5 ஆண்டு கால கனவு நனவாகிடுச்சி! மகிழ்ச்சியில் குக் வித் கோமாளி பாலா! வண்டி, பெட்ரோல் இலவசமாம்!
சென்னை: கலக்க போவது யாரு புகழ் பாலா கடந்த 5 ஆண்டு கால கனவை நனவாக்கிய மகிழ்ச்சியில் இருக்கிறார். அப்படி என்ன கனவு , எதற்காக இத்தனை மகிழ்ச்சி என்பதை பார்ப்போம்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாலா. இவர் தனது மெனக்கெடல் மூலம் காமெடியில் கலக்கி வருகிறார். இவர் சில படங்களிலும் நடித்திருந்தார். குக் வித் கோமாளி சீசன் 3 லும் வந்த அவரை 4ஆவது சீசனில் காணவில்லை.

தற்போது சில ஷோக்களை ஆங்கரிங் செய்து வருகிறார். இவரை காமெடி செய்யும் நபராகவே பலருக்கு தெரியும். ஆனால் இவர் தான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு அறக்கட்டளையை வைத்து அதில் நிறைய பேருக்கு உதவி வருகிறார்.
இவரும் இவரது நண்பர்களும் சேர்ந்து இந்த அறக்கட்டளையை நடத்தி வருகிறார்கள். கலக்க போவது யாரு நிகழ்ச்சியை விட குக் வித் கோமாளி நிகழ்ச்சி பாலாவுக்கு பெரும் அங்கீகாரத்தை கொடுத்தது. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் ஒருவருக்கு ஆம்புலன்ஸ வாகனம் வழங்குகிறார்.
அவர் தனது இன்ஸ்டாவில் கூறுகையில் என்னுடைய 5 ஆண்டு கனவு தற்போது நனவாகிடுச்சி. எப்புடியாவது முதியோர் இல்லத்துல இருக்கிற பெரியவங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி குடுக்கணும்னு நெனச்சேன். ஆனால் என் கிட்ட காசு இல்ல. ரொம்ப நாளா காசு சேர்த்து வெச்சி எப்புடியோ சொந்த காசுல ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துட்டேன்.
பெரியவங்க ஆட்டோல செக்கப்புக்கு ஆஸ்பத்திரிக்கு போக வேண்டாம். ஆம்புலன்ஸில் போகலாம். அது மட்டும் இல்லாம ஹோமுக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் யாருக்கு அவசரம் என்றாலும் இந்த ஆம்புலன்ஸ் இலவசம். அதுக்கு பெட்ரோலையும் நான் இலவசமாகவே கொடுத்துடறேன். அனைவருக்கும் மிக்க நன்றி.
என் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி. உங்க எல்லாருடைய ஆதரவுலதான் என் கனவ சாதிக்க முடிஞ்சது லவ் யூ என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. குறைந்த ஊதியம் பெற்றாலும் உதவ வேண்டும் என்ற மனசு இருக்கே அதுதான் சார் கடவுள் என பாலாவை பாராட்டி வருகிறார்கள்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications