ஜெகந்நாதனுக்கும் பூங்குழலிக்கும் திருமணம் செய்து வைத்த கலக்க போவது யாரு பாலா.. யார் இவங்க?
சென்னை: தனது தாய், தந்தையருக்கு 60ஆவது திருமணத்தை செய்து வைத்தார் கலக்க போவது யாரு புகழ் பாலா. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
பாலா ஸ்டான்ட் அப் காமெடியனாக தனது கரியரை தொடங்கியவர். இவருக்கு விஜய் டிவி பாலா என்ற பெயரும் உண்டு. விஜய் டிவி மூலமே இவர் வெளியுலகிற்கு அறிமுகமானார்.

கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த கலக்க போவது யாரு சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலா, அந்த நிகழ்ச்சிக்கான பட்டத்தை காமெடி நடிகர் சந்தானத்திடம் இருந்து பெற்றார். இவர் ஜுங்கா, தும்பா, காக்டெய்ல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சூப்பர் சிங்கர், 90ஸ் கிட்ஸ் வெர்சஸ் 2கே கிட்ஸ், அது இது எது (சிரிச்சா போச்சு) உள்ளிட்ட ஷோக்களிலும் நடித்துள்ளார். இவர் லைம்லைட்டுக்கு வந்தது குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம்தான். அது போல் அவர் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் நடித்த போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்திருந்தார்.

காரைக்காலை சேர்ந்த பாலா குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இவரது காமெடிகள் சிறப்பாக இருக்கும். அதே சமயம் இவர் மற்ற நடிகர், நடிகைகளை போல் இமிடேட் செய்யும் காட்சிகளை சம்பந்தப்பட்டவர்களே ரசித்து விழுந்து விழுந்து சிரிப்பார்கள். குக் வித் கோமாளி சீசன் 3 இல் வித்யுலேகா ராமனை வச்சு செய்துவிட்டார்.
அது போல் சீசன் 1 இல் வனிதா விஜயகுமாரை அக்கா அக்கா என மரியாதையாக அழைத்து கலாய்த்துவிட்டார். அவரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. அதுதான் பாயிண்ட். இது போல் பெரிய நடிகைகளை கிண்டல் செய்தும் அவர்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் விழுந்து விழுந்து சிரிப்பதை பாலாவும் புகழும் பாராட்டியுள்ளார்கள், மெய்சிலிர்த்து போயுள்ளார்கள்.

பாலா கடைசியாக நடித்த படம் ரிப்பீட் ஷூ ஆகும். இவர் மிகவும் கஷ்டப்படும் நிலையில் கூட ஏழைகளுக்காக கஷ்டப்படுகிறார். ஏழை குழந்தைகள் படிக்க உதவி செய்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1 மில்லியன் பாலோயர்ஸ்கள் உள்ளனர். ஆதரவற்ற முதியோர்களுக்கும் உதவி வருகிறார். 5 ஆண்டுகளாக அந்த முதியோர் இல்லத்திற்கு ஒரு ஆம்புலன்ஸ் வாங்க வேண்டும் என்ற கனவில் இருந்த பாலா, அதை தனது பிறந்தநாளின் போது நனவாக்கினார்.
அது போல் சிகிச்சைக்கு பணமில்லாமல் தவித்து வந்த நடிகர் பாவா லட்சுமணனை நேரில் சந்தித்து தன்னால் இயன்ற பண உதவியையும் பாலா செய்திருந்தார். இந்த நிலையில் அவர் தனது பெற்றோருக்கு சஷ்டியாப்தபூர்த்தி விழா நடத்தியுள்ளார். அதாவது 60 ஆவது கல்யாணம். இதுகுறித்த வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அந்த ட்வீட்டில் அவர் என்னுடைய பெற்றோர் ஜெகநாதன் பூங்குழலி தம்பதிக்கு 60ஆவது திருமணம் செய்து வைத்ததற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார். பாலாவுக்கு பலர் வாழ்த்து கூறி வருகிறார்கள். பாலாவின் அப்பா பார்ப்பதற்கு பாலா போல் இருக்கிறார். ஒரு தம்பதிக்கு திருமணமாகி பிள்ளைகள் பிறந்து பெயரன் பேத்தி எடுத்ததும் 60-ஆவது திருமணம், 80-ஆவது திருமணத்தை பிள்ளைகள் நடத்தி வைப்பது என்பது எத்தனை புண்ணியம் தெரியுமா? அதிலும் அந்த திருமணத்தின் போது அவர்கள் சிறியவர்களுக்கு ஆசி வழங்குவதற்கு அத்தனை சக்தி இருக்கிறது என்கிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications