Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

KPY பாலா கிரியேட் செய்த "பிராண்டு".. காந்தி கண்ணாடி லாபம் ரூ.5 கோடி.. புரிதல் இல்லாத மக்கள்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேபிஒய் பாலா மீது முன் வைக்கப்படும் விமர்சனங்களிலிருந்து அவர் வெளியே வரவேண்டுமானால், பாலாவிடம் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.. எப்போதுமே சிறு துரும்புகூட ஒரு மனிதனின் பொதுவாழ்க்கையை களங்கப்படுத்திவிடும்.. சனாதனத்தை அடித்து துவம்சம் செய்த கேரள பாடகன் வேடன், இன்று பாலியல் புகார்களில் சிக்கி காணாமலேயே போய்விட்டார். எனவே பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டால் திறந்த புத்தகமாக இருக்க வேண்டும்" என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் 2 நாட்களுக்கு முன்பு கருத்து கூறியிருந்தார். இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, பாலா குறித்து தன்னுடைய கருத்தையும் பதிவு செய்துள்ளார்.

Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "என்னுடைய வீடியோக்களை இன்ஸ்டாவில் பதிவிடுகிறேன், இன்ஸ்டாவில் போட்டால் வருமானம் வராது" என்கிறார் கேபிஒய் பாலா..

KPY Bala Gandhi Kannadi insta influencers

இன்ஸ்டா இன்புளூயன்ஸர்கள்

ஆனால், இன்ஸ்டா இன்புளூயன்ஸர்கள் என்று சிலர் உள்ளார்கள்.. பொருட்களை மார்க்கெட்டிங் செய்வது, நிகழ்ச்சிகளை புரமோட் செய்வது இதெல்லாம்தான் இதுபோன்ற இன்ஸ்டா இன்புளூயன்ஸர்களின் வேலையாகும்.. அதேபோல, ஆபத்தான ரீல்ஸ்களை எடுத்து பதிவிட்டு, அதன்மூலம் பிரபலமாவதை குறிக்கோளாக கொண்டவர்கள் இதுபோன்ற இன்ஸ்டா இன்புளூயன்ஸர்கள்.

இதில் பாலாவை பொறுத்தவரை, சைலண்ட்டாக தன்னை இன்ஸ்டாவில் பிரபலப்படுத்தி வருகிறார்.. செல்லும் இடமெல்லாம் பணம் தருகிறார்.. ஏன் பணம் தருகிறார்? யாருக்கு பணம் தருகிறார்? எதுக்கு பணம் தருகிறார்? உண்மையிலேயே அவர்கள் எல்லாம் பணத்தேவை உள்ளவர்கள்தானா? பயனாளிகளுக்கு அந்த பணம் முழுதாக தரப்படுகிறதா? அல்லது வீடியோ எடுத்ததும் அதிலிருந்து ஒரு தொகை திரும்ப பெறப்படுகிறதா? பின்னணி என்ன என்பதெல்லாம் நமக்கு உறுதியாக தெரியவில்லை.

இரும்புக்கடை வாகனங்கள்

ஆனால் மலிவான பப்ளிசிட்டிகளை பாலா தொடர்ந்து செய்கிறார்.. பிறருக்கு கொடுக்கப்பட்ட ஆம்புலன்ஸ்களும் FC செய்யப்படாமல் அதாவது ரோட்டில் ஓடுவதற்கே தகுதியில்லாததாக இருப்பதாக AramNaadu யூடியூப் சேனலில் ஆதாரங்களாக காட்டப்பட்டுள்ளன..

இரும்பு கடைக்கு போட்ட வாகனங்களை, பெயிண்ட் அடித்து தரப்பட்டதாகவும் ஆதாரங்களுடன் விளக்கப்பட்டுள்ளன.

இதே புகாரை ஏற்கனவே சொன்னதற்கு, பாலா உடனே மறுப்பு வீடியோ வெளியிட்டிருந்தார்.. அத்துடன் சர்ச்சையான ஆம்புலன்ஸ் எழுத்துக்கு தெளிவான விளக்கத்தையும் பாலா வெளியிட்டிருந்தார்.. ஆனால், இப்போது அவர் தந்த எல்லா ஆம்புலன்ஸ்களுமே போலியானவை என்று ஆதாரத்துடன் சொல்கிறார்கள்.. இதற்கு பாலா என்ன சொல்ல போகிறார்?

ஆம்புலன்ஸ் சர்வீஸில் உள்ளதா?

