12 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு! இந்த நாள் வந்துவிட்டது! கேபிஒய் சரத் போட்ட போஸ்ட்!
சென்னை: விஜய் டிவியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த சரத், தற்போது புதிய வீட்டை கட்டி புதுமனை புகுவிழா நடத்தியுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சிவகார்த்திகேயன், மணிகண்டன் உள்ளிட்டோர் சினிமாவுக்கு வந்தனர். அந்த வகையில் புகழ், தீனா உள்ளிட்டோரும் சினிமாவில் நடித்து வருகிறார்கள்.

கலக்க போவது யாரு நிகழ்ச்சிக்கு பிறகு குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் காமெடியில் கலக்கி வருகிறார்கள். இந்த நிலையில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் மொட்டை ராஜேந்திரன் கெட்டப் போட்டு அவரை போல் மிமிக்ரி செய்தவர் சரத்.
கிட்டதட்ட மொட்டை ராஜேந்திரனை போலவே சரத் இருப்பார். அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இவர் தனியார் யூடியூப் சேனலையும் நடத்தி அதில் வீடியோக்களை போட்டு வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 12 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்து வைத்த பணத்தில் சென்னையில் சரத் சொந்தமாக ஒரு வீடு கட்டி குடிபோயுள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: நீண்ட நாள் கனவு நிறைவேறியது. சென்னையில் வீடு வாங்குவது 12 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு ஒரு இடத்தை எங்கள் வீடு என அழைக்கும் நாள் வந்துவிட்டது.
அனைவருக்கும் நன்றி. இதற்கு உருதுணையாக இருந்த எனது மனைவி கிருத்திகாவுக்கும் ரொம்ப நன்றி. ஐ லவ் யூ மா என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் கலக்கி வருகின்றன.
அவருக்கு காமெடி நடிகர் தங்கதுரையும் திவ்யா துரைசாமியும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். புது வீட்டில் பால் காய்ச்சிய புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். இவர்கள் இருவரும் மிஸ்டர் அன்ட் மிஸ்டர்ஸ் சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர்கள் ஆவர்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications