Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூமாப்பட்டி தங்கபாண்டியனின் ஆபாச பதிவு? ஏறிய டிவிக்களின் டிஆர்பி.. பார்த்திபன் ஏன் வந்தாரு: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிவி சீரியல்களுக்கான ஷூட்டிங், மாதத்துக்கு 15 நாட்கள்தான் இருக்கும்.. இதில் இவர்களுக்கு மாதம் ஒன்றரை லட்சம் சம்பளம் கேட்டகிரி பொறுத்து கிடைக்கும்.. இதில் 2ம் கட்ட, 3ம் கட்ட நடிகர், நடிகைகளின் சம்பளம் இன்னும் குறைவானதே.. இதனால் மற்ற 15 நாட்கள் ஷூட்டிங் இல்லாதபோது, இதுபோன்றவர்களை டிவி ஷோக்கள் பயன்படுத்தி கொள்கின்றன. இதனால் கோடிகளில் டிவி சேனல்களுக்கு வருமானம் கொட்டுகிறது என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி கருத்து தெரிவித்துள்ளார்.

ஏங்க என்ற ஒற்றை வார்த்தை மூலம் பிரபலமானவர் கூமாப்பட்டி தங்கபாண்டியன்.. இவர் சமீபத்தில் ஒரு சேனலில் பிரபல சீரியல் நடிகை சாந்தினி பிரகாஷூடன் இணைந்து டான்ஸ் ஆடியிருந்தார்.

Television Koomapatti Thangapandi Parthiban

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் வில்லியாக நடித்து வருபவர் சாந்தினி பிரகாஷ்.. சன்டிவியில் ஒளிபரப்பான 'பிரியமானவள்' தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமாகி, 'ராஜா ராணி', 'சரவணன் மீனாட்சி', 'காற்றின் மொழி' உள்ளிட்ட சீரியல்களில் நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர்..

கூமாப்பட்டி தங்கபாண்டியன்

இதனை தவிர, 'டார்லிங் டார்லிங்', 'சுமங்கலி', 'பூவே பூச்சுடவா', 'வானத்தை போல', 'அபி டெய்லர்' போன்ற தொடர்களில் நடித்தவர்.. விஜய் டிவியில் 'ஜோடி நம்பர் 1' டான்ஸ் ரியாலிட்டி ஷோவின் 8-வது சீசனில் கலந்துகொண்டவர்.. சமீபத்தில் ஒரு சேனலில் கூமாப்பட்டி தங்க பாண்டியுடன், சாந்தினி இணைந்து ஆடிய டான்ஸ் பலரையும் கவனிக்க வைத்தது..

இதில், சாந்தினியுடன் கூமாப்பட்டி தங்கபாண்டியன் நெருக்கமாக டான்ஸ் ஆடியதாக விமர்சனங்கள் எழுந்தன.. அதுமட்டுமல்ல, தங்கபாண்டி ஒரு கோமாளி, இப்ப வாழ்வைப் பாருங்க, இப்படியா நெருக்கமான டான்ஸ் ஆடுவது? என்றும் கமெண்ட்களை சோஷியல் மீடியாவில் இணையவாசிகள் பதிவிட்டனர்..

நடிகை சாந்தினி பிரகாஷ் பாராட்டு

இதையடுத்து, கூமாபட்டி தங்கபாண்டி பற்றி சாந்தினி பிரகாஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அதில், திறமை எங்க இருந்தாலும் அதனை நாம் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அவரை நிறைய பேர் கோமாளின்னு நினைச்சிட்டு இருக்காங்க.. அவர் கோமாளி கிடையாது. அவர் ஒரு ஹீரோ. அவர் மாதிரி யாரும் வர முடியாது. அவர் என்கூட நெருக்கமான டான்ஸ் ஆடியதை பார்த்து சில பேர் அவரை பற்றி தப்பா பேசறாங்க.. ஆனால் அவர் ரொம்ப நல்லவர். அவருக்கு என்கூட அப்படியே ஆட விருப்பமில்லை. நான்தான் இதில் இப்படி தான் இருக்கணும்ன்னு சொல்லி ஆடவைத்தேன்.

அவருக்கிட்ட பல நல்ல குணங்கள் இருக்கு. குறிப்பாக அவர் பெண்களுக்கிட்ட ரொம்பவே அன்பான நடந்து கொள்கிறார். யாரும் அவர் பற்றி தப்பாக பேசாதீங்க என்று கூறியிருந்தார் சாந்தினி.

கோடிக்கணக்கில் கொட்டும் பணம்

இந்நிலையில், AramNaadu என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் உமாபதி, மாடு மேய்ப்பவர்கள், கஞ்சா விற்றவர்கள் என யாரை வேண்டுமானாலும் அழைத்து வந்து ஷோ செய்வது தற்போதெல்லாம் டிவிக்களில் அதிகரித்துவிட்டது.

பொதுவாக, டிவி சீரியல்களுக்கான ஷூட்டிங், மாதத்துக்கு 15 நாட்கள்தான் இருக்கும்.. இதில் இவர்களுக்கு மாதம் ஒன்றரை லட்சம் சம்பளம் கேட்டகிரி பொறுத்து கிடைக்கும்.. இதில் 2ம் கட்ட, 3ம் கட்ட நடிகர், நடிகைகளின் சம்பளம் இன்னும் குறைவானதே.. இதனால் மற்ற 15 நாட்கள் ஷூட்டிங் இல்லாதபோது, வருமானத்துக்கு கஷ்டப்படுகிறார்கள்.. இதுபோன்றவர்களை டிவி ஷோக்கள் பயன்படுத்தி கொள்கின்றன.

ஆபாச சைகை வீடியோக்கள்

கூமாப்பட்டிக்கு வாங்க என்பது டீசன்ட்டான வீடியோவை அனைவருமே பார்த்தார்கள்.. ஆனால், இந்த வீடியோவுக்கு இதுக்கு முன்னாடி, இதே நபர் வேறென்னென்ன செய்தார் என்பதை அவரது வீடியோக்களை மக்களே சென்று பார்த்து கொள்ளட்டும்.... முழுக்க முழுக்க ஆபாசமான சைகைகளுடன் அந்த வீடியோக்கள் உள்ளன.. நான் இவரை மட்டும் சொல்லவில்லை.. இப்படி பல பேர் சோஷியல் மீடியாவில் உண்டு..

டி.ராஜேந்தர், பார்த்திபன்

இதுபோன்றவர்களை அழைத்து ஷோ செய்யும்போது, சேனல்களுக்கு கோடிகளில் பணம் கொட்டுகிறது. கூமாப்பட்டி நபரின் நிகழ்ச்சிக்கு பிரபல டைரக்டர் டி.ராஜேந்தர் சென்றிருக்கிறார்.. தெரிந்துதான் அந்த நிகழ்ச்சியில் டிஆர் பங்கேற்றாரா? தெரியவில்லை.. பார்த்திபனும் நடுவராக சென்றிருக்கிறார். இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கெல்லாம் மல்ட்டி நேஷனல் கம்பெனிகள்தான் ஸ்பான்சர் செய்கின்றன.

சம்பந்தப்பட்ட சேனலுக்கு பல காலமாகவே டிஆர்பி ஏறாமல் இருந்தன.. இதற்கு பிறகுதான், கள்ளக்காதல்கள், முறைகேடான உறவு போன்றவை குறித்து ஷோ செய்து, அதற்கு பிறகே டிஆர்பியில் மேலே வந்தார்கள் என்றெல்லாம் தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+