ஐசியூ வசதியுள்ள ஒரு ஆம்புலன்ஸை இன்று வாங்க வேண்டுமானால், 15 முதல் 20 லட்சங்கள் வரை ஆகும்.. ஆனால், பாலா வெறும் 20 ஆயிரத்தில் ஆம்புலன்ஸ் வாங்கி, 5, 10 ஆயிரத்தில் செலவு செய்து, அவைகளை பிறருக்கு தருகிறாராம்.. அப்படி தரப்படும் ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டில் உள்ளதா? சர்வீஸில் உள்ளதா? என்பதும் யாருக்கும் தெரியாது.

எனினும், ஆம்புலன்ஸ் தருவதால், பாலா பிரபலமாகிறார். இந்த பிரபலம் காரணமாக ஷோ-க்கள் அவருக்கு அதிகமாக கிடைக்கின்றன.. இதனால் அதிக பணம் கேட்டு தன்னை வளர்த்து கொள்கிறார்.. அதாவது, மக்களுக்கு உதவி செய்வதுபோன்ற பிராண்டை பாலா கிரியேட் செய்து, அதன்மூலம் பிரபலமாகி, மேலும் சம்பாதித்து கொள்கிறார் பாலா.. இதுதான் உண்மை.

இன்ஸ்ட்டாவில் பாலா போடும் வீடியோக்கள், யூடியூப்களில் எப்படி ஷார்ட்ஸ் ஆக வருகிறது? யூடியூப்களுக்கு எப்படி போகிறது? எனவே ஏதோ ஒரு விதத்தில் மறைமுகமாக விளம்பரப்படுத்தி, பிராண்டாக மாற்றி வருமானத்தை ஈட்டுகிறார் பாலா.. இது ஒருவகையான ஸ்கேம்.

பாலாவிடம் கேட்ட வாட்டர் பெட்

எனக்கு தெரிந்த பத்திரிகையாளர் ஒருவர், ஒரு வருடத்துக்கு முன்பு, உதவி கேட்டு பாலாவிடம் சென்றுள்ளார்.. ஏழை குடும்பத்தை சேர்ந்த வயதான நபர், படுக்கையிலேயே கிடந்து, உடம்பெல்லாம் புண் வந்துள்ளன.. இந்த புண்களை குணப்படுத்துவது கடினம்..

இதற்காக அந்த முதியவருக்கு வாட்டர் பெட் (Water Bed), சிகிச்சைக்கு பணம் வேண்டும் என்று பத்திரிகையாளர், பாலாவிடம் உதவி கேட்டுள்ளார். அதற்கு பாலா, "நான் கண்டிப்பாக உதவி செய்கிறேன், ஆனால் அதை வீடியோவாக எடுப்பேன்" என்று சொல்லி உள்ளார்.

புரிதல் இல்லாத மக்கள்

இதற்கு முதியவரின் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.. காரணம், உடம்பெல்லாம் புண்கள் இருந்ததால், டிரஸ்கூட போட முடியாமல் முதியவர் உள்ளபோது, அதை வீடியோவாக எடுத்தால் நன்றாக இருக்காது என்று சொல்லி, உதவியையும் மறுத்துவிட்டார்கள்.. இப்படி போகிற இடமெல்லாம், தான் செய்யும் எல்லா விஷயங்களையும் வீடியோவாக எடுத்துவிடுகிறார் பாலா.

ஆனால் மக்கள் புரிதல் இல்லாமல் உள்ளனர்.. பாலா நல்லதுதானே செய்கிறார்? நல்லது செய்பவருக்கு ஏன் எதிர்ப்பு காட்டவேண்டும்? கொள்ளையடித்தாலும் மக்களுக்குதானே தருகிறார் என்றெல்லாம் ஒருபக்கம் மட்டுமே பார்த்து சொல்கிறார்கள்.. குதிரைக்கு லாடம் கட்டினது போல இருக்கிறார்கள்.

உருவாக்கப்பட்ட பிராண்டு

மொத்தத்தில், இந்த 3 வருடங்களில், "பாலா உதவி செய்பவர், நல்லவர்" என்ற பிராண்டை சம்பாதித்து விட்டார். பாலா நடித்த காந்தி கண்ணாடி படத்தில் 5 கோடி லாபம் கிடைத்துள்ளது..
இந்த லாபம் எதனால் கிடைத்தது?

"பாலா நல்லவன், பாலா மக்களுக்கு உதவி செய்பவர், அதனால் அவரது படம் நல்லா இல்லையென்றாலும், படத்தை பார்க்க வேண்டும்" என்று பலரும் தியேட்டர்களுக்கு வந்து பார்த்தனர்.. இதனால் கிடைத்த லாபம்தான் அந்த 5 கோடி" என்று பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.

கேபிஒய் பாலாவுக்கு நாளுக்கு நாள் ஆதரவும், எதிர்ப்பும் என மாறி மாறி எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் சோஷியல் மீடியாவில் சூடுபிடித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+