலில் நடத்தினார். திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.
முதலமைச்சர் வாழ்த்து
இதில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். அதேபோல், தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை மனமார வாழ்த்தினார்கள்.
அதேபோல, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், கிங்காங் வீட்டு நிகழ்வில் பங்கேற்றார்.. ஜெயக்குமாரை பார்த்ததுமே கிங்காங் வணக்கம் தெரிவித்து வரவேற்றார்.. உடனே ஜெயக்குமார், கிங்காங்கை அலேக்காக தூக்கி இடுப்பில் வைத்து கொண்டார்.. இதை கிங்காங் உட்பட அங்கிருந்தவர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை.

மணமக்கள் மகிழ்ச்சி
மணமக்களும், சுற்றியிருந்தவர்களும் கைகளை தட்டிமகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.. ஜெயக்குமாரின் இடுப்பில் ஏறி உட்கார்ந்துகொண்ட கிங்காங், சற்று எமோஷனலாகிவிட்டார்.. இதற்கு எப்படி ரியாக்ட் செய்வதென்று தெரியாமல், கண்களை துடைத்துக் கொண்டார்.. பிறகு, கிங்காங்கை இடுப்பிலிருந்து கீழே இறக்கிவிட்ட ஜெயக்குமார், மணமக்களுக்கு பரிசுப்பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இந்த திருமணத்தில் கிங்காங்கின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். சினிமா நடிகர்கள் யாருமே முத்துக்காளை உள்ளிட்டோர் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர். எனவே வரவேற்பு நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் பலரும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்தபடி யாருமே வரவில்லை.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications