ஊருக்கு ஓடி ஓடி உதவி செஞ்சதால் இப்படி ஒரு பிரச்சனையா? காதலி குறித்து மனம் திறந்த பாலா
சென்னை: விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த பாலா சமீபத்தில் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் தான் சம்பாதிக்கும் பணத்தில் தன்னால் முடிந்த அளவிற்கு பலருக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பாலா பேசிக் கொண்டிருக்கையில் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் விரைவில் தனக்கு திருமணம் இருக்கும் என்றும் பேசி இருக்கிறார்.
அதே நேரத்தில் பாலா காதலிக்கும் பெண் வீட்டில் பாலாவிற்கு அந்த பெண்ணை திருமணம் செய்து கொடுப்பதற்கு யோசிப்பதாகவும், அதற்கு காரணம் பாலா செய்து கொண்டிருக்கும் உதவிகள் தான் என்றும் கூறப்படுகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் ஒரு சிலருக்கு தான் உதவும் மனப்பான்மை எளிமையாக வந்துவிடும். அந்த வகையில் ஒருவர் தான் நடிகர் பாலா. இவர் ஆரம்பத்தில் தனக்கு தெரிந்தவர்களுக்கு சின்ன சின்ன உதவிகள் செய்து வந்த நிலையில் அதை எல்லோரும் பாராட்டி வந்தனர். அதே நேரத்தில் தான் உதவி செய்வதால் சிலர் படும் சந்தோஷத்தை பார்த்து அதில் கவர்ந்த பாலா தொடர்ச்சியாக உதவிகள் செய்ய தொடங்கி விட்டார்.
ஆரம்பத்தில் ஒரு சிலருக்கு உதவி செய்து வந்த பாலா இப்போது பலருக்கு உதவி செய்து வருகிறார். அதே நேரத்தில் தான் செய்யும் உதவிகள் வெளிப்படையாகவே செய்து வருகிறார். இதனாலையே பலர் அவரை பாராட்டி வந்தாலும் சிலர் அவரை தவறாகவும் பேசி வருகிறார்கள். தான் செய்யும் செயலை எதற்காக பாலா விளம்பரப்படுத்துகிறார்?
இப்படி தான் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் ஊருக்கு தான தர்மம் கொடுத்துவிட்டால் இவருக்கு வாய்ப்பு இல்லாத போது கஷ்டப்பட வேண்டியது இருக்கும் என்பது படருடைய கருத்தாகவும் இருக்கிறது. ஆனால் அதைப் பற்றி கண்டுகொள்ளாத பாலா தன்னுடைய வேலையில் கவனமாக இருந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பாலா தான் ஒரு பெண்ணை காதலித்துக் கொண்டிருப்பதாகவும் வீட்டில் கொஞ்சம் பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது அது சரியானதும் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என்றும் கூறி இருக்கிறார்.
இது குறித்து வெளியான தகவலில் பாலா தான் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் ஊருக்கு தான தர்மம் செய்து விடுவதால் அவர் காதலிக்கும் பெண் வீட்டார் இது பற்றி யோசிக்கிறார்களாம். அதுவும் ஆரம்பத்தில் அந்த பெண் வீட்டில் திருமணத்திற்கு சம்மதம் சொன்னபோது ஒரு சிலர் அவர்களிடம் இவருக்கு இப்போது வாய்ப்பு இருக்கிறது அதனால் பணம் கிடைக்கிறது...
சில நேரங்களில் சில வருடங்கள் கழித்து அவருக்கு வாய்ப்பு இல்லாமல் போகும்போது அவருக்கு கையில் எதுவும் இல்லாமல் போய்விடும். அப்போது உங்க பொண்ணு தான் கஷ்டப்பட போறார் என்று சொல்லி கொடுத்ததாலோ என்னவோ பாலா காதலிக்கும் பெண்ணின் வீட்டில் இவர்களுடைய திருமணத்திற்கு இப்போது சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் பாலா தன்னுடைய பெற்றோரை எப்படி தான் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதற்காக சம்மதிக்க வைத்தாரோ அதுபோல அந்த பெண்ணின் வீட்டிலும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். பாலாவுக்கு ஆதரவாக பல பிரபலங்களும் அந்த பெண் வீட்டில் பேசிக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. எது எப்படியோ சீக்கிரமாக பிரச்சனைகள் இன்றி பாலா அந்த பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. பலருக்கு உதவி செய்யும் ஒருவருக்கு இப்படி எல்லாமா? பிரச்சனை வரவேண்டும் என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications