Eeramana Rojaave: அடேய்ங்களா.. ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை 5 முத்தமா?
சென்னை: வீட்டில் இருந்து வேலை பார்த்தாலும் பார்த்தார்கள் மக்கள்... இந்த டிவியில் சீரியல்கள், முத்தம் மொத்தம்னு ஒரே ஹாட்! விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியல் எப்போதும் காதல் சீன்தான்... இப்போ இன்னும் மேலே போயி முத்த காட்சி
ஈரமான ரோஜாவே சீரியலில் முதலில் கல்யாணம்... அடுத்து ஒட்டாமல் இருப்பது...மெது மெதுவா காதல்...அடுத்து ரொம்ப மெதுவா முதலிரவுன்னு அடி எடுத்து வச்ச வெற்றி மலர் ஜோடிக்கு கோடிக்கணக்கான இளசுகள் ரசிகர்கள்.
இன்னிக்கு இந்த ஜோடி ஒப்பந்தம் ஒரு மணி நேரத்துக்கு 5 முத்தமாம்.. அதை கொடுக்க மறந்தால் ஒரு முத்தத்துக்கு 2 முத்தம் வட்டியாம்.. எப்படி இருக்கு?

கொரோனாவைரஸ்
வெற்றி காட்டில் இப்போதுதான் தன்னை தேடி வந்த சாமி, இதயக் கனிக்கு கொரோனாவைரஸ் குறித்த விளக்கம்.. கிருமிநாசினின்னா என்ன.. 80 சதவிகிதம் கை கொடுப்பதன் மூலம் பரவுது. 20 சதவிகிதம் காற்றின் மூலம் பரவுது..அதனால், நாம் வாய் சுகாதாரம், கை சுகாதாரம் கடைப் பிடிக்கணும்னு கிளாஸ் எடுத்துட்டு வீட்டுக்கு வர்றான்.

புகழ் அகிலா
புகழ் ஆன் லைன் ஆர்டர் எடுக்கும் உணவு வகைகளை டெலிவரி செய்யும் வேலை பார்க்கிறான். இவன் வெயிலில் உணவு டெலிவரி செய்யும் வேலையில் படும் கஷ்டங்களை பார்த்து, மனைவி அகிலா வெயிலில் இருந்து பாதுகாப்புக்கு மோர், இளநீர் என்று கொடுத்து அனுப்புகிறாள். இதுவும் கற்றுக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

வாழ்க்கை ஆரம்பம்
மன வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிட்ட மலரும் வெற்றியும் இரவு பகல் பார்க்காமல் சந்தோஷமாக இருக்கிறார்கள். இதை பார்த்து வெற்றி பொண்டாட்டி பக்கம் சாய்ஞ்சுட்டான்னு அம்மா வெற்றியுடன் பேசாமல் இருக்க, இப்போது அம்மாவை வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று மலர், வெற்றி, அகிலா, புகழ் நால்வரும் திட்டம் போடுகிறார்கள். மாமியாரிடம் அன்பாக நடந்துக்கொண்டு அவரை தங்களது வழிக்கு கொண்டு வருவது எப்படி என்றும் கதையில் கொண்டு வருகிறார்கள்.

மணிக்கு 5 முத்தம்
அம்மாவை சந்தோஷமாக வச்சுக்கறது எப்படின்னு ஆலோசிக்க அகிலாவையும், புகழையும் வர சொல்லிட்டுத்தான் மலரிடம் வெற்றி மணிக்கு 5 முத்தம் கேட்டேன் நீ தர மறந்துட்டே... இப்போ ஒரு முத்தத்துக்கு ரெண்டு முத்தம் வட்டின்னு சொல்லி விடாப்பிடியாக கேட்டுக்கொண்டு இருக்கான். கதவை லொட்டு லொட்டுன்னு தட்டி ரொமான்ஸை கலைச்சுட்டான் தம்பி புகழ்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications