ராதிகாவின் கோடீஸ்வரி அவதாரம்.. இன்று முதல் இரவு தோறும் 8 மணிக்கு
சென்னை: கலையரசி ராதிகாவின் புதிய அவதாரம்.. இன்று இரவு முதல் .. தினந்தோறும் 8 மணிக்கு.. அதாங்க கோடீஸ்வரி புரோகிராம் இன்று முதல் கலர்ஸ் டிவி வழியாக ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது.
ராதிகாவும் சன் டிவியும் பிரிக்க முடியாத பந்தமாக இருந்தது ஒரு காலம். அந்த அளவுக்கு வலுவான சீரியல்களையும், கேம் ஷோக்களையும் தொடர்ந்து சன் டிவி மூலமாக கொடுத்து வந்தார் ராதிகா.
இப்போது சன் டிவியிடமிருந்து விலகி வந்து விட்டார் ராதிகா. இதைத் தொடர்ந்து புதிதாக கலர்ஸ் டிவி மூலமாக தனது டிவி உலக இரண்டாவது இன்னிங்ஸை அவர் தொடங்கப் போகிறார்.

8 மணிக்கு முதல் எபிசோட்
கலர்ஸ் டிவியில் கோடீஸ்வரி கேம் ஷோ தொடங்கப் போகிறது. இது இந்தியில் ஒளிபரப்பாகும் கோன் பனேகா குரோர்பதியின் தமிழாக்கம் ஆகும். இதை ராதிகா காம்பியரிங் செய்து நடத்தவுள்ளார். இன்று இரவு 8 மணிக்கு முதல் எபிசோட் ஒளிபரப்பாகவுள்ளது.

சரத்குமார் கேம்ஷோ
இதற்கு முன்பு சரத்குமார் இதேபோன்ற ஒரு கேம்ஷோவை சன் டிவியில் செய்துள்ளா். அதைத் தயாரித்தது ராதிகாதான். இப்போது ராதிகாவே இந்த கேம்ஷோவை கலர்ஸ் டிவி வாயிலாக நடத்தவுள்ளார் என்பது ஆச்சரியமான ஒரு பொருத்தமாகும்.
|
பெண்களை சந்தித்தேன்
இதுதொடர்பாக ராதிகா சில டிவீட்டுகளைப் போட்டுள்ளார். ஒரு டிவீட்டில், அசாதாரணமான பெண்களை சந்தித்தேன். அவர்களது வாழ்க்கை முறை, அவர்களது கனவுகள் ஆகியவற்றை அறிந்தேன். அதை நிறைவேற்ற அவர்களுக்கு இது ஒரு தருணம். அதில் நானும் பங்கேற்றுள்ளேன் என்பது மகிழ்ச்சி தருகிறது. கலர்ஸ் தமிழ் டிவியை இன்று இரவு 8 மணி முதல் கோடீஸ்வரி நிகழ்ச்சியைப் பாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார் ராதிகா.
|
விளையாட்டுப் புள்ளை
இன்னொரு டிவீட்டில் ஜிப் படம் போட்டு விளையாடியுள்ளார் ராதிகா. அதாவது படப்பிடிப்புத் தளத்தில் உள்ள கேரவன் வேனிலிருந்து அவர் ஃபுல் மேக்கப்புடன் இறங்குவது போன்ற வீடியோ கிளிப்பை எடுத்து ஜிப் ஆக்கி அதைப் போட்டுள்ளார். மனசுக்குள்ள சித்திக்கு எப்பவுமே ஒரு விளையாட்டுப் புள்ளை ஒளிஞ்சிருக்கத்தான் செய்யுது இல்லை.
|
தேங்க்யூ பேபி
தனது தாயாரின் புதிய நிகழ்ச்சிக்கு வாழ்த்து கூறியுள்ளார் மகள் ரேயான். அதற்கு தேங்க்யூ பேபி என்று கூறி நன்றி சொல்லியுள்ளார் அம்மா ராதிகா. கலக்குங்க மேடம்.
|
புது பூஸ்ட்
ரசிகர்கள் பலரும் ராதிகாவுக்கு வாழ்த்துக்களைக் குவித்துக் கொண்டுள்ளனர். அவரும் மகிழ்ச்சியுடன் தனது புதிய கேம் ஷோவைத் தொடங்கப் போகிறார். ராதிகா தொட்டது எதுவுமே சோடை போனதில்லை. அந்த வகையில் கலர்ஸ் டிவிக்கும் தனது நிகழ்ச்சி மூலம் புது பூஸ்ட்டை அவர் தருவார் என்று நம்பலாம்.












Click it and Unblock the Notifications