Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Manjari: எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.. அதுவும் லட்டு போல.. மலைக்க வைக்கும் மஞ்சரி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விவேக் ஒரு படத்தில் சொல்வாரே.. எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்னு.. அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.. நடிகை மஞ்சரி வினோதினியைப் பார்த்தபோது..

தமிழ் மக்கள் மறக்க முடியாத டிவி சீரியல்களில் ஒன்றுதான் கோலங்கள். மெட்டி ஒலியின் மயக்கத்தில் மூழ்கிக் கிடந்த தமிழ் மக்களை கோலம் போட்டு மனசுக்குள் கொண்டு சென்றவர் தேவயானி. அந்த சீரியலில் நடித்தவர்தான் மஞ்சரி விநோதினி.

நல்ல பப்ளியாக இருந்த அவர் அந்த சீரியலில் தேவயானி போலவே மக்களின் கவனம் ஈர்த்தவர். அதன் பிறகு சில தொடர்களில் வந்த மஞ்சரி பின்னர் படங்களிலும் தலை காட்டினார். பின்னர் ஆளைக் காணோம்.

கண்டோம் மஞ்சரியை

கண்டோம் மஞ்சரியை

இந்த மஞ்சரியை இப்ப நாம பேஸ்புக்கில் கண்டுபிடிச்சிட்டோம்.. அட மஞ்சரி முழுசா காணாமப் போகலைங்க.. சிங்கப்பூரில் செட்டிலாகியுள்ளார். அங்கும் டிவி சீரியல்களில் நடித்து வருகிறாராம். சும்மா இல்லை.. நல்ல நல்ல ரோல்களில் நடிக்கிறாராம். நம்ம ஊரில்தான் சீரியல் வாய்ப்பு எதுவும் செட்டாகவில்லை போலும்.

ஹேர் ஸ்டைல் செம

ஹேர் ஸ்டைல் செம

இப்ப அது விஷயம் இல்லை.. மஞ்சரியின் அழகுத் தோற்றம்தான் நம்மை வெகுவாக கவர்ந்துள்ளது. சும்மா சொல்லக் கூடாது. படு க்யூட்டாக காட்சி தருகிறார் மஞ்சரி. நல்லா உடம்பு குறைச்சு இளைச்சுட்டார்.. பார்க்க படு க்யூட்டாக, இளமையாக, அழகாக இருக்கிறார். ஹேர்ஸ்டைல் செமையாக இருக்கிறது.

மஞ்சரி கம்பீரம்

மஞ்சரி கம்பீரம்

அவருக்கு அழகான ஒரு மகளும் இருக்கிறார். அம்மா மகள் என்று சொல்ல முடியாது. அக்கா தங்கச்சி என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு மஞ்சரி மெலிஞ்சுட்டார்.. இது நல்லாவும் இருக்கு. முன்பை விட கம்பீரமாக காட்சி தருகிறார் மஞ்சரி..

காத்திருக்கேன் வாய்ப்புக்கு

காத்திருக்கேன் வாய்ப்புக்கு

கோலங்கள் தொடரில் அவரது நடிப்பை யாரும் இன்னும் மறக்கவில்லை. இந்த நிலையில் அதேபோன்ற ஒரு தொடரில் மீண்டும் அவர் இப்போது தலை காட்டினால் சூப்பராக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் ஆவலாக காத்துள்ளனர். மஞ்சரியும் அதுபோன்ற நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறாராம். அமைந்தால் நடிப்பாராம்.

சாவித்திரி முக பாவம்

சாவித்திரி முக பாவம்

கோலங்கல் சீரியலில் நடிக்கும்போது இயக்குநர் திருச்செல்வம் சொல்வாராம். உன் முக பாவனையை நடிகையர் திலகம் சாவித்திரி மாதிரி அடிக்கடி மாத்திக்கிட்டு நடிக்கிறேன்னு பாராட்டினாராம். காலம்தான் எத்தனை வேகமாக ஓடி விடுகிறது பாருங்கள். நேற்றுதான் கோலங்கள் பார்த்தது போல இருந்தது.. அதன் பிறகு எத்தனை எத்தனை கோலங்களை இந்த காலம் காட்டி விட்டது..

ம்ம். சீக்கிரம் வாங்க மஞ்சரி.. நல்ல நடிப்புக்காக ரசிக்க காத்திருக்கோம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+