3 அடி 1 அங்குலம்தான் உயரம்! பிரேக் டான்சில் கிங்! டாஸ்மாக் பக்கமே போகாத நடிகர் கிங்காங்! யார் இவர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 3 அடி 1 அங்குலம் உயரம் இருக்கும் நடிகர் கிங்காங், இன்று முதல்வர் ஸ்டாலின் முதல் சிவகார்த்திகேயன் வரை தனது மகளின் திருமண அழைப்பிதழை கொடுத்து வருகிறார். யார் அவர் என்பதை பார்க்கலாம்.

இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் அப்பு என்கிற கமல் இருப்பார். அவரை அந்த சர்க்கஸ் குழுவில் உள்ளவர்கள், சர்க்கஸ் முதலாளி மௌலி, முதலாளியின் மகள் ரூபிணி என பலரும் அன்பை செலுத்துவார்கள். அதில் ஒரு நேசம் இருக்கும்.

television kingkong

அவர் குள்ளமானவர் என்கிற வேறுபாடு தெரியக்கூடாது என்று தான் பலரும் நினைப்பதாக தோன்றும். அப்படி ஒட்டு மொத்த கேரளமும் நேசிக்கும் கேரள நடிகர் தான் 'கின்னஸ் பக்ரு' என்கிற அஜய் குமார். அவரின் திறமையை பார்த்து கேரள திரையுலகமே அவரை தூக்கி வைத்துக் கொண்டாடியது.

தமிழில் கூட டிஷ்யூம், காவலன், ஏழாம் அறிவு போன்ற படங்களில் நடித்த அவர் ஒரு கட்டத்தில் நாயகனாகவே நடிக்க வைத்தனர் மலையாள இயக்குநர்கள். அற்புதத்தீவு படத்தில் பிரத்ருவிராஜ் ஹீரோ. பக்ரு அவருக்கு சமமான இரண்டாம் ஹீரோ.

'My big father' என்கிற படத்தில் ஜெயராமுக்கு தந்தையாகவே நடித்திருக்கிறார் பக்ரு. இளையராஜா, 916 குஞ்ஞூட்டன் படங்களில் ஹீரோ. இப்படி அவரை உயரமான இடத்துக்கு கொண்டு போனது கேரளத்திரையுலகம். 'குட்டியும் கோலும்' படத்தின் இயக்குனர் பக்ரு தான்.

இப்படி ஒரு திறமையுள்ள ஆள் தான் நம்ம கிங்காங். பக்ரு அளவுக்கு இல்லையென்றாலும் கிங்காங் நல்ல நடிகன் தான். கலைப்புலி சேகரனால் 'ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்' படத்தில் அறிமுகமான சங்கர் ஏழுமலை என்கிற கிங்காங் பரவலாக அறியப்பட்டது இரண்டு படங்களில்.

ஒன்று ரஜினியின் 'அதிசயப்பிறவி'. இதில் இவர் ஆடும் ப்ரேக் டான்ஸ் அசத்தல். இரண்டாவது கவுண்டமணியின் காதலிக்கு அண்ணனாக நடித்த 'கிழக்கு கரை'. அதில் அவரும், கவுண்டமணியும் செய்யும் அலப்பறைகள் சிரித்து, சிரித்து வயிறு புண்ணாகிவிடும்.

"ஏன்டா..எறும்புக்கு பொறந்தவனே..." என கவுண்டமணி கலாய்ப்பதும், "எதுக்கு ஏன் தங்கச்சிய தேடுற?" என கிங்காங் டென்ஷனாவதும், கிங்காங்கைப் பார்த்து மணி பயப்படுவதும்.... அடடா.. இது போன்ற காமெடிகள் இப்போதைய படங்களில் இல்லையே என ஏங்க வைத்துவிடுவார்கள்.

இப்படி எனக்குப் பிடித்த நடிகர் கிங்காங். திரையுலகம் அவரை இன்னும் சின்ன சின்ன ரோல்களில் எல்லாப் படங்களிலும் நடிக்க வைத்திருக்கலாம். அப்படி சாதாரணமாக நினைத்திருந்த கிங்காங் சங்கர் சமீபத்தில் தன் மகளின் திருமணப் பத்திரிக்கையை ஒவ்வொரு செலிபிரிட்டிக்கும் கொடுத்து திருமணத்துக்கு அழைக்கும் வீடியோ பல பார்க்க நேரிட்டது.

அவரது வார்த்தைகள் தான் எத்தனை தெளிவு. மரியாதை. நல்லத்தந்தை அவர். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் கூட சங்கரை அன்போடு பேசி அனுப்பி வைக்கிறார். பிரேமலதா விஜய்காந்த், முதல்வர் ஸ்டாலின், சீமான், கமல், விஷால் சிவகார்த்திகேயன் இன்னும் பலர்.

'சாண் பிள்ளையானாலும் நான் ஆண்பிள்ளை தான்டா' என்கிற மொழிக்கேற்ப கிங்காங் திருமணம் செய்து மகளை வளர்த்து திருமணம் செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறாரென்பது தனிப்பட்ட முறையில் ரசிகனாக எனக்கு சந்தோஷமாக இருந்தது. கின்னஸ் பக்ரு அளவுக்கு பணத்தில் புரளவோ, படம் தயாரிக்கும் அளவுக்கு வளரவில்லையென்றாலும் கிங்காங் அவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது.

சங்கர் 3 அடி 1 அங்குலம். பக்ரு 2 அடி 6 அங்குலம். எந்தக்குறைகளும் இல்லாமல் காலை முதல் டாஸ்மாக்கே கதியென கிடக்கும் சில குடும்பத் தலைவர்களுக்கு படிக்க வேண்டிய பாடம் கிங்காங் சங்கர், கின்னஸ் பக்ரு போன்றோரிடம் இருக்கிறது. வாழ்க்கை எல்லோரும் வாழத்தான்..அதில் எப்படி வாழ்கிறோம் என்பது தான் நம் தனித்துவம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+