Kodeeswari: ஜிப் லாக் மாதிரி இந்த சுட்டி எத்தனை வகை ஹுசா பண்ணுது பாருங்க...!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காயத்ரி, நிகழ்ச்சித் தொகுப்பாளர் ராதிகா சரத்குமாருக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்தார். கண்களை மூடிக்க சொல்லி, காதையும் பொத்திக்க சொன்னார்.
காயத்ரியின் கணவரும், குழந்தையும் ராதிகாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார்கள். சுட்டிப் பெண், ராதிகாவுக்கு மூன்று வகையான ஹுசா கற்றுக் கொடுத்தது. அதை ராதிகாவும், சுட்டிப் பெண்ணும் சேர்ந்து செய்தது பார்க்க சுவாரஸ்யமாக இருந்தது.
கோடீஸ்வரி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வரும் ராதிகாவுக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவம். பல துறையை சார்ந்த வித்தியாசமான பெண்களை சந்தித்து. அவர்களுடன் நன்றாக பேசி, நிகழ்ச்சியை வெகு சுவரஸ்யமாக நடத்தி வருகிறார்.

தப்பு மேளம் அடித்தபடி
அரங்கின் உள்ளே தப்பு மேளம் அடித்தபடி இருவரும் என்ட்ரி ஆனார்கள். சுட்டிப் பெண் வயது 6 அல்லது 7 இருக்கலாம். அவர் மிக அருமையாக தப்பு மேளம் அடித்து, அதற்கேற்ப டான்சும் ஆடினார். காயத்ரியும் சேந்து தாளத்துக்கு ஏற்ப நாட்டுப்புற டான்ஸ் ஆடியது பார்ப்பவரை ரசிக்க வைத்தது. ராதிகா மெய்மறந்து பார்த்து ரசித்தார்.

மூன்று வகை ஹுசா
சுட்டிப் பெண், மேம் உங்களுக்கு என் ஸ்டைலில் ஹுசா சொல்லித் தரேன் மேம்.. நீங்க அதை என்கூட செய்யணும் என்று கேட்டுக்கொண்டது. ராதிகாவும் சரி என்று சம்மதிக்க இது டிரஸ் ஹுசா மேம் என்று, டிரஸில் கைவிட்டு பிடித்துக்கொண்டு ஹுசா என்று மேலிருந்து கீழ் வரைக்கும் உடலை அசைத்து டான்ஸ் செய்தது. ராதிகா புடவைக்குள்ள எப்படி கையை விடறதுன்னு யோசித்து நிற்க, நெக்லெசை பிடிச்சுக்கோங்கன்னு ஆஃப்ஷனும் கொடுத்தது.

குழந்தையும் ராதிகாவும்
குழந்தை டிரஸ் ஹுசா என்று சொல்லியபடி உடலை வளைத்து டான்ஸ் மூவ்மென்ட் போல செய்ய, அதை பார்த்த ராதிகாவும் அதையே சிரித்தபடி செய்தார். இருந்தும் குழந்தை விடுவதாக இல்லை. இப்போ டான்ஸ் ஹுசா என்று சொல்லி ஹுசா என்று டான்ஸ் பண்ணியது. ராதிகாவும் கூடவே செய்தார். அடுத்து கோழி ஹுசா என்று இரு உள்ளங்கைகளை கழுத்தை பார்த்து வைத்துக்கொண்டு மறுபடியும் ஹுசா செய்தது. ராதிகாவும் அதை சிரித்தபடி செய்தார்.

குழந்தை தனது ஸ்டைலில்
ராதிகா நிகழ்ச்சியில் ஹுசா செய்வதைத்தான் குழந்தை என் ஸ்டைலில் செய்ங்க மேம் என்று சொல்லி ராதிகாவை செய்ய வைத்தது. கோடீஸ்வரி நிகழ்ச்சி ஒரு வெகு ஜனத்தொடர்பு நிகழ்ச்சி என்பதை நன்றாக புரிந்துக்கொண்டு, அதை மிகச் சரியாக தொகுத்து வழங்கி வருகிறார் ராதிகா. சீரியல்கள் மூலம் மக்களை கவர்ந்து வரும் ராதிகாவுக்கு புகழ் சேர்க்கும் ஒரு நிகழ்ச்சியாகவே கோடீஸ்வரியும் இருக்கிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications