kodeeswari: ஆத்தாடி...தமிழ் பெண்மணிக்கு கீழ் அறுபதாயிரம் பேர் வேலை பார்க்கறாங்களா?
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சாந்தி ஏகாம்பரம் தமிழ் பெண்களை நினைத்து பெருமைப்படும் அளவுக்கு நல்ல இடத்தில் நல்ல பொஸிஷனில் இருக்கிறார்.
கோடக் மகேந்திரா நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருக்கும் சாந்தி ஏகாம்பரத்தின் கீழ் 60 ஆயிரம் பேர் வேலை பார்க்கிறார்களாம். மேனேஜிங் டைரக்டர் பொறுப்பில் இருக்கும் இவர் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டது குறித்து பெருமையாக ராதிகா பேசினார்.
சாந்தி ஏகாம்பரத்துக்கு ரஜினிகாந்த் ரொம்ப பிடிக்கும் என்று கூறி இருக்கார். ரஜினியிடம் ரொம்ப பிடித்த விஷயங்கள் குறித்தும் இவர் பேசி இருக்கார். அதாவது ரஜினியின் மேனரிசம் பிடிக்கும் என்றும், நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி என்கிற டயலாக் மிகவும் பிடிக்கும் என்றும் கூறினார் சாந்தி ஏகாம்பரம்.

ஏச்சு பிழைக்கும்
ஏச்சு பிழைக்கும் பிழைப்பே சரிதானா எண்ணிப்பாருங்கள் என்று கூறும்படி, மிகவும் வெற்றி பெற்ற இந்த நிகழ்ச்சியை வைத்து பலர் ஏமாற்றவும் செய்கிறார்களாம். இதற்கு விழிப்புணர்வு தரும் விதமாக கலர்ஸ் தமிழ் டிவியின் ட்வீட்டர் வலைத்தளத்தில், கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கோடீஸ்வரி நிகழ்ச்சி சார்பாக எந்த பணமும் கேட்கப்படுவதில்லை. நேர்காணல் முடிந்துவிட்டதால், இது தொடர்பாக பணம் கேட்டு அழைப்பு வந்தாலோ, வலைதள பக்கங்களில் செய்தி வந்தாலோ அதனை தவிர்க்கவும், காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும். என்று தெரிவித்து இருக்கிறார்கள்.

சூப்பர் ஹிட் ஷோ
கலர்ஸ் தமிழ் டிவி பெண்களுக்கு என்று பிரத்யேகமாக கல்லாப்பெட்டி, கோடீஸ்வரி என்று நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறது. இதில் கோடீஸ்வரி நிகழ்ச்சி அனைத்து தரப்பு பெண்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று அவர்களின் ஏகோபித்த வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை ராதிகா சரத்குமார் ரொம்ப அருமையாக, அதே சமயம் நிகழ்ச்சியை நடத்துவதில் மிகவும் கைதேர்ந்தவராக தொகுத்து வழங்கி வருகிறார். இந்த காரணங்களால் கோடீஸ்வரி நிகழ்ச்சி சூப்பர் ஹிட் ஷோ என்று பார்க்கப்படுகிறது.

கலந்துக்கொள்ளும் பெண்கள்
கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் பெண்கள் பொருளாதார ரீதியாக மேல்மட்டம், கீழ்மட்டம் என்று இருந்தாலும் அனைவரும் ஒருவித தனித்தன்மை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் ஹாட் சீட்டில் உட்காரும்போது நிகழ்ச்சி மேலும் களைக்கட்டி எல்லார் மனதையும் கவரும்படி இருக்கிறது. இதைத் தெரிந்துக்கொண்ட சில ஏமாற்றுக்காரர்கள் தொலைபேசி எண்களை வைத்து பெண்களை ஏமாற்றி வருவதாக அறிந்த கலர்ஸ் தமிழ் டிவி இந்த எச்சரிக்கையை விடுத்து இருக்கிறது போலும்.

ராதிகா புடவை நகைகள்
ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும் ராதிகா சரத்குமார் தான் அணிந்து இருக்கும் புடவை மற்றும் அதற்கேற்ப நகைகளை நிகழ்ச்சிக்கு முன்னர் விளக்கம் அளித்து தனி ஷூட் செய்து இருக்கிறார். அதை கலர்ஸ் தமிழ் டிவியின் ட்விட்டர் வலைத்தளத்தில் பதிவிடுகிறார்கள். சாந்தி ஏகாம்பரத்துடன் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சியில் ராதிகா பட்டுப் புடவை, அதற்கேற்ற நகைகள் என்று ஜொலிக்கிறார். இதை பார்க்கவும் பல ஆயிரம் பேர் இந்த நிகழ்ச்சியை விரும்பிப் பார்க்கிறார்கள்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications